Tuesday, April 5, 2022

ஸ்லோகம் #42: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ

ஸ்லோகம் #42: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ

இயற்றியவர்: ஸ்ரீவித்யாபிரஸன்ன தீர்த்தர்

தமிழில் உரை: ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

[ஸ்லோகம் 42]

ஈஷணத3னு நோடி33ரு 33னதி3 பூ4ஸுரரு ப்ரவசனத3 ஸமயதி3

சேஷ தெரளித3 தன்ன 4வனகெ முனிஜனர ஸஹித |

பா4ஷ்ய ப்ரவசனதி3ந்த3 லாப4விசேஷ வேனெம்பு33னு கேளலு

சேஷ யுகுதிய விவரிஸித3 ஸனகாதி3 ஸஹஜரிகெ ||42 

ப்ரவசன ஸமயதி - பிரவசன சமயத்தில்; பூஸுரரு - தேவதைகள்; ககனதி - வானத்தில்; ஈஷணதனு நோடிதரு - மிகப்பெரிய ஒளியை பார்த்தனர்; சேஷ - சேஷதேவர்; தன்ன பவனகெ - தன் இருப்பிடத்திற்கு; முனிஜனர ஸஹித - முனிவர்களுடன்; தெரளித - சென்றான்; பாஷ்ய ப்ரவசனதிந்த - பாஷ்ய பிரவசனத்தினால்; லாபவிசேஷ - பலன் / சிறப்பு; ஏனு எம்புதனு கேளு - என்ன என்று கேட்க; சேஷ - சேஷதேவர்; ஸனகாதி ஸஹஜரிகெ - சனகாதி முனிவர்களுக்கு; யுகுதிய விவரிஸித - அதனை விவரித்தான். 

மத்வ பிரவசனத்தை கேட்கும் பலனை சேஷதேவர் விவரிக்கும் அழகினை இந்த ஸ்லோகத்தில் விவரிக்கிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர். 

பிரவசன சமயத்தில், வானத்தில் சிஷ்யர்கள் மிகப்பெரிய ஒளியை பார்த்தனர். சேஷதேவர் தன் இருப்பிடத்திற்கு முனிவர்களுடன் திரும்பிச் சென்றார். பாஷ்ய பிரவசனத்தினால் என்ன பலன் / சிறப்பு என்று அனைவரும் கேட்க, சேஷதேவர், சனகாதி முனிவர்களுக்கு அதனை விவரிக்கிறான். 

மத்வ விஜய பதினோறாம் சர்க்க ஸாரம் இந்த ஸ்லோகத்திலும் தொடர்கிறது. 

அதிகாரிணாம் பலமலம் விதுஷாம் பவதி ப்ரவ்ருத்திரதி வீர்யவதீ |

இதி தத்பலம் ஸபல ஸங்கதனோ பகவான் ப்ர பஞ்சயது பூரிதய: ||11-4 

மத்வ சாஸ்திரங்களை சேஷதேவர் நன்றாக அறிந்திருந்ததால், சனகாதி முனிவர்கள் அவரிடம், மத்வரின் பிரம்மசூத்ர பாஷ்யத்தைக் கேட்பதன் பலன்களை சொல்லுமாறு கேட்டனர். 

த்ரிதிவாதி லப்யமபி நாஸ்ய பலம் கதிதம் க்ருஷேரிவா பலால குலம் |

ஸ்வ பலம் து முக்தி பதமுக்தி பதம் ஸுக ஷாரதாதி பரமார்த்த விதாம் || 11-6 

அதற்கு சேஷதேவர், விவசாயம் செய்பவனுக்கு தானியம் எப்படி முக்கிய பலனோ, அப்படி மத்வ சாஸ்திரங்களைக் கேட்பவனுக்கு சுகாசார்யர், சரஸ்வதி தேவி ஆகியோரால் வர்ணிக்கப்பட்ட மோட்சமே முக்கிய பலன்என்றார். தானியத்துடன் புல், பூண்டு என தேவையற்றவையும் வளர்வது போல, மத்வ சாஸ்திரங்களைக் கேட்பதால், மோட்ச பலனுடன், ஸ்வர்க்காதி பலன்கள், லௌகிக சுகங்கள், செல்வங்கள் ஆகியனவும் கிடைக்கின்றன என்று பொருள். 

மத்வ சாஸ்திரங்களை கேட்கும் பலன்களை அடுத்த ஸ்லோகத்திலும் தொடர்கிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர். 

***


No comments:

Post a Comment