Tuesday, May 10, 2022

[பத்யம் #3] - ஹரிதாஸ த3ர்பண

[பத்யம் #3] - ஹரிதாஸ த3ர்பண

இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)

தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

[பத்யம் #3]

ப்ராணபதி ஸர்வோத்தமத்வத3

ஞான உதி3ஸலு தா3 போ3தெ4யு

கா3னரூபதி3 மனெய மாதினொளிரலு குந்தே3னு |

ஞானிக3ளிக3பி4மதவு 3ரித3பி4

மானதி3ம் ஜரியுவரு அக்ஞரு

ஜாணரிகெ3 ஸன்மார்க்க3தா3யக முகுதி காணிஸலு ||3 

ப்ராணபதி ஸர்வோத்தமத்வத - (பிராணதேவரின் ஸ்வாமியான) ஹரியின் ஸர்வோத்தமத்வத்தின்; ஞான உதிஸலு - ஞானத்தைக் கொடுப்பதற்காக; தாஸ போதெயு - தாஸ ஸாகித்யமானது; கானரூபதி - பாடல் (ஸாகித்ய) வடிவத்தில்; மனெய மனெயொளிரலு - அனைத்து வீடுகளிலும் பரவியிருக்க; குந்தேனு - என்ன பிரச்னை? (எதுவுமில்லை);  ஞானிகளிகபிமதவு - (இந்த ஹரிதாஸ ஸாகித்யமானது) ஞானிகளுக்கு பிடித்தமானது (சம்மதமானது) ; அக்ஞரு - அஞ்ஞானிகள் (இதனை); பரிதபிமானதிம் - வெறுப்புடன்; ஜரியுவரு - புறக்கணிப்பார்கள்; ஜாணரிகெ - அறிவாளிகளுக்கு;  முகுதி காணிஸலு - முக்தியை அடைவதற்கான; ஸன்மார்க்கதாயக - நல்வழியைக் காட்டுவதாக (இது இருக்கிறது). 

ஹரிதாஸ ஸாகித்யத்தின் அறிமுகமாக தொடங்கும் பத்யம் இது. ஹரிதாஸ ஸாகித்யத்தின் சிறப்பினை இங்கு விளக்கத் தொடங்குகிறார் ஸ்ரீதாசர். 

பிராணதேவரின் ஸ்வாமியான ஹரியின் ஸர்வோத்தமத்வத்தைப் பற்றிய ஞானத்தைக் கொடுப்பதற்காகவே, ஹரிதாஸ ஸாகித்யமானது, அனைத்து வீடுகளிலும், ஸாகித்ய (பாடல்) வடிவத்தில் பரவியிருக்கிறது. இத்தகைய ஹரிதாஸ ஸாகித்யமானது, ஞானிகளுக்கு சம்மதமானதாகும். அஞ்ஞானிகள் இதனை வெறுப்புடன் புறக்கணிப்பார்கள். அறிவாளிகளுக்கு, முக்தியை அடைவதற்கான, நல்வழியைக் காட்டுவதாக இது இருக்கிறது. 

கலுஷ வசனக3ளாதொ3டெ3யு பா3

ம்பொvளெய பெ1த்தன பாத3மஹிமா

ஜலதி3 பொக்குத3ரிந்த3 மாண்த3பரெ மஹிஸுரரு ||(2-2) 

இந்த கிரந்தம், சம்ஸ்கிருத மொழியில் இல்லாமல், பேசுமொழியில் இருந்தாலும், ஸ்ரீபகவந்தனின் பாத சரித்திரத்தைப் பற்றி பேசுவதால், ஞானிகள் இதனை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பார்களா? -- என்று ஸ்ரீஜகன்னாததாசர், ஹரிகதாம்ருதசாரத்தில் கூறியிருக்கும் கருத்தை ஒட்டியே இந்த பத்யத்தின் அர்த்தமும் இருக்கிறது. 

ஹரிதாஸ ஸாகித்யம் முக்தியை அடைவதற்கான நல்வழியைக் காட்டுகிறது என்னும் விஷயத்தை ஸ்ரீவாதிராஜ குருஸார்வபௌமர் தன்னுடைய தத்வஸார (வைகுண்ட வர்ணனெ) என்னும் கிரந்தத்தில் இவ்வாறு கூறியிருக்கிறார். 

கன்னடி3யொளு தோர்ப்பந்தெ பூர்ணப்ரக்ஞர மத

து3ன்னத தத்வ ஸாரவனு

கன்னடி3ஸி 3ண்ணிஸித3 வாதி3ராஜமுனிய

பி3ன்னபவென்னல மன்னிபுது3 ||

(தத்வஸார) 

ஸர்வக்ஞரின் (ஸ்ரீமத்வாசார்யரின்) சித்தாந்தத்தின், சிறந்த தத்வங்களின் சாரத்தை. (எளிமையான) கன்னடத்தில் தெளிவாக புரியுமாறு. (சம்ஸ்கிருதத்திலிருந்து) கன்னட மொழியில் மொழிபெயர்த்து. வர்ணிக்கும் நான் (வாதிராஜர்) கூறும் அனைத்தையும், (முக்கிய தத்வங்களின் நிரூபணையை), விடாமல் பின்பற்றவும். பகவந்தனின் மற்றும் பகவத் பக்தரின் சிறப்புகளை, குணகானங்களுடன் பாடுவது, புண்ணியத்தைக் கொடுக்கிறது. பாடுவதும், கேட்பதும் பக்திபூர்வகமாக இருந்தால், காதிற்கு இனிமை. மனதிற்கு மகிழ்ச்சி மட்டுமல்ல, ஆத்ம உத்தாரகமே ஆகிறது -- என்கிறார் ஸ்ரீவாதிராஜர்.

***

No comments:

Post a Comment