Tuesday, July 26, 2022

[பத்யம் #75] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

[பத்யம் #75] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)

தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

[பத்யம் #75]

தே4னிஸுத ஸ்வாதந்த்ர்ய அனு ஸந்

தா4 ஹரியொளு நிலிஸி சலிஸத3

ஞானயோக3தொ3ளனிது கர்மவ நிர்கு3ணாத்மககெ3 |

மாணத3லெ அர்ப்பிஸலு கைகொ3ண்

டா3னதே3ஷ்டப்ரதனு பொரெவனு

தானே பேளிஹனர்ஜுனகெ கீ3தெயொளு ஸ்ரீகிருஷ்ண ||75 

ஸ்வாதந்த்ர்ய - ஸ்ரீஹரியின் ஸ்வாதந்த்ர்யத்தை; தேனிஸுத - தியானம் செய்தவாறு; ஹரியொளு - ஸ்ரீஹரியில்; அனு ஸந்தான - அனுசந்தானத்தை; நிலிஸி - நிறுத்தி; சலிஸத - சலனமில்லாத (திடமான) ; ஞானயோகதொளு - ஞானயோகங்கள்; இனிது - (செய்யப்பட்ட) அனைத்து; கர்மவ - கர்மங்களையும்; மாணதலெ - தவறாமல்; அர்ப்பிஸலு - அர்ப்பணம் செய்ய; ஆனதேஷ்டபிரதனு - வணங்குபவர்களுக்கு இஷ்டார்த்தங்களை நிறைவேற்றுபவனான ஸ்ரீஹரி; கைகொண்டு - அவற்றை ஏற்றுக் கொண்டு; பொரெவனு - காக்கிறான்; கீதெயொளு - ஸ்ரீபகவத்கீதையில்; ஸ்ரீகிருஷ்ண - ஸ்ரீகிருஷ்ணன்; அர்ஜுனகெ - அர்ஜுனனுக்கு; தானே பேளிஹனு - தானே கூறியிருக்கிறான்.

ஸ்ரீஹரியின் ஸ்வாதந்த்ர்யத்தை தியானம் செய்தவாறு, ஸ்ரீஹரியின் அனுசந்தானத்தை நிறுத்தி, திடமான ஞானயோகங்களால் அனைத்து கர்மங்களையும் தவறாமல் அவனுக்கே அர்ப்பணம் செய்ய, இவ்வாறு செய்பவர்களுக்கு இஷ்டார்த்தங்களை அந்த ஸ்ரீஹரி நிறைவேற்றுகிறான். ஸ்ரீபகவத்கீதையில் ஸ்ரீகிருஷ்ணன் அர்ஜுனனுக்கு இதையே கூறியிருக்கிறான் என்பதை அறிய வேண்டும்.

கர்மணாமனாரம்பான் நைஷ்கர்ம்யம் புருஷோஷ்னுதே |

ஸன்யஸனாதேவ ஸித்திம் ஸமதி கச்சதி ||

நியதம் குரு கர்மத்வம் கர்மஜ்யாயோஹ்ய கர்மண: |

ததர்த்தம் கர்மகௌந்தேய முக்தஸங்க: ஸமாசர ||

(பகவத் கீதை) 

அனைத்து கர்மங்களையும் விடுவதே நைஷ்காம்யம் என்றில்லை. காம்யகர்மங்களை விடுவதாலேயே புருஷர்கள் சத்கதியை அடைவதில்லை. வர்ணாசிரமத்திற்கேற்ப நித்யகர்மங்களை செய். ‘தஸ்மாதஸக்த: ஸததம் கார்யம் கர்ம ஸமாசர அதாவது, கர்மத்தின் பலனை எதிர்பார்க்காமல், ஸ்ரீவிஷ்ணு ப்ரீதிக்காக கர்மத்தை செய் என்று பொருள்.

****

No comments:

Post a Comment