Monday, April 18, 2022

ஸ்லோகம் #55: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ

ஸ்லோகம் #55: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ

இயற்றியவர்: ஸ்ரீவித்யாபிரஸன்ன தீர்த்தர்

தமிழில் உரை: ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

[ஸ்லோகம் 55]

அருணனுத3யத3லெத்து3 கு3ருக3ளு ஹருஷமானஸதி3ந்த3 ஸ்ரீஷன

சரணகமலவ சிந்திஸுத ஸந்ததவு |

ஸரிவ ஸூர்யனு பஷ்சிமகெ தா மரெய பொந்து3வதனக கர்மவ

பரிபரியிம் சரிஸுத தாவனுதி3 ||55 

குருகளு - ஸ்ரீமதாசார்யர்; அருணனுதயதலெத்து - அருணோதய காலத்தில் எழுந்து; ஹருஷமானஸதிந்த - மகிழ்ச்சியான மனதுடன்; ஸ்ரீஷன - ஸ்ரீமன் நாராயணனின்; சரணகமலவ - பாத கமலங்களை; ஸந்ததவு - எப்போதும்; சிந்திஸுத - சிந்தித்தவாறு; ஸூர்யனு - சூரியன்; பஷ்சிமகெ - மேற்கில்; ஸரிவ - நகர்ந்து; மரெய பொந்துவதனக - மறையும் வரை ; தா - ஸ்ரீமதாசார்யர்; அனுதின - தினந்தோறும்; கர்மவ - கடமைகளை; பரிபரியிம் - விதவிதமாக; சரிஸுத - செய்து கொண்டிருந்தார். 

ஸ்ரீமதாசார்யரின் அனுஷ்டான கிரமங்களை இந்த ஸ்லோகத்தில் விளக்குகிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர். 

ஸ்ரீமதாசார்யர் அருணோதய காலத்தில் எழுந்து, மகிழ்ச்சியான மனதுடன், ஸ்ரீமன் நாராயணனின் பாத கமலங்களை எப்போதும் சிந்தித்தவாறு, சூரியன் மேற்கில் நகர்ந்து, மேற்கில் மறையும்வரை, தினந்தோறும், தம் கடமைகளை விதவிதமாக செய்து கொண்டிருந்தார். 

ஸ்ரீபூர்ணப்ரக்ஞரின் ஆன்ஹிக வர்ணனை மத்வ விஜயத்தின் 14ம் சர்க்கத்தில் 14-7 முதல் விளக்கப்பட்டுள்ளது. 

உதயதி வினதாயா நந்தனே ஷ்லாக்ய காலே

க்ருத ஸகல க்ருத்ய: க்ருத்யவேதி ப்ரவேக: |

அருண யவனிகாந்த பிரம்ம நாராயணாக்யம்

குரு கணமபி தத்யௌ யோக்ய யோகாஸனஸ்த: ||14-7 

ஆன்ஹிகங்களை சரிவர செய்வதில் சிறந்தவரான ஸ்ரீமதாசார்யர், அருணோதய காலத்தில் எழுந்து ஸ்னானம் செய்து, தக்க காலத்தில் அனைத்து கர்மங்களையும் யோக நிலையில் அமர்ந்து செய்தார். சிவப்புத் திரைக்கு பின்னால் அமர்ந்து, ஸ்ரீமன் நாராயணனை குறித்து தியானம் செய்தார். 

அம்ருதமபி நிரீக்ஷ்யாsஸ்த்ராவி நிர்மால்யஸூனே

க்ருதமிதமிதி ஸத்யோ ப்ராந்திமந்தோsபி சிஷ்யா: |

ஸ்ரததுரதிக வாக்யைர் விப்ரமாஸ்தச்ச பஸ்சாத்

அனுதினமம்ருதான்னைஸ்தஸ்ய ஸேவஸ்ய ஷக்த்யா || 14-13 

இப்படி தகுந்த நேரத்தில் சிஷ்யர்கள் ஸ்னான சந்தியாவனத்தை முடித்து, சிலர் ஜபதபங்களை செய்து, வேறு சிலர் நிர்மால்ய சாலிக்ராம பூஜையை செய்பவர்களாக இருந்தனர். ஸ்ரீமன் மத்வாசார்யரால் எடுக்கப்பட்ட நிர்மால்ய தீர்த்தத்தில் அவரது மகிமை என்னும் அமிர்தமும் நிறைந்திருந்தது. இவை அனைத்தும் சூர்யோதத்திற்கு முன்னர் நடப்பவை. 

ஸ்ரீமதாசார்யரின் ஆன்ஹிகங்களை அடுத்த ஸ்லோகத்திலும் தொடர்ந்து விளக்குகிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர். 

***

No comments:

Post a Comment