[பத்யம் #15] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]
இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)
தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
[பத்யம் #15]
சதுரயுக3தொ3ளு மொத3லு மூரர
அதிஷயத3 தப யக்3ஞ தா3னவு
க்ஷிதியொளீ கலியுக3தி3 கஷ்டவு ஸாத்4யவல்லெந்து3 |
பதிதபாவன க்ஷுப்தகெ3ய்ஸித3
ஹிததிv ஸாத4ன ப4க்த ஸுஜனகெ
மதியொளச்யுதவெம்ப3 கா3னகெ1 கொடு3வ ஸமக3தி1ய ||15
சதுரயுகதொளு - நான்கு யுகங்களில்; மொதலு மூரர - முதல் மூன்றின்; அதிஷயத - இப்போது செய்ய முடியாததான; தப யக்ஞ தானவு - தவம், யக்ஞம், தானம்; க்ஷிதியொளு - இந்த பூமியில்; கலியுகதி - கலியுகத்தில்; கஷ்டவு - கஷ்டமானது; ஸாத்யவல்லெந்து - சாத்தியம் இல்லாதது என்று; பதிதபாவன - பக்தர்களைக் காப்பவன்; ஸாதன பக்த ஸுஜனகெ - சாதனைகளை செய்ய விரும்பும் பக்த ஸஜ்ஜனர்களின்; ஹிததி - நன்மைக்காக; க்ஷுப்த கெய்ஸித - ஒரு சுலபமான வழியை செய்தான்; மதியொளு - மனதில்; அச்யுதவெம்ப - அச்யுத என்று சொல்லும்; கானகெ - பாடலுக்கு; கொடுவ ஸமகதிய - முக்தியையே கொடுக்கிறான்.
விஷ்ணு புராணத்தின் ஒரு ஸ்லோகத்தினை, ஹரிதாஸர்கள் பலர் நமக்குப் புரியும் வண்ணம் கன்னடத்தில் உகாபோகங்களாக பாடியிருக்கின்றனர். அந்த விஷயத்தின் ஸாரமே இந்த பத்யமாகும். அது என்னவெனில்:
த்யாயன் க்ருதே யஜன் யக்ஞை: த்ரேதாயாம் த்வாபரேSர்ச்சயன் |
யாதாப்னோதி ததாப்னோதி கலௌ சங்கீர்த்ய கேஷவம் || -- விஷ்ணு புராணம்
த்யானவு க்ருதயுகதி யஜன யக்ஞவு த்ரேதாயுகதி
தானவாந்தக தேவதார்ச்சனெ த்வாபரயுகதி ஆ
மானவரிகெஷ்டு பலவோ அஷ்டு பலவு கலியுகதி
கானதலி கேசவ எனலு கைகொடிசுவனு ரங்கவிட்டலா || (ஸ்ரீஸ்ரீபாதராஜர்)
த்யானவு க்ருதயுகதலி யக்ஞ
யாகவு த்ரேதாயுகதல்லி
அர்ச்சனெ த்வாபரயுகதலி
கீர்த்தனெ மாத்ரதி கலியுகதல்லி மு
குதிய நீவ புரந்தரவிட்டலா ||
மானவரு க்ருதயுகதி தபவ மாடலிபேகு
ஞானசாதன பேகு த்ரேதாயுகதலி
ஏனெம்பே த்வாபரதி யக்ஞவே சாதனவு
கான தான பேகு கலியுகதி புரந்தரவிட்டலா ||
கலௌ ஸங்கீர்த்ய கேஷவம் - கலியுகத்தில் கானத்தினால் கேஷவனை அடையலாம். முதல் மூன்று யுகங்களில் செய்ததான தவம், யக்ஞம், தானம் ஆகியவற்றை செய்து பெற்ற நற்பலன்களை, இந்த கலியுகத்தில் கானத்தினால் (கீர்த்தனைகளால்) பெற்று விடலாம் என்பதே இந்த பத்யத்தின் ஸாரம் ஆகும்.
***
No comments:
Post a Comment