Monday, April 10, 2023

#133 - 387-388-389 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

387. ஸ்ரீ விகர்த்ரே நம:

விஶேஷ 3லதேஜஸ்கர்தவிகர்தாநமோ எம்பெ3

அஸ்வதந்த்ர ஜீவனந்தர்க3 நீனு தத்தத்யோக்3

மனஸ்ஸரிது விவிதா4க்ரியா மாடி3 மாடி3ஸுவி

லேஶவு வைஷம்ய நைர்க்4ருண்ய ஸ்வப்ரயோஜன இல்ல 

விசேஷமான வலிமை, தேஜஸ்களை கொண்ட விகர்தனே உனக்கு என் நமஸ்காரங்கள். அஸ்வதந்த்ரனான ஜீவனின் அந்தர்கதனாக இருப்பவன் நீயே. ஜீவர்களின் யோக்யதைகளை அறிந்து, பற்பல செயல்களை செய்து, செய்விக்கிறாய். உன்னிடம் சிறிதளவும் வைஷம்ய தோஷம் இல்லை. மூன்று குணங்களுக்கும் அப்பாற்பட்டவன் நீ. நீ செய்யும் செயல்களால் உனக்கு எவ்வித பிரயோஜனமும் இல்லை. 

388. ஸ்ரீ 3ஹனாய நம:

கோ3குது3ரெ மொத3லாத3 தேஜோவீர 3லாதி3

ப்ராபகனு ஶ்ரயனு3ஹனநமோ நினகெ3

ஸுக2போ43 தேஜஸ் ஓஜஸ் ஆயதனனாகி3ருவி

கோ33ளு மொத3லாத3 ப்ராணிக3ளிகெ3 க்ஷேமதா4 

பசு, குதிரை ஆகியற்றின் வேகம், வீரம், வலிமை ஆகியவற்றை கொடுப்பவன் நீயே. கஹனனே. உனக்கு என் நமஸ்காரங்கள். சுகமயமானவனே. தேஜஸ், ஓஜஸ் ஆகியவற்றின் இருப்பிடமாக இருப்பவனே. பசுக்கள் முதலான பிராணிகளுக்கு ஆஸ்ரயன் நீயே 

389. ஸ்ரீ கு3ஹாய நம:

கு3ப்தவாகி3ருவந்த2கு3நமோ நமோ நினகெ3

அந்தஸ்த2னாகி3த்3து3 காணதெ3 க்ருதி நடெ3ஸுவி

அதி4ஷ்டான ஸுர நரரு அரியத3 சர்யனு

தே3ஹினாம் மந்த த்4ருவாய அனுபலப்4யனே 

மறைந்திருப்பவனே குஹனே. உனக்கு என் நமஸ்காரங்கள். நீ யாருக்கும் ப்ரத்யட்சமாக தென்படாமல் இருந்து, செயல்களை செய்விக்கிறாய். தேவதைகள், ஜீவர்கள் அறியாத செயல்களை அருள்பவனே. 

***


No comments:

Post a Comment