Saturday, July 23, 2022

[பத்யம் #72] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

[பத்யம் #72] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)

தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

[பத்யம் #72]

ஸேவிஸதெ3 ஸுக்3ஞானதா31

பா4வதி3ம் க்3ரஹிஸத3லெ தத்வவ

வஸுந்த4ரெ மெச்சுவந்த3தி3 தோர்பராசரணெ |

தே3வனொலியுவ மார்க்33 திளியதெ3

தா4விஸுத 3ளலிபரு தே3ஹவ

யாவ 3தி மத்1யாவ ஸாத4 மனதி3 4யஸுவரோ ||72 

ஸுக்ஞானதாதர பாவதிம் - ஸுக்ஞானத்தைப் பெறுவதான சிந்தனையுடன்; ஸேவிஸதெ - வணங்காமல்; தத்வவ - தத்வங்களை / அதன் ரகசியங்களை; க்ரஹிஸதலெ - புரிந்து கொள்ளாமல்; வஸுந்தரெ - இந்த பூமியே; மெச்சுவந்ததி - மெச்சுமாறு; தோர்பராசரணெ - செயல்களை செய்கிறார்கள்; தேவனொலியுவ - ஸ்ரீஹரியின் தரிசனம் பெறும்; மார்க்க திளியதெ - வழி தெரியாமல்; தாவிஸுத - குதித்தவாறு; தேஹவ பளலிபரு - தேகத்தை தண்டிப்பார்கள்; யாவ கதி - எந்த கதியை; மத்யாவ ஸாதன - வேறு எந்த ஸாதனையை; மனதி - தங்களின் மனதில்; பயஸுவரோ - விரும்புகிறார்களோ? 

ஸுக்ஞானங்களைப் பெறுவதான சிந்தனையுடன், பலரும், ஸ்ரீஹரியை வணங்காமல், தத்வங்களை, அதன் ரகசியங்களை புரிந்து கொள்ளாமல், இந்த பூமியே மெச்சுமாறு, தங்கள் செயல்களை செய்கிறார்கள். ஸ்ரீஹரியின் தரிசனம் பெறும் வழி தெரியாமல், குதித்தவாறு, தங்களின் தேகத்தை தண்டிப்பார்கள். இத்தகையவர்கள், எந்த கதியை, அல்லது வேறு எந்த ஸாதனையை தங்களின் மனதில் விரும்புகிறார்களோ?. 

ஸ்ரீஹரியின் தரிசனம் பெறும் வழி மிகவும் சுலபமானது என்பதை ஸ்ரீஜகன்னாததாஸர், ஹரிகதாம்ருதஸாரத்தில் இவ்வாறு சொல்கிறார். 

ஸுலப4னோ ஹரி தன்னவரனர

4ளிகெ3 பிட்டக3லனோ ரமாத4வன

ஒலிஸலரியதெ3 பாமரரு 3ளலுவரு 4வதொ3ளகெ3 ||5 

மேலும், அவர் இன்னொரு பத்யத்தில், ஸாதனைக்கான வழிமுறைகளை தெரிந்து கொள்ளாமல் பல்வேறு முயற்சிகளை செய்யும் பக்தர்களைப் பற்றி இவ்வாறு கூறுகிறார். 

கண்ட3 நீரொளு முளுகிv தே3ஹவ

vண்டிஸலு 2லவேனு 3ண்ட3

மண்டலுக3ளனெ 4ரிஸி யதியெந்தெ3னிஸி 2லவேனு |

அண்டஜாதி4பனம்ஸக3 பத3

புண்டரீகதி3 மனவஹர்னிஷி

3ண்டு3ணியவோலிரிஸி ஸுக233தி3ப்ப மானவனு ||15 

தேனி எப்படி மலர்களையே சுற்றி வந்து கொண்டிருப்பதைப் போல, யார் எப்போதும் கருடாரூடனான ஸ்ரீபரமாத்மனின் பாத கமலங்களில் தன் மனதை வைப்பதில்லையோ, அத்தகைய மனிதன் கண்ணுக்குத் தெரியும் தண்ணீர் அனைத்திலும் மூழ்கி, குளிர் முதலானவைகளால் தேகத்தை தண்டித்தவாறு இருப்பதில் என்ன பலன்? தண்ட, காஷ்ட, கமண்டலம் ஆகியவற்றை தரித்து தான் ஒரு சன்னியாசி என்று புகழ்பெற்றால் அதனால் ஆகும் பலன்தான் என்ன?.

***

No comments:

Post a Comment