Thursday, May 26, 2022

[பத்யம் #19] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

[பத்யம் #19] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)

தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

[பத்யம் #19]

ஜனிஸுதலி நாரத3ரு இளெயொளு

ஜனுமதோ3ஷத3லிந்த3 கெலதி3

தனுத4னத3 மமதெயலி களெத3ரு தம்ம தாவ்மரெது |

4னமஹிம இத3னரிது தோரித3

அனுப4வகெ தந்தி3த்து தனுஸுக2

க்ஷணிகவென்னுத க்ஷண பி33தெ3 4ரிஸிதரு வைராக்3 ||19 

இளெயொளு - இந்த பூமியில்; நாரதரு - நாரதர்; ஜனிஸுதலி - (ஸ்ரீனிவாஸ நாயகராக) பிறந்து; ஜனுமதோஷதலிந்த - கர்ம பலன்களால்; கெலதின - சில நாட்களுக்கு; தனுதனத - உடல், செல்வம் ஆகியவற்றின்; மமதெயலி - கர்வத்தில்; தம்ம தாவ்மரெது - தன்னை தான் அறியாமல்; களெதரு - காலத்தை கழித்தார்; கனமஹிம - ஸ்ரீஹரி; இதனரிது - இதனை அறிந்து; அனுபவகெ தந்தித்து - அனுபவத்திற்கு கொண்டு வந்து ; தோரித - காட்டினான்; தனுஸுக - இந்த உடல் சுகமானது; க்ஷணிகவென்னுத - தற்காலிகமானது; க்ஷண பிடதெ - உடனடியாக, அதே நொடியில்; வைராக்ய - வைராக்கியத்தை; தரிஸிதரு - தரித்தார் (ஸ்ரீனிவாஸ நாயக). 

ஸ்ரீனிவாஸ நாயகரின் பிறப்பு, வாழ்க்கை பின்னர் அவர் ஸ்ரீபுரந்தரதாஸராக மாறுவதான சந்தர்ப்பத்தை இந்த பத்யத்தில் கூறியிருக்கிறார் ஸ்ரீதாஸர். 

ஸ்ரீஹரியின் ஆணைப்படி, நாரதர், இந்த பூமியில், ஸ்ரீனிவாஸ நாயகராக அவதரித்தார். தனது கர்ம பலன்களால் சில நாட்களுக்கு உடல், செல்வம் ஆகியவற்றின் கர்வத்தில், மெய்மறந்து காலத்தை கழித்தார். இதனை அறிந்த ஸ்ரீஹரி, அவர் யார் என்பதை அவருக்கு உணர்த்தினான். அப்போதே, தன் நிலை அறிந்த நாயகர், இந்த உடல் சுகமானது தற்காலிகமானது என்பதை உணர்ந்து, உடனடியாக அதே நொடியில் வைராக்கியத்தை தரித்தார். 

ஜக3 பாவன்னத3 கோ3ஸூவாகி3 ஸுரமுனி

நக34ரனன்னெ 4ஜிஸி ஸுகு3ணத3ல்லி

மிகெ3 மானவராகி3 பூ4ஸுர 3ர்ப்ப43ல்லி 3ந்து3

அக4தூ3ரராகி3 3லு பஸரிஸுத்த

அக3ணித ஞான 4குதி வைராக்3 பரராகி3

(ஸ்ரீவிஜயதாஸர் இயற்றிய ஸ்ரீபுரந்தரதாஸர் ஸுளாதி) 

உலகத்தை பவித்ரமாக்குவதற்காக, நாரதர், பகவந்தனை வணங்கி, பகவந்தனின் ஆணைப்படி, நற்குணங்களைக் கொண்ட மானவராகி, பூமியில் ஒரு சிறந்தவரின் கர்ப்பத்தில் வந்து அவதரித்தார். எல்லையற்ற ஞான பக்தி வைராக்கியஙளைக் கொண்டு..... 

இவருடைய அவதாரம் வெறும் சஜ்ஜனர்களின் உத்தாரத்திற்காக மட்டுமே தவிர, பிராரப்தத்தை அனுபவிக்க பூமிக்கு வந்தவர் அல்ல இவர். பூமியில் இவருடைய புகழ் திக்கெட்டும் பரவியது. 

வெளியில் லோபியாக தன்னை காட்டிக்கொண்டாலும், பகவந்தனின் ஆணைக்காக, அந்த தக்க காலத்திற்காக காத்திருந்தார். உள்ளே பகவந்தனின் எண்ணிக்கையற்ற குணங்களின் சிந்தனை இருந்தது. ஞான என்னும் மரத்திற்கு வைராக்ய என்னும் பாத்திரத்தில் ஹரிபக்தி என்னும் தண்ணீரை ஊற்றி, மஹாமோட்ச பலன்களைக் கொடுக்கும் மரத்தை வளர்த்தார். 

பகவந்தன் தன் லீலையால், நாயகரை, அவரது குருவான ஸ்ரீவ்யாஸராஜரிடம் அனுப்பியது, அவரை ஸ்ரீபுரந்தரதாசராக ஆக்கியது ஆகியவற்றை அடுத்த பத்யத்தில் விளக்குகிறார் ஸ்ரீரமாகாந்த விட்டல தாஸர்.

***


No comments:

Post a Comment