Saturday, April 9, 2022

ஸ்லோகம் #46: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ

ஸ்லோகம் #46: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ

இயற்றியவர்: ஸ்ரீவித்யாபிரஸன்ன தீர்த்தர்

தமிழில் உரை: ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

[ஸ்லோகம் 46]

தி3ட்டபவனன ஸுதன கீர்த்திகெ3 ஹொட்டயுரியிது து3ருளஜனரிகெ3

கெட்டயோசனெ மாடி3 பரிபரி பீடி3ஸித3ரிவர |

சிஷ்டஹரி 4குதாக்3ரணிய தாவிஷ்டு பீடி3ஸதி3ரலு தமஸிகெ3

கட்டுவுது3 பா1தே2யவெந்தெ3ந்தீ3பரிய நட3தெ ||46 

திட்ட - கம்பீரமான; பவனன ஸுதன - வாயு புத்திரனின்; கீர்த்திகெ - புகழைக் கண்டு; துருள ஜனரிகெ - கெட்டவர்களுக்கு; ஹொட்டெயுரியிது - வயிறு எரிந்தது; கெட்ட யோசனெ மாடி - தவறான யோசனைகள் செய்து; பரிபரி - விதம்விதமாக; இவர - இவரை; பீடிஸிதரு - தொந்தரவு செய்தனர்; சிஷ்ட - சிறந்த; ஹரிபகுதாக்ரணிய - ஹரிபக்தர்களில் முதல்வரை; தாவிஷ்டு - இவர்கள் இவ்வளவு; பீடிஸதிரலு - தொந்தரவு செய்யாவிட்டால்; எந்தெந்து - என்றைக்கும்; தமஸிகெ கட்டுவது - தமஸ்ஸிற்கு எப்படி தகுதி பெறுவார்கள்?; பரிய நடதெ - இப்படியான இவர்களின் நடவடிக்கைகள்; பாதேயவெந்து - அதற்கே வழிவகுக்கிறது. 

பத்மதீர்த்த மற்றும் புண்டரிகபுரி உடனான ஸ்ரீமதாசார்யரின் வாதத்தை இந்த ஸ்லோகத்தில் விளக்குகிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர். 

கம்பீரமான வாயுபுத்திரனின் புகழைக் கண்டு, கெட்டவர்களுக்கு வயிறு எரிந்தது. தவறான யோசனைகளை செய்து, விதம்விதமாக இவரை தொந்தரவு செய்தனர். சிறந்த ஹரிபக்தர்களில் முதல்வரை, இவர்கள் இவ்வளவு தொந்தரவு செய்யாவிட்டால், தமஸ்ஸிற்கு எப்படி தகுதி பெறுவார்கள்?. இப்படியான இவர்களின் நடவடிக்கைகள், அதற்கே வழிவகுக்கிறது. 

மத்வ விஜய பன்னிரெண்டாம் சர்க்கத்தில் இந்த விஷயம் வருகிறது. 

தத்ரானந்த ஸ்வாந்த வேதாந்தி சிம்ஹே முக்யாவியாக்யா நிஸ்வனே ஜ்ரும்பமாணே |

சத்யோமாத்யாத் வாதி தந்தீந்த்ரபீமே பேஜே க்ஷோபோ மாயிகோமாயு யூதை: || (12-1) 

ஆசார்யரின் சித்தாந்தத்தை கண்டிக்க திறனற்ற மாயாவாதிகள்  கலக்கமடைந்தனர். பொறாமையில் வெந்த அந்த மாயாவதிகள், சோள தேசத்திலிருந்த பத்மதீர்த்த மற்றும் புண்டரிகபுரி ஆகியோரிடம் சர்வக்ஞரான மத்வாசார்யரை வாதத்தில் எப்படி வெல்வது என்று ஆலோசித்தனர். 

அங்கு வந்திருந்த மாயாவாதிகளில் சகுனியைப் போன்று வஞ்சகனாக இருந்த ஒருவன் இவ்வாறு கூறினான். ‘சங்கராசார்யரின் மாயாவதமானது நெடுங்காலமாக வந்துகொண்டிருக்கிறது. மேலோட்டமாகப் பார்த்தால் மாயாவாதமானது அனைத்து பிரமாணங்களுக்கும் எதிராகவே தோன்றினாலும், நமக்கு அது சாதகமாகவே இருக்கிறது. மாயாவாதத்தை நன்றாக அறிந்தால், பிரம்மனைவிட வேறாகத் தெரியும் இந்த ஜீவ ஜடாத்மகவான பிரபஞ்சத்தை - வேறுபாடு இல்லாத ஒன்று என்று நிரூபிக்கலாம். பிரம்மன் ஒருவரே உண்மை. அவன் உருவமற்றவன். நிர்குணன். நிர்விசேஷன். பழமையான வேதங்களினாலும் விளக்கப்பட முடியாதவன். ஜீவ - பிரம்மனின் வேறுபாடு இல்லை. 

ஒருவருக்கு பிரம்மஞானம் கிடைத்தவுடன், அவரைப் பொறுத்தவரையில் உலகம் நெருப்பில் எரியும் துணியைப் போல ப்ரோக் நிலையில் மறைந்து போகின்றது. அபரோக் நிலையில், உலகம் பழுக்கக் காய்ச்சிய இரும்பில் தண்ணீர் ஊற்றினால் அது ஆவியாகப் போய்விடுவதைப் போல மறைந்து விடுகிறது. நமது தத்வங்களான அஞ்ஞானம், மாயாவாதம் ஆகியவை உலகத்தை வியவஹாரிக நிலையிலும், பரமார்த்திக நிலையிலும் காண்பதற்கு உதவி புரிகின்றன. இத்தகைய உறுதியான தத்வங்களைக் கொண்டு நாம் மத்வரின் வேறுபாட்டுக் கொள்கையை நிராகரிப்போம். மத்வாசார்யரும் அவரது சிஷ்யர்களும் - ஸ்ரீஹரி அனந்தகுணபரிபூர்ணன், உலகம் உண்மை, பிரம்மன் ஜீவனிடமிருந்து வேறுபட்டவன் போன்ற தத்வங்களை போதித்தவாறு, மாயாவாதிகளின் அனைத்து வாதங்களையும் கண்டிக்கின்றனர். நாம் எதிர்க்கமுடியாத பல ஆதாரங்களைக் கொடுக்கின்றனர். 

ப்ராச்யம் சாஸ்திரம் யத் ஸபாதம் து லக்ஷம் வாக்யேனைகேனாSக்ஷிபத்தர்ஷ தீர்த்த: | (12-11). ஒன்றேகால் லட்ச கிரந்தங்களினால் கூடிய பழமையான மாயாவாதத்தை ஸ்ரீமதாசார்யர் அஞ்ஞானா... (12-12) என்னும் ஒரே வாக்கியத்தினால் நிராகரிக்கிறார். இப்படிப்பட்ட மத்வரை வெல்வதற்கு பத்மதீர்த்தர் ஒருவரால் மட்டுமே சாத்தியம் என்று நினைத்து உங்களை வந்து அடைந்திருக்கிறோம். புன்சிரிப்புடன் இருக்கும் மத்வாசார்யரை பார்த்தால் - ’வேதவியாஸேன்வேஷ வேதோ மூர்த்தோ திவ்யா மூர்த்திர்யஸ்ய சா சுஸ்மிதஸ்ய |’ (12-12) - ’இவர்தான் சாட்சாத் வேதவியாசரோ? உடல் கொண்டு வந்துள்ள வேதமோ - என்று புகழ்ந்து - ‘மாயாபக்ஷமூலம் பினத்தி - மாயாவாத மதத்தின் மூலத்தையே கத்தரிப்பதைப் போல தோன்றுகிறது. 

ஞானிகளான மத்வாசார்யரையும் அவரின் சிறந்த சித்தாந்தத்தையும் கண்டு கலக்கம் கொண்ட மாயாவாதிகள் - ‘இப்போது நம் கோபத்தை கேளுங்கள். மாயாவாதம் அழிந்து கொண்டிருக்கிறது. எத்தகைய கஷ்டம் வந்திருக்கிறது. அய்யோ, நாம் அபாக்யசாலிகள்என்று துக்கப்பட்டனர். ’ஆக்ரந்தம் மே ஹந்த ஸ்ருண்வந்து சோSயம் ஹாஹா மாயாவாத உத்சாதமேதி ||’ (12-7). மத்வரின் சிஷ்யர்கள், அவர்களின் தத்வவாதத்தை அனைத்து இடங்களிலும் சிறப்பாக பரப்பிக் கொண்டிருக்கின்றனர். நம்மவரே ஆன சிலர், மத்வ பாஷ்யத்தை புகழ்கின்றனர். 

இத்தகைய பேச்சினைக் கேட்டு இன்னொருவன் - ‘இந்த மத்வாசார்யரைக் கண்டு பயப்படுபவர்கள் கோழைகள். பத்மதீர்த்தரைப் போன்ற பெரிய பண்டிதர் இருக்கும்போது நமக்கு பயம் எதற்கு? தத்வவாதத்தை கண்டிக்க முடியாவிட்டாலும், மந்திர தந்திரங்களினால் பத்மதீர்த்தர் முதலானோர் மத்வாசார்யரை வெல்லமுடியும். 

மத்வ சித்தாந்தத்தில் இல்லாதவற்றை நாம் எடுத்துச் சொல்லவேண்டும். தந்திரத்துடன் பிரதிவாதிகளை நாம் எதிர்கொள்ள வேண்டும். நெருப்பு தூரத்தில் இருந்தாலும், வெண்ணெய் உருகுவதைப் போல, ஆசார்ய மத்வர் தூரத்தில் இருந்தாலும், மாயாவாதிகள் பயங்கொண்டது நன்கு தெரிந்தது. ஆனால் மந்திரம், தந்திரம் என எதையாவது செய்து மத்வரை வெல்லவேண்டும் என்று தீர்மானித்தனர். ’கிராமே கிராமே வார்யதாம் மானனைஷாம் பூர்வம் பூர்வம் சாம பூர்வருபாயை: |’ (12-24). ஒவ்வொரு கிராமத்திற்கும் போய் மத்வரின் சிஷ்யர்கள் அங்கு வராதவாறு தடுப்போம். அப்படி நுழைந்தாலும் அவர்களுக்கு மரியாதை கிடைக்காதவாறு செய்வோம். அவர்களது புத்தகத்தை பறிப்பது, தண்டத்தை முறிப்பது, ஆகியவற்றை செய்யவேண்டும். 

சிறுமதி படைத்த மாயாவாதிகள் இத்தகைய துராலோசனைகளை செய்து, மத்வாசார்யரை வெல்ல வேண்டுமென்ற நோக்கத்துடன், விஷ்ணு மற்றும் விஷ்ணு பக்தர்களின் த்வேஷியான புண்டரிகபுரி என்னும் சன்யாசியை உடுப்பிக்கு அனுப்பினர் 

இத்யாத்யேதே கார்யமாலோச்ய காலே சக்ருர்வக்ராஸ்சக்ரி பக்த ப்ரதீபம் |

யோக்யாமங்க்தும் தேsன்யதா ஸ்யு: கதம் வா துக்கோக்ராம்பரஸ்யந்த தாமிஸ்ர ஸிந்தௌ ||12-25 

இந்த மாயாவாதிகள் இவ்வாறெல்லாம் துராலோசனை செய்து, சக்ரதாரியான விஷ்ணுவின் மிகச்சிறந்த பக்தரான ஸ்ரீமதாசார்யரை, எதிர்ப்பதற்கு தீர்மானித்தனர். இவர்கள் இவ்வாறெல்லாம் செய்யாவிட்டால், நிரந்தர தமஸ்ஸினை அடைவதற்கு எப்படி தகுதி பெறுவார்கள்?. 

மாதனூரு ஸ்ரீவிஷ்ணு தீர்த்தர், தனது கிருதியான ஸ்ரீமத் ஸுமத்வ விஜய ப்ரமேய மாலிகாவில், மத்வ விஜய பன்னிரெண்டாம் சர்க்கத்தின் சுருக்கத்தையும் இந்த சர்க்கத்தை படிப்பதால் வரும் பலனையும் இவ்வாறு சொல்கிறார். 

3ஹுபத்3ரவத3ம் மாயிமண்ட3லம் ஸ்வீயமண்ட3லே |

2ண்ட3யித்வாs2ண்ட3ஷக்திர் விரேசேs2ண்ட3ராஜவத் ||13|| 

மாயிகள் தங்களுடைய குழுவில் பல்வேறு விதமாக ஆலோசித்து, ஆசார்யருக்கு உபத்திரவங்களைக் கொடுக்க முயன்றபோது, ஆசார்யர், அகண்டராஜன் (சந்திரன்) தன்னுடைய பரிபூர்ண சக்தியினால் எதிரிகளை தோற்கடிப்பதைப் போல, ஆசார்யர் இந்த மாயிகளை வாதத்தில் முழுமையாக தோற்கடித்து, ஒளிர்ந்தார். 

அபேக்ஷிதாகி2லாவாப்திர் மோக் சாஸ்த்ர ஸுலோலதா |

விக்4னனாஷ: ஸாத4னானாம் ஸ்வீயமாஹாத்ம்ய போ34னம் ||20|| 

பன்னிரெண்டாம் சர்க்கம் : சாதனை மார்க்கத்தில் வரும் தடைகள் அகலுதல். 

ஸ்ரீமதாசார்யர், புண்டரிகபுரியை வென்ற விஷயத்தை அடுத்த ஸ்லோகத்தில் விளக்குகிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர். 

***

No comments:

Post a Comment