Tuesday, April 19, 2022

ஸ்லோகம் #56: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ

ஸ்லோகம் #56: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ

இயற்றியவர்: ஸ்ரீவித்யாபிரஸன்ன தீர்த்தர்

தமிழில் உரை: ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

[ஸ்லோகம் 56]

ஸ்னானமாடி3 தடாகத3லி ஷுசி மானஸத3 மந்தி3ரதி3 ஸ்ரீஷகெ3

ஸானுராக3தி3 பா4வகுஸுமக3ளர்ப்பிஸுத முத3தி3 |

ப்ராணபதி ஹரிகர்ப்பிஸித3 பரமான்னவனு பு4ஞ்சிஸுதலீபரி

ஸ்னானஜபதப ப்ரவசனக3ளிம் காலவனு களெது3 ||56 

தடாகதலி - தடாகத்தில்; ஸ்னானமாடி - ஸ்னானம் செய்து; ஷுசி மானஸத மந்திரதி - தூய்மையான தனது இதயக் கோயிலில்; ஸானுராகதி - மிகவும் பக்தியுடன்; பாவகுஸுமகள - எட்டு வித பாவபுஷ்பங்களை; அர்ப்பிஸுத - அர்ப்பித்தவாறு; முததி - மகிழ்ச்சியுடன்; பிராணபதி - முக்யபிராணர்; ஹரிகர்ப்பிஸித - ஸ்ரீஹரிக்கு அர்ப்பிதமான; பரமான்னவனு - பரமான்னத்தை; புஞ்சிஸுதலு - உண்டார்; ஈபரி - இப்படியாக; ஸ்னானஜபதப பிரவசனகளிம் - ஸ்னான, ஜப, தப, பிரவசனங்களால் - காலவனு களெது - காலத்தை கழித்து வந்தார். 

ஸ்ரீமதாசார்யரின் காலை நேர ஆன்ஹிகங்களை அடுத்த ஸ்லோகத்திலும் தொடர்ந்து விளக்குகிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர். 

தடாகத்தில் ஸ்னானம் செய்து, தூய்மையான தனது இதயக் கோயிலில், மிகவும் பக்தியுடன், எட்டு வித பாவபுஷ்பங்களை அர்ப்பித்தவாறு, மகிழ்ச்சியுடன், முக்யபிராணர் மற்றும் ஸ்ரீஹரிக்கு அர்ப்பிதமான பரமான்னத்தை உண்டார். இப்படியாக, ஸ்னான, ஜப, தப, பிரவசனங்களால், காலத்தை கழித்து வந்தார். 

மத்வ விஜய ஸ்லோகம் 14-26லிருந்து வரும் விஷயங்களையே இந்த ஸ்லோகம் விளக்கியுள்ளது. 

அத தஷ ஷத ஷோசிஷ்யாப்ரயாதி ப்ரதீச்யாம்

ப்ரவசனமவஸாய ஸ்னாதுமாயாத் தடாகம் |

ப்ருதுமதிரிஹ தாலச்ஸ்ரேஷ்ட ஸம்ஸர்க்க லோலை:

ஸமகமி ஸபதி ஸ்வர் நிம்ரகாத்யைஸ்ச தீர்த்தை: ||14-26 

சூரியன் மேற்கு நோக்கி நகரும்போது, ஸ்ரீமதாசார்யர் அன்றைய பிரவசனத்தை முடித்து, மாத்யான்ஹிகத்திற்காக குளத்திற்கு சென்றார். உத்தமர்களின் சம்பந்தத்தைப் பெற்று பவித்ரமாவதற்கு, கங்காதி தீர்த்தங்களின் அபிமானி தேவதைகள் அங்கு வந்தனர். 

கன ரஸ நிகரோsஸாவந்தரத்யந்த ஷுத்தோ

முனிகண இப பூய: ஸ்னேஹவான் ப்ராக் ததான: |

ப்ரதி க்ருதிமகில ஞஸ்யாsபரோக்ஷ்யேண தாவத்

ஸ்புடமலபத ரூபம் மஜ்ஜனே ஸஜ்ஜனேஷ்டம் || 14-27 

தடாகத்தின் தூய்மையான, ஸ்படிகம் போன்ற நீரில் ஸ்ரீமதாசார்யரின் பிம்பம் நன்கு பிரதிபலித்தது. பின்னர், அவர் தடாகத்தில் ஸ்னானம் செய்யும்போது அவர் மயமாகவே ஆனது. இது எப்படி இருந்தது என்றால், தூய்மையான மனதுடனும், அனன்ய பக்தியுடனும் பரமாத்மாவை நினைத்து தியானம் செய்யும் சன்யாசிகள், முதலில் பகவானது பிம்பத்தை மனதில் நிலை நிறுத்திக் கொள்வார்கள். பின்னர் இறுதியாக பரமாத்மாவை நேரடியாக தரிசனம் செய்து அவர் மயமாகவே ஆகி விடுவார்கள். அதாவது, அவரது சாக்ஷாத்காரத்தை அவர்களும் பெற்று விடுவார்கள். 

தமருணமணிவர்ணம் திவ்ய தேஹாக்ய கேஹே

ஸ்னபிதமதி ப்ருது ஸ்ரத்தா நதீசித்த வார்ப்பி: |

நனு யஜதி நித்யம் ஹ்ருத் ஸரோஜாஸன ஸ்தம்

து ஸக்ருதிதி புஷ்பைரஷ்டபிர் பாவ புஷ்பை: ||14-37 

ஆசார்யர் நீர் நிரம்பிய சங்கிலிருந்து அபிஷேகம் செய்தார். பின்னர் சிறந்ததான கந்த, அக்ஷதைகளை எடுத்து, லட்சுமி ஸ்வரூபமான பூக்களுடன் ஸ்ரீஹரியை பூஜித்தார். ஸ்ரீஹரிக்கு 16விதமான பூஜைகளை செய்தார். எப்போதும் ஸ்ரீஹரியையே காணும் ஏகாந்த பக்தரான ஸ்ரீமதாசார்யர், எட்டு வித பாவ-புஷ்பங்களினால் பூஜித்தார். ஆசார்யரின் திடமான பக்திக்கு ஸ்ரீஹரி மனமிரங்கி, சஹபோகத்தையே முந்தைய ஹனும அவதாரத்தில் அளித்தான் என்பது நினைவு கூறத்தக்கது. 

எட்டு வித பாவபுஷ்பங்களாவன: அகிம்சை, இந்திரிய நிக்ரஹம், அனைவரிடமும் கருணை, சகிப்புத்தன்மை, ஞானம், தவம், தியானம் மற்றும் ஸத்யம். 

பரமத பரமான்னம் ப்ராப்தமேவா ப்ரயாஸம்

ப்ரபுரிஹ புபுஜேsஸௌ வேத வாத ப்ரவீண: |

அஜித பரமபக்த: ஸந்ததம் மன்யமான:

ஸகல ஜகததீஷ: ப்ரீயதாம் ஷௌரிரித்தம் || (14-39) 

போஜனத்திற்கு முன்அனைத்து உலகிற்கும் நியாமகனான, சர்வஸ்வாமியான ஸ்ரீகிருஷ்ணன் மகிழட்டும்என்று பரமபக்தரான ஸ்ரீமதாசார்யர் தியானித்தார் என்று தெரிவிக்கிறார் பண்டிதர். 

இத்துடன் மத்வ விஜய பதினான்காம் சர்க்க விஷயம் முடிந்து, அடுத்த ஸ்லோகத்தில், பதினைந்தாம் சர்க்க ஸாரமான ஸ்ரீமதாசார்யரின் உபன்யாஸ விஷயத்தை விவரிக்கிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர். 

***

 

No comments:

Post a Comment