ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
348. ஸ்ரீ ஜனேஶ்வராய நம:
க3வாதி3க3ள உத்பாத3கனு பரமைக ஈஶ
ஸ்ரீ வரனே நீனேவெ ஸ்வாமி நினகெ3 இல்ல
தே3வதே3வோத்தம ‘ஜனேஶ்வரனே’ நமோ நினகெ3
ஸர்வதா3 மஹைஶ்வர்யபூர்ண ஸர்வோத்தமனே ஸ்ரீஶ
பசு போன்ற மிருகங்களை படைப்பவனே; ஸர்வோத்தமனே; ஸ்ரீவரனே;
நீயே ஸ்வாமி, உனக்கு மேல் வேறு யாரும் இல்லை. ஜனேஸ்வரனே உனக்கு என் நமஸ்காரங்கள். எப்போதும்
மஹைஸ்வர்ய பூர்ணனே. ஸர்வோத்தமனே. ஸ்ரீலட்சுமிதேவியின் தலைவனே.
349. ஸ்ரீ அனுகூலாய நம:
தே3வ நர மொத3லாத3 ஸர்வ ப்ராணிக3ளந்தஸ்த2
ஸ்ரீவரனே நீனு ஸர்வாந்தர் நியாமகனாத்3த3ரிம்
ஸர்வத்ர அனுகூல மாடி3 மோதி3ஸுவி ‘அனுகூல’
ஆஹ்வயனே நமோ மஹைஶ்வர்ய உதா3ரகருணி
தேவ, நர என அனைத்து பிராணிகளிலும் அந்தர்யாமியாக இருப்பவனே,
ஸ்ரீவரனே, நீ அனைவரின் நியாமகன் ஆகையால், அனைவரையும் சாதனைக்கான வழிகளை செய்து கொடுக்கிறாய்.
அனுகூலனே. உனக்கு என் நமஸ்காரங்கள். மிகச் சிறந்த செல்வங்களை கொண்டிருப்பவனே. கருணைக்கடலே.
350. ஸ்ரீ ஶதாவர்தாய நம:
அபஸித்3தா4ந்தரத து3ஷ்டஜன வர்ஜிதனாத3
ஸ்ரீபதி ‘ஶதாவர்தனே’ நமோ ஶதமோத3 ஸேவ்ய
ஸுபுண்ய அம்ருதாந்த4ஸரிந்த3 க்ரியா ப்ரவர்த்திஸெ
தப்பதெ3 ஆ தத்வேஶரிகெ3 அனுக்3ரஹ மாடு3வி
அப ஸித்தாந்தங்களை பின்பற்றும் துஷ்ட ஜனர்களுக்கு கிடைக்காதவனே;
ஸ்ரீபதியே, ஸதாவர்தனே. உனக்கு என் நமஸ்காரங்கள். ஆனந்த மயனே. முக்தி யோக்யர்கள் மூலமாக
செயல்களை செய்வித்து, தவறாமல் அவர்களுக்கு அருள்பவனே.
***
No comments:
Post a Comment