[பத்யம் #11] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]
இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)
தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
[பத்யம் #11]
மூருத3ஷமத்தேளு க்3ரந்த2தி3
தோரிரலு கம்ஸாரி மஹிமெய
ஸார க்3ரஹிஸலஷக்யவாயிது காலக்ரமதி3ந்த3 |
ஸாரி களுஹிஸலாக3 தி3விஜரு
பே3ரெ பே3ரவதரிஸி ப3ந்து3 வி
ஸ்தாரகெ3ய்து3பதே3ஷவீயுத மாட்3த3ருபகார ||11
மூருதஷமத்தேளு க்ரந்ததி - (தன்னுடைய) 37 கிரந்தங்களால்; கம்ஸாரி மஹிமெய - கம்சாரியான கிருஷ்ணனின் மகிமையை; தோரிரலு - நிர்ணயம் செய்தார்; காலக்ரமதிந்த - காலகிரமத்தினால்; ஸார க்ரஹிஸலு - அதனுடைய ஸாரத்தை (உண்மையான விளக்கத்தை) புரிந்து கொள்வதற்கு; அஷக்யவாயிது - முடியாததாக ஆயிற்று; ஸாரி களுஹிஸலாக - ஸ்வாமி அனுப்பியவாறு, அப்போது; திவிஜரு - தேவதைகள்; பேரெ பேரவதரிஸி பந்து - பலர் தனித்தனியாக அவதரித்து வந்து; விஸ்தாரகெய்து - (அந்த நிர்ணய கிரந்தங்களை) மேலும் விளக்கியவாறு; உபதேஷவீயுத - உபதேசம் செய்து; உபகார - மிகப்பெரிய உதவியை; மாட்தரு - செய்தனர்.
ஸ்ரீமத்வரின் அவதாரம், பின் அவருடைய பரம்பரையில் வந்த யதிகள் அவர்கள் இயற்றிய கிரந்தங்கள் என மத்வ சித்தாந்த கிரந்தங்களைப் பற்றிய விஷயத்தை இந்த பத்யத்தில் விளக்குகிறார் ஸ்ரீதாசர்.
ஸ்ரீமதாசார்யர், தனது 37 கிரந்தங்களால் (ஸர்வமூல கிரந்தங்களால்), கம்ஸாரியான கிருஷ்ணனின் மகிமையை நிர்ணயம் செய்தார். (ஹரி ஸர்வோத்தமத்வத்தை நிறுவினார்). ஆனால், அவருக்குப் பிறகு, காலக்கிரமத்தில், அந்த கிரந்தங்களின் ஸாரத்தை, அதில் உள்ள தத்வ ரகசியங்களை புரிந்து கொள்வதற்கு முடியாமல் போனது. அந்த சமயத்தில், ஸ்ரீஹரி அனுப்பியவாறு, பல தேவதைகள், தனித்தனியாக அவதரித்து வந்து, அந்த நிர்ணய கிரந்தங்களை மேலும் விளக்குவதற்காக, டீகை, டிப்பணிகள் ஆகியவற்றை இயற்றி, மக்களுக்கு மிகப்பெரிய உதவியை செய்தனர்.
ஸ்ரீமதாசார்யரின் மகிமையைப் பற்றி ஸ்ரீஜகன்னாததாசர், ஹரிகதாம்ருதசாரத்தில் இவ்வாறு கூறுகிறார்.
ஏகவிம்ஷதி மதப்ரவர்த்தக கா
குமாய்க3ள குஹகயுக்தி நி
ராகரிஸி ஸர்வோத்தமனு ஹரியெந்து3 ஸ்தா2பிஸித3 |
ஸ்ரீகளத்ரனஸத3ன த்3விஜப பி
நாகிஸன்னுத மஹிம பரம க்ரு
பாகடாக்ஷதி3 நோடு3 மத்4வாசார்ய கு3ருவர்ய ||
(கல்ப ஸாதன ஸந்தி #1)
ஸௌர, சாக்த, காணபத்ய முதலான 21 மதங்களின் தவறான வாதங்களை நிராகரித்து ‘ஏகவிம்ஷதி குபாஷ்ய தூஷகம்’ என்னும் மத்வ விஜயத்தின் வாக்கியத்தைப் போல, பிரம்ம சூத்திரத்திற்கு 22ம் பாஷ்யத்தை இயற்றி, ஹரி சர்வோத்தமன் என்று நிர்ணயம் செய்த, கருட, சேஷ ருத்ராதிகளால் வணங்கப்படும் மகிமை உள்ள, குரு ஸ்ரேஷ்டர் ஸ்ரீமன் மத்வாசார்யர் - என்று போற்றுகிறார்.
இந்த ஸர்வமூல கிரந்தங்களை இயற்றுவது, உடுப்பியில் ஸ்ரீகிருஷ்ணனின் பிரதிஷ்டை செய்து ஹரி ஸர்வோத்தமத்வத்தை நிறுவியது போன்ற விஷயங்களை, ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர், தனது மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ கிரந்தத்தில் இவ்வாறு கூறியிருக்கிறார்.
குமததொ3ளு மதிலீனரச்யுத ப்ரமதிக3ள மதிரோக3 தொலகி3ஸி
விமலமதியனு கருணிஸலு ப3லு ஷாஷ்வதவதா3ய்து |
அமிதஸுந்த3ரமூர்த்தி கோ3குல ரமணனனு ஸ்தா2பிஸுவ யக்3ஞவ
க்ரமதி3 நடெ3ஸலனுக்3ஞ்யெயித்த1ரு ||36
மாயாவாத மத தத்வங்களில் மனம் மயங்கியிருந்த அச்யுத ப்ரேக்ஷரின் அஞ்ஞானங்களை நீக்கி, தெளிவான அறிவை அருளினார் ஸ்ரீமதாசார்யர். அந்த ஞானம் அவரில் நிரந்தரமாக தங்கியது. மிகவும் அழகான மூர்த்தியான ஸ்ரீகிருஷ்ணனை நிறுவும் வேள்வியை முறையே செய்ய வேண்டும் என்று தீர்மானித்தார்.
ஸ்ரீமதாசார்யரைத் தொடர்ந்து, ஸ்ரீஹரியின் ஆணைப்படியே, பல தேவதைகள், தனித்தனியாக இந்த உலகிற்கு வந்து, ஆசார்யரின் கிரந்தங்கள் மக்களிடையே மேலும் தெளிவாக போய்ச் சேரவேண்டும் என்பதற்காக, பல டீகை, டிப்பணிகளை இயற்றினர். இது அவர்கள் நமக்குச் செய்த மிகப்பெரிய உதவி என்று சொல்லி, அத்தகையவர்கள் யார் என்பதை அடுத்த பத்யத்தில் விவரிக்கிறார் ஸ்ரீரமாகாந்த விட்டல தாசர்.
***
No comments:
Post a Comment