ஸ்லோகம் #44: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ
இயற்றியவர்: ஸ்ரீவித்யாபிரஸன்ன தீர்த்தர்
தமிழில் உரை: ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
[ஸ்லோகம் 44]
நோடு3வரு நாராயணன ஸ்துதிமாடு3வரு பரமாத3ரதி3
தாவீட3னரியரு ஸுந்த3ர ஸுமங்க3ளன
த3ருஷனகெ |
மூடி3த3பி4லாஷெக3ளு தக்ஷண கைகூ3டு3வுது3 ஹரியாக்3ஞெயிந்த3லி
நோட3பே3கென்னுவரனாக்ஷண தந்து3தோரிஸுவ ||44
நாராயணன - ஸ்ரீமன் நாராயணனை; நோடுவரு - பார்க்கின்றனர்; பரமாதரதி - மிகவும் பக்தி மரியாதையுடன்; ஸ்துதி மாடுவரு - துதிக்கின்றனர்; ஸுந்தர ஸுமங்களன - அழகானவனின், மங்களாங்கனின்; தருஷனகெ - தரிசனத்திற்கு; தாவீடனரியரு - ஈடு வேறு எதுவும் அறியாதவர்கள்; மூடிதபிலாஷெகளு - நினைத்த விருப்பங்கள்; தக்ஷண - உடனடியாக; கைகூடுவுது - நிறைவேறுகின்றன; ஹரியாக்ஞெயிந்தலி - ஸ்ரீஹரியின் ஆணைப்படி; நோடபேகென்னுவரன்னு - பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்களை; தக்ஷண - அதே சமயத்தில்; தந்துதோரிஸுவ - கொண்டு வந்து காட்டுவான்.
வைகுண்ட வர்ணனை படலத்தை இந்த ஸ்லோகத்திலும் தொடர்கிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர்.
வைகுண்டத்தில் இருப்பவர்கள், ஸ்ரீமன் நாராயணனை பார்க்கின்றனர். மிகவும் பக்தி மரியாதையுடன் அவனை துதிக்கின்றனர். அழகானவனின் / மங்களாங்கனின் தரிசனத்திற்கு ஈடு என்று வேறு எதையும் அறியாதவர்கள். அவர்கள் நினைத்த விருப்பங்கள், உடனடியாக நிறைவேறுகின்றன. ஸ்ரீஹரியின் ஆணைப்படி, பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்களை, உடனடியாக ஸ்ரீஹரி கொண்டு வந்து காட்டுகிறான்.
இந்த விஷயங்கள், மத்வ விஜயத்தில் 11-47 ஸ்லோகத்தில் உள்ளது.
ப்ரமதாதி ரேகமுபயாதவதா ப்ரமதா கணேன சரதோபவனே |
உபகீயதே ஸ்ம மதுரம் மதுஜிச்சரிதம் ஸகாந்த ததினா ஸததம் ||11-47
பெண்கள், நிரந்தர மகிழ்ச்சியுடன், தங்களின் கணவர்களுடன், ஸ்ரீஹரியின் சரித்திரங்களை தொடர்ந்து பாடிக் கொண்டிருக்கின்றனர்.
வினயோ ஹி பூஷயதி சர்வரசம் | (11-53). அனைத்து குணங்களிலும் சிறந்தது பணிவு. இப்படி பணிவு நிறைந்த பெண்கள் தமது கணவர்களுடன் மகிழ்வுடன் இருந்தனர். முக்தர்களின் ஸ்வரூபானந்தத்தின் அனுபவம் எவ்வித தோஷங்களும் இல்லாமல் இருந்தது.
யம்யம் சுகீ காமயதேSர்த்தமத்ர சங்கல்ப மாத்ராத் சகலோSபி ச ஸ்யாத் |
இத்யேவ வேதா அபி வேதயந்தி முக்திம் தத: கோ விபவாதிரேக: || (11-78)
மோட்சத்தில் முக்தர்கள் எதை தேவை என்று நினைக்கிறார்களோ, அப்படி நினைத்த மாத்திரத்திலேயே அவை கிடைக்கின்றன என்று வேதங்கள் சொல்கின்றன. அனைத்து புருஷார்த்தங்களும், நற்-சித்திகளும், ஸ்ரீஹரியை எப்போதும் காணும் சௌபாக்கியமும் கிடைக்கும் இடம் வைகுண்டம்.
இத்துடன் வைகுண்ட வர்ணனையைக் கொண்ட மத்வ விஜய பதினோறாம் சர்க்கத்தின் முடிந்து, அடுத்த ஸ்லோகத்திலிருந்து பன்னிரெண்டாம் சர்க்கத்தின் ஸாரம் விளக்குகிறார், ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர்.
***
No comments:
Post a Comment