[பத்யம் #18] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]
இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)
தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
[பத்யம் #18]
தாதனாக்3ஞெய திளிது3 முனிவர
யாதகெ1ன்னனு கரெஸலாய்தெ1ம்
தா3து1ரதி3 கைமுகி3து3 பே3ட3லு ஹரிய ஸம்முக2தி3 |
ஜாதனாகி3ளெயொளகெ3 கலிப4ய
பீ4தி ஹரிஸுவ நீதி1 போ3தி4ஸு
பாதக1வு நினகி3ரது3 போகெ3னுதொ1ரெத3னஸுராரி ||18
தாதனாக்னெய திளிது - தனது தாத்தாவான ஸ்ரீஹரியின் ஆணையை அறிந்து; முனிவர - நாரதர்; யாதகென்னனு - என்னை எதற்கு; கரெஸலாய்து - அழைத்தீர்கள்; எந்தாதுரதி - என்று மரியாதையுடன்; ஹரிய ஸம்முகதி - ஸ்ரீஹரியின் எதிரில்; கைமுகிது பேடலு - கைகுவித்து வேண்டிக் கொள்ள; இளெயொளகெ - இந்த பூமியில்; ஜாதனாகி - பிறந்து; கலிபய பீதி ஹரிஸுவ - கலியின் பயத்தை போக்கும்; நீதி போதிஸு - நீதியை போதிப்பாயாக; பாதகவு நினகிரது - உனக்கு எவ்வித பிரச்னையும் இருக்காது; போகெனுதொரெதனு - சென்று வா என்று கூறினான்; அஸுராரி - அசுரர்களைக் கொல்பவரான ஸ்ரீஹரி.
நாரதரை பூமிக்கு அனுப்பும் செயலை இங்கு அழகாக விவரிக்கிறார் ஸ்ரீதாஸர்.
தனது தாத்தாவான ஸ்ரீஹரியின் ஆணையை அறிந்து, நாரதர் - என்னை எதற்கு அழைத்தீர்கள் - என்று மரியாதையுடன் அவர் எதிரில் கைகுவித்து கேட்டுக் கொண்டார். அதற்கு ஸ்ரீஹரியானவர் - நீ இந்த பூமியில் பிறந்து, கலியின் பயத்தினை போக்கும் நீதியை போதிப்பாயாக. இந்த செயலால் உனக்கு எவ்வித பிரச்னையும் இருக்காது. உடனே சென்று வா’ என்று கூறினார்.
பணெயலொப்புவதிலக துலசி
மணிக3ணாஞ்சித கண்ட2 கரத3லி
க்க3ணிதவீணா ஸுஸ்வரதி3 ப3ஹுதாள க3திக3ளலி |
ப்ரணவ ப்ரதி3பாத்4யன கு3ணங்க3ள
குணிகுணிது அதிஸம்ப்4ரமதி3 கா3
யனவ மாடு3வ தே3வரிஷி நாரத3ரிக3பி4மனமிபெ ||
(கக்ஷ தாரதம்ய ஸந்தி #26)
நெற்றியில் திலகம், கழுத்தில் துளசிமாலை, இவற்றால் அலங்கரிக்கப்பட்டு கையில் வீணையைப் பிடித்து, பரமாத்மனின் குணங்களை வீணையால் நுடித்தவாறு, நற்ஸ்வரத்துடன் கானம் செய்தவாறு, நடனம் ஆடியவாறு ஆனந்த சமுத்திரத்தில் மூழ்கியிருக்கும் நாரதரை நான் வணங்குகிறேன் - என்று ஸ்ரீஜகன்னாததாசர் கூறுகிறார்.
இவ்வாறாக, ஹரிதாஸ ஸாகித்யத்தின் துவக்கம் எப்படி ஆனது என்பதையும், ஸ்ரீஹரியே நாரதரை, ஸ்ரீனிவாஸ நாயகராக (பின்னர் ஸ்ரீபுரந்தரதாசர்) பூமிக்கு அனுப்பினார் என்பதை அறிகிறோம். எந்த நேரமும் பகவத் ஸ்மரணையிலேயே சஞ்சாரம் செய்து கொண்டிருக்கும் நாரதரே, பூமியில் மக்களிடையே கலியின் பயத்தினை போக்குவதான நீதியை போதிக்க சரியானவர் என்றார் ஸ்ரீஹரி.
***
No comments:
Post a Comment