Thursday, April 21, 2022

ஸ்லோகம் #58: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ

ஸ்லோகம் #58: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ

இயற்றியவர்: ஸ்ரீவித்யாபிரஸன்ன தீர்த்தர்

தமிழில் உரை: ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

[ஸ்லோகம் 58]

வாத3ஸரணியு முந்த3ரிது3 ஹதி3னைது3 தினக3ளு களெத3வீதனு

வாத3தல்லீடா3டி33 மஹாயுகுதியஸ்த்ரக3 |

மோத3தீர்த்த2ரு ஸதெ3 3டி33ரு வேத3யுகுதிக3ளிந்த3லாக்ஷண

பாத3கெரகு3 விக்ரமார்யனு பே3டி33னு தா3ஸ்ய ||58 

வாதஸரணியு - வாக்குவாதமானது; முந்தரிது - முன் நடந்து; ஹதினைது தினகளு - 15 நாட்கள்; களெத - செய்தார்; ஈதனு - த்ரிவிக்ரம பண்டிதாசார்யர்; வாததல்லி - வாதத்தில்; ஈடாடித - பேசிய; மஹாயுகுதியஸ்த்ரகள - அஸ்திரங்களைப் போன்றதான அவரது யுக்திகளை; மோததீர்த்தரு - ஸ்ரீமதாசார்யர்; வேதயுக்திகளிந்த - வேத மந்திரங்களை பயன்படுத்தி; ஆக்ஷண - அதே நொடியில்; ஸதெய படிதரு - அவரை வென்றார்; விக்ரமார்யனு - த்ரிவிக்ரம பண்டிதாசார்யர்; பாதகெரகுத - பாதத்தில் விழுந்தவாறு; தாஸ்ய - தன்னுடைய தாஸ்யத்தை; பேடிதனு - வேண்டினார். 

த்ரிவிக்ர பண்டிதாசார்யர், ஸ்ரீமதாசார்யருடன் செய்த வாதத்தை இந்த ஸ்லோகத்தில் விவரிக்கிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர். 

வாக்குவாதமானது அடுத்த 15 நாட்கள் நடந்தன. த்ரிவிக்ரம பண்டிதாசார்யர், தனது வாதத்தில் பேசிய, அஸ்திரங்களைப் போன்றதான அவரது யுக்திகளை, ஸ்ரீமதாசார்யர், வேத மந்திரங்களை பயன்படுத்தி, அதே நொடியில், அவரை வென்றார். த்ரிவிக்ரம பண்டிதாசார்யர் ஆசார்யரின் பாதங்களில் விழுந்தவாறு, தன்னுடைய தாஸ்யங்களை வேண்டினார். 

த்ரிவிக்ர பண்டிதாசார்யர், ஸ்ரீமதாசார்யருடன் செய்த வாத விஷயம், மத்வ விஜயத்தில் 15-64 ஸ்லோகம் முதல் வர்ணிக்கப்பட்டுள்ளது. 

இப்படி பூர்ணப்ரக்ஞரால் விவரிக்கப்பட்ட, ஆதாரங்களுடனான சொற்பொழிவை த்ரிவிக்ரம பண்டிதர் கேட்டார். அறிஞரான பண்டிதர், ஸ்ரீமதாசார்யரின் சித்தாந்தத்தை எதிர்த்து பல வாதங்களை புரிந்தார். ஸ்ரீபூர்ணப்ரக்ஞர் அனாயாசமாக சிரித்தவாறு அவற்றைக் கண்டித்து நிராகரித்து தம் சித்தாந்தத்தை நிரூபித்தார். அடுத்து பண்டிதர், ஆசார்யரின் ஒவ்வொரு வாக்கியத்திற்கும் எதிராக வேதவாக்கியங்கள் என்னும் அஸ்திரங்களை பிரயோகிக்கத் தொடங்கினார். 

சப்தாஷ்டானி தினான்யேவம் வாதம் க்ருத்வா சஹாமுனா |

நிருத்தரம் தம் நிஷ்சோத்யம் சக்ரே சக்ராயுத ப்ரிய: || (15-69) 

சாமான்யரால் பதிலளிக்கமுடியாத கேள்விகளுக்கு, ஸ்ரீமதாசார்யர் மேலும் சிறந்த வேத வாக்கியங்களினால் பதிலளித்து பண்டிதரின் வாதங்களைக் கண்டித்தார். இப்படி த்ரிவிக்ரம பண்டிதருடன் 15 நாட்கள் தத்வ நிர்ணயத்திற்காக வாதம் செய்தார். த்ரிவிக்ரம பண்டிதர் வாயடைத்துப் போனார். இரு சஜ்ஜனர்களுக்கிடையே நடந்த வாதம் இப்படியாக இருந்தது. அவரின் சந்தேகங்கள் தீர்ந்தன. தோற்றதை ஒப்புக்கொண்டார். உத்தம ஜீவிகளான பண்டிதர், ஆசார்யரிடம்க்ஷம்யதாம்என்று மன்னிப்பு கேட்டார். 

பிரணம்யாsசஷ்ட சிஷ்டோsஸௌ க்ஷம்யதாம் நாத சாபலம் |

பதபத்ம ரஜோ தாஸ்யம் த்ருவம் மே தீயதாமிதி || 15-70 

தங்கள் சரணங்களில் விழுந்தேன். என்னை காப்பாற்றுங்கள்என்று வேண்டினார். 

ஸ்ரீமதாசார்யரின் ஆணைக்கேற்ப, த்ரிவிக்ரம பண்டிதாசார்யர், தத்வபிரதீப கிரந்தத்தை இயற்றும் விஷயத்தை அடுத்த ஸ்லோகத்தில் விளக்குகிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர். 

***

 

No comments:

Post a Comment