ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
318. ஸ்ரீ நஹுஷாய நம:
ப3ந்த4 தூ4ர அட்டுவி ப4க்தரிகெ3 ‘நஹுஷ’ நமோ
ப3ந்த4தி3 பி3கி3வி நீ தை3த்ய து3ஷ்ட ஜனரன்னு
ப3ந்த4க்கெ ப்ராத2மிக காரண நின்னிச்சா ப்ரக்ருதியு
த்ரிகு3ணவு நின்னிந்த3 நியம்ய ப3ந்த4கெ காரண
பக்தர்களுக்கு வந்த கஷ்டங்களை பரிகரிப்பாய் ‘நஹுஷனே’ உனக்கு என்
நமஸ்காரங்கள். தைத்ய துஷ்டர்களை நீ பந்தங்களிலிருந்து விடுவிப்பாய். பந்தத்திற்கு
(சம்சாரத்திற்கு) வருவது என்பது அனைத்தும் உன்னுடைய இச்சையினாலேயே நடக்கிறது. இந்த
ப்ரக்ருதி, மூன்று குணங்கள் என அனைத்தும் உன்னாலேயே. நீயே பந்தனத்திற்கு காரணம் ஆகிறாய்.
319. ஸ்ரீ வ்ருஷாய நம:
ப4க்தஜனரிஷ்டவனு வர்ஷிஸுவ ‘வ்ருஷ’ நமோ
வேதோ3பதே3ஶவோ வேதா3ர்த்த2 நிர்ணயாதி3 போ4த3வோ
வித்ததா3ராபத்ய ஸுஹ்ருஜ்ஜன ஆயுராரோக்3யவோ
கோ3தா4ன்ய தனப4க்திக்ஞான வ்ருத்3தி4வர்ஷிஸுவி நீ
பக்தர்களின் இஷ்டார்த்தங்களை மழை போய் பொழியச் செய்யும்
‘வ்ருஷனே’ உனக்கு என்
நமஸ்காரங்கள். வேத உபதேசமோ, வேதார்த்தங்களின் நிர்ணயம் ஆகியவற்றை போதிப்பதோ, சஜ்ஜனர்களின்
ஆயுள் ஆரோக்யமோ, பசு, செல்வம், பக்தி, ஞானம், ஆகிய அனைத்தையும் வளர்ப்பவன் நீயே.
320. ஸ்ரீ க்ரோத3க்4னே நம:
க்ரோத3தி3ந்த3 ஶத்ருக3ள ஸம்ஹரிஸுவி ‘க்ரோத3:’
ஆத3ரதி3 நமோ குந்ருபஹர பரஶுராம
க்ரோதி3 ஶத்ருக3ளு ப்ரயோகி3ஸுவ க்ரோத3வன்னேவெ
எது3ரு மாடி3 கொல்லுவி ஸர்வஶக்த நீ நிர்தோ3ஶ
விரோதத்துடன் எதிரிகளை சம்ஹரிக்கிறாய். க்ரோதனே உனக்கு
என் நமஸ்காரங்கள். கெட்டவர்களின் எதிரியான பரஶுராமனே.
எதிரிகள் பயன்படுத்தும் க்ரோதத்தை எதிர்த்து அவர்களை கொல்பவனே. ஸர்வஶக்தனே. உன்னிடம் எவ்வித தோஷங்களும் இல்லை.
***
No comments:
Post a Comment