ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
324. ஸ்ரீ மஹீத4ராய நம:
பு3த்3தி4மந்த வத்ஸ ரிஷியன்ன ப்ரகாஶ மாடு3வ
‘மஹீத4ரனே’ நமோ நினகெ3 பூ4மிகெ3 ஆதா4ர
கீ3தெயலி ப4க3வந்த ஹேளிதி3 ‘காமாவிஶ்வாச
பூ4தானி தா4ரயாமி அஹம் ஓஜஸா’ ஹீகெ3 எந்து3
அறிஞர்களான, ஞானிகளான ரிஷிகளை நீ மேலும் அறிஞர்கள்
ஆக்குகிறாய் ‘மஹீதரனே’
உனக்கு என் நமஸ்காரங்கள். பூமிக்கு ஆதாரமான பகவத்கீதையில் நீயே இவ்வாறு
கூறினாய். அனைத்து பூதங்களுக்கும் (ஜீவர்களுக்கும்) நானே ஒளியை தருகிறேன் - என்றாய்.
325. ஸ்ரீ அச்யுதாய நம:
ச்யுதி இல்லத3வனு ‘அச்யுதனே’ நமோ நினகெ3
வ்ருததிஜாஸன ஶேஷஶிவ ஶக்ராதி3 அமர
ரந்த3தி3 ப்ராக்ருத தே3ஹவில்லதெ3 கேவல ஞானா
நந்தா3தி3 கல்யாணதம அப்ராக்ருத விக்3ரஹனு
அழிவு இல்லாதவனே ‘அச்யுதனே’ உனக்கு என்
நமஸ்காரங்கள். கருட, ஶேஶ, ருத்ரர், இந்திராதி தேவர்களைப்
போல ப்ராக்ருத தேகம் இல்லாமல், வெறும் ஞானானந்தாதி கல்யாணகுண பரிபூர்ண அப்ராக்ருதமான
தேகம் கொண்டவன் நீ.
326. ஸ்ரீ ப்ரதி2தாய நம:
ப்ரக்2யாத ஸுப்ரஸித்3த4 ‘ப்ரதித’ நமோ எம்பெ3
அகளங்க வேதே3திஹாஸ புராணாதி3 ஸச்சாஸ்திர
ஆக3மதி3 ஆதி3மத்யாந்த கீர்த்திஸல்படு3வந்த2
ரகு4ராம தே3வகீஸுத ஸ்ரீபதி வேத3வ்யாஸ
அனைத்து உலகங்களிலும் புகழ் பெற்றவன் ‘ப்ரதிதனே’ உனக்கு என்
நமஸ்காரங்கள். எவ்வித குறைகளும் இல்லாத வேத, இதிகாச, புராணாதி, நற்சாஸ்திர, ஆகமங்களில்,
அதன் துவக்கங்களில், நடுவில், இறுதியில் என அனைத்து பாகங்களிலும் புகழப்படுபவன் நீயே.
ரகுராமன். தேவகிஸுதனான ஸ்ரீகிருஷ்ணன். ஸ்ரீலட்சுமிதேவியின் கணவன். வேதவ்யாஸன்.
***
No comments:
Post a Comment