Saturday, April 29, 2023

#151 - 440-441-442 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

 440. ஸ்ரீ அர்த்தா2 நம:

ஹரித்3வேஷிக3 ஸங்க34 நிவாரிபஅர்த்த2

ஶரணு நமோ ஶரணு 4க்தரன்ன போஷிஸுவி

பொரெதி3 விபீ4ஷணனன்ன ராவண ஸங்க3தி3ந்த3

ஸுரரன்ன பிரஹ்லாத3ன்ன ஹரித்3வேஷி தை3த்யனிந்த3

ஹரி த்வேஷிகளின் சங்கம் என்னும் பயத்தினை போக்குபவனே. அர்த்தனே. உனக்கு என் நமஸ்காரங்கள். உன்னை சரணடைந்த பக்தர்களை நீ காக்கிறாய். விபீஷணனை, ராவணனின் சங்கத்திலிருந்து காத்தாய். பிரகலாதனை ஹரித்வேஷியான ஹிரண்யகசிபுவிடமிருந்து காத்தாய். 

441. ஸ்ரீ அனர்த்தா2 நம:

ப்ராணக3ளல்லி ஆத3ரதி3 விஹாரமாள்ப முக்2

ப்ராணனன்ன ஞான அன்னாதி3யல்லி ப்ரவர்த்திஸுவ

அனர்த்த2நமோ வாயுதே3வர அஷ்ட அர்த்த2 நீனே

நீ அப4க்தரிகெ3 அர்த்த2ப்ரத3னல்ல 4க்தேஷ்டதா3 

அனைத்து பிராணர்களிலும் இருந்து செயல்களை செய்விக்கிறாய். முக்யபிராணரை, ஞான, அன்னம் ஆகியவற்றில் இருக்குமாறு செய்கிறாய். அனர்த்தனே உனக்கு என் நமஸ்காரங்கள். அஷ்ட கர்த்ருத்வங்களை செய்பவன் நீயே. உன்னை வணங்காதவர்களுக்கு (அபக்தர்களுக்கு) நீ அவர்களின் இஷ்டங்களை வழங்குவதில்லை. பக்தர்களுக்கு அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுகிறாய். 

442. ஸ்ரீ மஹாகோஷாய நம:

மஹாத4 ஸமூஹபூர்ணமஹாகோஷனேநமோ

மஹா ஜ்யோதிர்மய ஆனந்த3 3லாதி3 பூர்ண

மஹாலக்ஷ்மி மாயா ஜயாக்ருதி ஶாந்திதே3வி ஸேவ்ய

மஹான் அன்னமயாதி3 ரூபஸத்யம் ஞானம் அனந்தம் 

மஹா தனங்களின் சமூகங்களை முழுமையாக கொண்டவனே மஹாகோஷனே உனக்கு என் நமஸ்காரங்கள். ஜ்யோதிர்மயனே. ஆனந்த பலாதிபூர்ணனே. மஹாலட்சுமி, மாயா, ஜயா, க்ருதி, ஶாந்திதேவி ஆகியோரால் வணங்கப்படுபவனே. அன்னமயாதி அனைத்து கோஷங்களிலும் இருப்பவனே. ஸத்யம் ஞானம் அனந்தம் பிரம்ம என்று அழைகப்படுபவனே.

***


Thursday, April 27, 2023

#150 - 437-438-439 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

 437. ஸ்ரீ ப்ரமாணாய நம:

ஶத்ருக3ளிகெ3 3ஹு ஹெச்சு து3க்க2ப்ரத3ப்ரமாணம்

ஶிர பா3கி3 நமோ எம்பெ3 முர நரகாதி3 ஹந்தா

க்ரூர ஆதி3 ஹிரண்யாக் மது4 கைடபாதி33

தரிதி3 பூ44 ஹயாஸ்யாதி3ரூப 4க்தபால 

எதிரிகளுக்கு அதிகமான துக்கத்தை கொடுப்பவனே. ப்ரமாணனே. உனக்கு தலை வணங்கி நமஸ்காரம் செய்கிறேன். முர, நர ஆகிய தைத்யர்களை கொன்றவனே. ஆதி ஹிரண்யாக்‌ஷ, மது கைடப ஆகிய தைத்யர்களை கொன்றாய். ஹயவதனனே. பக்தர்களை அருள்பவனே. 

438. ஸ்ரீ பீ3ஜாய நம:

விஶேஷதி3 4க்தரிகெ3 ஸுக2வீவிபீ4ஜம்நமோ

மத்ஸ்யாதி3 ரூபதி3ம் ஸத்யவ்ரத ஸுரவ்ருந்த3மனு

கிஶோர கஷ்யப ஜாயா பி3ராம்ஹணரு விபீ4ஷண

ஶோத3 பாண்ட3 ஸத்34க்த 4ர்ம ஸுக2காரண 

உன் பக்தர்களுக்கு விசேஷமான சுகத்தை (முக்தியை) கொடுப்பவனே. பீஜனே. உனக்கு என் நமஸ்காரங்கள். ஸத்ய வ்ரத ராஜனுக்கு மத்ஸ்ய ரூபத்தினால் அருளியவனே. மனுவிற்கு, கஷ்யப ரிஷிகளுக்கு, விபீஷணனுக்கு, யசோதைக்கு, பாண்டவர்களுக்கு என உன் சத் பக்தர்களின் சுகத்திற்கு காரணம் ஆனவனே. 

439. ஸ்ரீ அவ்யயாய நம:

நம்ம ரத23ளன்ன கஷ்டவில்லதெ3 ஶத்ருக3

ஸமூஹ முந்தெ3 நடெ3ஸுவஅவ்யயம்நமோ எம்பெ3

நம்ம தே3ஹரதா2ந்தஸ்த2னு விஷய ரூப ஶத்ரு

நம்மன்ன பா3தி4ஸதெ3 காய்வ பார்த்த2ஸாரதி2 கிருஷ்ண 

நம் தேகம் என்னும் ரதத்தினை எதிரிகளின் முன்னே எவ்வித கஷ்டமும் இல்லாமல் நடத்துபவனே. அவ்யயனே. உனக்கு என் நமஸ்காரங்கள். நம் தேகம் என்னும் ரதத்தில் இருப்பவனே. விஷய ரூபனே. எதிரிகள் நம்மை தாக்காமல், காப்பவனே. ஸ்ரீபார்த்தசாரதியே ஸ்ரீகிருஷ்ணனே.

***