Thursday, July 21, 2022

[பத்யம் #70] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

[பத்யம் #70] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)

தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

[பத்யம் #70]

ப்ரணவதொ3ளகெ33பி33தெ3 எரடொ3ன்

தெ3னிஸி வர்ணக3ளட3கி3ருவ வோல்

4 ஸு ஸாத4னவெனிப ஸம்பத்தினொளு ஸேரிஹுது3 |

வினய 4க்தி விரக்தி ஞானவு

அணு கொரதெ இத3காத3 காலகு

இனிது 2லகனுகூலவாக3து3 திளிவுத3னுனயதி3 ||70 

பிரணவதொளு - ஓம்காரம் என்னும் பிரணவத்தில்; எடபிடதெ - இடைவிடாமல்; எரடொந்தெனிஸி - 2+1=3 ஆக; வர்ணகளடகிருவ வோல் = ,, என்னும் மூன்று வர்ணங்கள் அடங்கியிருப்பதைப் போல; கன ஸு ஸாதனவெனிப - மிகவும் நல்ல பொருட்கள் (அல்லது வழிகள்) எனப்படும்; ஸம்பத்தினொளு - செல்வத்தில்; வினய பக்தி விரக்தி ஞானவு - பக்தி, விரக்தி, ஞானம் ஆகியவை; ஸேரிஹுது - சேர்ந்திருக்கின்றன; இனிது - இப்படியாக; இதகெ - இவற்றில்; அணு கொரதெ - சிறிதளவு குறைபாடு; ஆத காலகு - எக்காலத்தில் ஆனாலும்; பலகனுகூலவாகது - தக்க பலன்கள் கிடைக்காது; திளிவுதனுனயதி - இதனை எப்போதும் தெரிந்து கொள்ள வேண்டும். 

ஞான, பக்தி, விரக்தி ஆகியவற்றின் சிறப்புகளை இந்த பத்யத்தில் விளக்குகிறார் ஸ்ரீரமாகாந்த விட்டல தாஸர். 

ஓம்காரம் என்னும் பிரணவத்தில், 2+1=3 ஆக , , என்னும் மூன்று வர்ணங்கள் அடங்கியிருப்பதைப் போல, மிகவும் நல்ல பொருட்கள் (அல்லது வழிகள்) எனப்படும் செல்வத்தில், ஞான, பக்தி, விரக்தி ஆகியவை சேர்ந்திருக்கின்றன. இப்படியாக, இவற்றில் சிறிதளவு குறைபாடு எக்காலத்தில் ஆனாலும், தக்க பலன்கள் கிடைக்காது. இதனை எப்போதும் தெரிந்து கொள்ள வேண்டும். 

ஞான 4க்தி விரக்தி வினய புராண

ஷாஸ்திர  ஸ்ரவண சிந்தன

தா3 ஷம 3 யக்ஞ ஸத்ய அஹிம்ஸ பூ4தத3 | (18-18) 

ஞான, பக்தி, விரக்தி, வினய, புராண சாஸ்திர ஸ்ரவண ஆகிய அனைத்தும் ஸஜ்ஜனர்களின் ஸ்வபாவங்களாகும் / குணங்களாகும் என்று ஸ்ரீஜகன்னாததாஸர் விளக்குகிறார். இவற்றை பின்பற்றினால் தக்க பலன்கள் கிடைக்கும் என்கிறார். 

ஜலருஹேக்ஷண தன்னவர மன

தொளகெ3 4க்தி ஞான கர்மகெ

ஒலிது பொளெவுத தோருவனு கு3 ரூப க்ரியெக3ளனு ||(7-21) 

தாமரைக் கண்ணனான ஸ்ரீஹரி, தன் பக்தர்கள் ஞான பக்தியுடன் செய்யும் கர்மங்களுக்கு, (அவரவர்களின் யோக்யதைக்கேற்ப) தரிசனம் அளித்து தன்னை காட்டிக் கொள்கிறான் என்கிறார் ஸ்ரீஜகன்னாததாஸர்.

***

No comments:

Post a Comment