Monday, July 18, 2022

[பத்யம் #67] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

[பத்யம் #67] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)

தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

[பத்யம் #67]

ஆலிபுது3 விக்3ஞான லக்ஷண

ஸ்தூ2 ஸூக்ஷ்மத்3ரூப லக்ஷ்மீ

லோல தத்தத்3ரூப நாமகபி4ன்ன ஸர்வத்ர |

லீலெயிம் வ்யாப்திஸுத ஹ்ருத்கீ1

லாலஜதி3 ஸமனெனிஸி சேதன

ஜாலத3லி க்ரீடி3பன பி3ம்பா3ன்வயதி3 திளியுவுது3 ||67 

விக்ஞான லக்ஷண - விசேஷ ஞானத்தின் லட்சணங்களை; ஆலிபுது - கேளுங்கள்; லட்சுமிலோல - ஸ்ரீலட்சுமியின் தலைவனான ஸ்ரீஹரி; ஸ்தூல ஸூக்ஷ்மத்ரூப - ஸ்தூல, ஸூக்ஷ்மங்களில்; தத்தத்ரூப - அந்தந்த ரூபங்களில்; நாமகபின்ன - வெவ்வேறு (அந்தந்த) நாமங்களை ஏற்று; ஸர்வத்ர - அனைத்து இடங்களிலும்; லீலெயிம் வ்யாப்திஸுத - தன்னுடைய லீலையினால் வியாபித்தவாறு; ஹ்ருத்கீலாலஜதி - நம் இதய கமலத்திலும்; சேதன ஸமனெனிஸி - ஜீவனும் அவனும் ஒன்றே என்று எண்ணும்படியாக; ஜாலதலி - அனைவரையும் மயக்கியவாறு; க்ரீடிபன - செயல்களை செய்விப்பவனை, பிம்பான்வயதி - நம் பிம்பமூர்த்தி என்ற பெயரில்; திளியுவுது - அறிய வேண்டும். 

பிம்பமூர்த்தியின் லட்சணங்களை இந்த பத்யத்தில் விளக்குகிறார் ஸ்ரீரமாகாந்த விட்டல தாஸர். 

விசேஷ ஞானத்தின் லட்சணங்களைப் பற்றி சொல்கிறேன், கேளுங்கள். ஸ்ரீலட்சுமியின் தலைவனான ஸ்ரீஹரி, ஸ்தூல ஸூக்ஷ்மங்களில், அந்தந்த ரூபங்களில் வெவ்வேறு (அந்தந்த) நாமங்களை ஏற்று, அனைத்து இடங்களிலும் தன்னுடைய லீலைகளால் வியாபித்தவாறு, நம் இதய கமலத்திலும், ஜீவனும் அவனும் ஒன்றே என்று எண்ணும்படியாக அனைவரையும் மயக்கியவாறு இருக்கிறான். அத்தகைய செயல்களை செய்விப்பவனை நம் பிம்பமூர்த்தி என்ற பெயரில் அறிய வேண்டும். 

சேதனாசேதன விலக்ஷண

நூதன பதா3ர்த்த23ளொளகெ3 3லு

நூதனதி ஸுந்த3ரகெ ஸுந்தர ரஸக்கெ ரஸரூப |

ஜாதரூபோத3 4வாத்3யரோ

ளாததப்ரதிம ப்ரபா4 4

ராதளதொ3 ளெம்மொட3னெ ஆடுதலிப்ப நம்மப்ப ||(2-23) 

நம்மைப் படைத்தவனான ஸ்ரீபரமாத்மன், ஜீவ ஜட பதார்த்தங்களிலிருந்து வேறுபட்டவன். புதிய பதார்த்தங்களில் புதிதாக இருப்பவன். அழகான பதார்த்தங்களில் அழகாக இருப்பவன். திரவ பதார்த்தங்களில் திரவமாக இருப்பவன். பிரம்ம ருத்ரர்களில் நிலைத்திருப்பவன். அபாரமான மகிமையுள்ளவன். ஆனாலும், அவன் எப்போதும் நம்முடன் ஆட்டம் ஆடிக்கொண்டிருப்பவன். 

ஸந்தியாவந்தன மந்திரத்தில் நாம் சொல்வது இது. த்யேயஸ்ஸதா ஸவித்ரு மண்டல மத்யவர்த்தி நாராயண ஸரஸிஜாஸன ஸன்னிவிஷ்ட: கேயூரவான் மகர குண்டலவான் கிரீடி ஹாரி த்ருத ஷங்க சக்ர: ... நம் இதய கமலத்தில் இருக்கும் பிம்பமூர்த்தியின் லட்சணம் இவ்வாறு இருக்கிறது என்று சிந்திக்க வேண்டும். 

ஜீவர்களில் பகவந்தன் பிம்பமூர்த்தியாக இருக்கிறான் என்று சொல்வதான ஹரிதாஸர்கள் தேவரநாமாக்கள் அனேகம் உண்டு. ஸ்ரீஜகன்னாததாஸர் தனது ஒரு கிருதியில் இவ்வாறு கூறுகிறார். 

ஜீவாந்தர்கத ஜீவநியாமக ஜீவபிரக்ஷண ஜீவனகம்

ஜீவாதாரக ஜீவரூப ராஜீவ பவ ஜனக ஜீவேஷ்வர ||

தாஸோஹம் தவ தாஸோஹம்

**

No comments:

Post a Comment