Wednesday, July 13, 2022

[பத்யம் #63] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

[பத்யம் #63] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)

தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

[பத்யம் #63]

ஶ்ரவணவே மஹ முக்2 கர்மவு

ஶ்ரவணவே 4வபீ4தி ஹரணவு

ஶ்ரவணதி3ந்த3லி ஞானப4க்தி விரக்தி ஸல்லுவுது3 |

ஶ்ரவணதி3ம் து3ஷ்கர்ம நாஷன

ஶ்ரவண மனுஜகெ3 மங்க3ளப்ரத3

ஶ்ரவண மாட33தனக தொ3ரெயது3 ஹரிய ஸுக்3ஞான ||63 

ஸ்ரவணவே - சிரவணமே; மஹ முக்ய கர்மவு - மிகவும் முக்கியமான கர்மம் ஆகும்; பவபீதி ஹரணவு - பிறப்பு இறப்பு சுழற்சியின் பயத்தை போக்குகிறது; ஞான பக்தி விரக்தி - ஞான பக்தி விரக்தி ஆகியவற்றை; ஸல்லுவுது - அடையச் செய்கிறது; துஷ்கர்ம நாஷன - கெட்ட கர்மங்களை போக்குகிறது; மனுஜகெ - மனிதனுக்கு; மங்களப்ரத - மங்களத்தை கொடுக்கிறது; மாடததனக - செய்யாத வரைக்கும்; தொரெயது - கிடைக்காது; ஹரிய ஸுக்ஞான - ஸ்ரீஹரியைப் பற்றிய ஸுக்ஞானம் கிடைக்காது. 

சிரவணத்தின் சிறப்பினை இந்த பத்யத்தில் விளக்குகிறார் ஸ்ரீரமாகாந்த விட்டல தாஸர். 

சிரவணமே மிகவும் முக்கியமான கர்மம் ஆகும். பிறப்பு இறப்பு சுழற்சியின் பயத்தினை இது போக்குகிறது. ஞான பக்தி விரக்தி ஆகியவற்றை அடையச் செய்கிறது. கெட்ட கர்மங்களை போக்குகிறது. மனிதனுக்கு மங்களத்தைக் கொடுக்கிறது. இதனை செய்யாத வரை, ஸ்ரீஹரியைப் பற்றிய ஸுக்ஞானம் கிடைக்காது. 

ஸ்ரவணவே மஹா முக்ய கர்ம ஞானிகளிகெ

ஸ்ரவணவில்லத தனக ஆவது தொரகது

ஸ்ரவணதிந்தலி சதத ஞான பகுதி விரகுதி

ஸ்ரவணவெ சகலக்கு காரண காரணவோ

ஸ்ரவணவெ ஸ்ரீஹரிய தாத்விக ப்ரஸா

தவனு மாடிகொட்டு முக்திகெ ஐதிபரோ 

என்று ஸ்ரீவிஜயதாஸர் தனது ஒரு ஸுளாதியில் ஸ்ரவணத்தின் சிறப்பினை விளக்குகிறார். பகவந்தனின் மகிமையை அறிவதற்கு, சத்கர்மங்களை செய்வதற்கு, நித்ய - நைமித்திக சாதனைகளை செய்வதற்கு, மற்றவரை ஞானாதிகாரியாக மாற்றுவதற்கு - இப்படி பல செயல்களுக்கு முதல் படி ஸ்ரவணமே ஆகும் - என்கிறார்.

***


No comments:

Post a Comment