Tuesday, July 5, 2022

[பத்யம் #55] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

[பத்யம் #55] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)

தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

[பத்யம் #55]

ஸருவ லக்ஷணப4ரிதளாகி3ரு

திருவ தருணிய கொரள மத்4யதி3

வர ஸுமாங்க3ல்யவனு காணத3லிருவ தெரெனந்தெ |

4ரிஸத3லெ அங்கிதவ தே3ஹகெ

4ரணி மெச்சுவ தெரதி3 தா3ஸ்யத3

சரிய தோரித3ரேனு நிஷ்ப2 ஹரியு தானொலிய ||55

ஸருவ லக்ஷண பரிதளாகிருதிருவ - அனைத்து லட்சணங்களையும் கொண்டிருப்பவளான; தருணிய கொரள மத்யதி - ஒரு பெண்ணின் கழுத்தின் நடுவில்; வர ஸுமாங்கல்யவனு - சிறந்த மாங்கல்யத்தை; காணதலிருவ தெரெனந்தெ - காணாததைப் போன்ற; தேஹகெ - இந்த தேகத்தில்; அங்கிதவ தரிஸதலெ - அங்கிதத்தை தரிக்காமல்; தரணி மெச்சுவ தெரதி - உலகமே போற்றும்படியாக; தாஸ்யத சரிய - தாஸ்யத்தின் செயல்களை; தோரிதரேனு - செய்து காட்டினால் என்ன பயன்?; நிஷ்பல - அது பலன்களைக் கொடுப்பதில்லை; ஹரியு தானொலிய - ஸ்ரீஹரி அதனால் மகிழ்வதில்லை.

அங்கிதத்தின் சிறப்பினை மேலும் இந்த பத்யத்தில் விளக்குகிறார் ஸ்ரீரமாகாந்த விட்டல தாஸர்.

அனைத்து சுப லட்சணங்களையும் கொண்டவளான ஒரு பெண்; அவளின் கழுத்தில் மாங்கல்யம் இல்லையென்றால், ஏதோவொன்று குறைந்ததைப் போல் தோன்றும். அதைப் போலவே, அனைத்து விதமான தாஸ்யத்தின் செயல்களையும் செய்து, அங்கிதம் மற்றும் பெறாமல் இருந்தால், அத்தகைய செயல்களின் பலன்கள் எதுவும் கிடைப்பதில்லை. ஸ்ரீஹரியும் மகிழ்வதில்லை

***


No comments:

Post a Comment