Wednesday, April 5, 2023

#128 - 372-373-374 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

372. ஸ்ரீ மார்க்3கா3 நம:

தன்னய ஸ்வரூப ப்ராப்திமாடி3ஸுவமார்க்க3நமோ

ஆம்னாய ஸச்சாஸ்திர விசாரமாடி3ஸி அபரோக்

ஞானவித்து தருவாய மோக்ஷப்ராப்தி ஆகோ3மார்க்க3

வன்னு ஒத3கி3ஸுவி வ்யாஸ ஹயஶீர்ஷ கபில 

ஜீவனது ஸ்வரூபத்தை கிடைக்கச் செய்யும் மார்க்கனே உனக்கு என் நமஸ்காரங்கள். நற்சாஸ்திரங்களை அறிமுகம் செய்து, அபரோக்‌ஷத்தைப் பற்றிய ஞானம் அளித்து, பிறகு மோட்சத்தை அடையும் வழியை காட்டுகிறாய். வ்யாஸனே. ஹயவதனனே. கபிலனே 

373. ஸ்ரீ ஹேதவே நம:

து3ஷ்டஜன ஸம்ஹாரகாரணஹேதுநமோ எம்பெ3

து3ஷ்டஜன ஸம்ஹார நின்ன 3லானுக்ரஹ பி3ட்டு

எஷ்டே யத்னிஸித3ரு ஆக3து3 நின்ன 3லவே ஹேது

கிருஷ்ணானுக்3ரஹ 3லவே கௌரவர நா ஹேது 

துஷ்டஜனர்களை கொல்பவனே. ஹேதுவே உனக்கு என் நமஸ்காரங்கள் உன்னுடைய அருள் இல்லாமல், கெட்டவர்களை அழிப்பது என்பது யாராலும் ஆகாது. கிருஷ்ணனான உன் அருள் இருந்ததாலேயே, கௌரவர்களின் நாசம் ஆனது. 

374. ஸ்ரீ தா3மோத3ராய நம:

ஶத்ருக3ளிகெ3 வ்யதெ2 ஈவ ஸர்வதிளித3 பி3ரம்மா

தி தே3வதாந்தர்யாமிதா3மோத3நமோ நினகெ3

தா3மோத3 ப்ரளயோத3 விஹாரியு தா3ஶீலர்கா3

னந்த ஈவ இந்தி3ரியஜித் முனிப4க்த ப்ரியஸேவ்ய 

எதிரிகளுக்கு பயத்தைக் கொடுப்பவனே. அனைத்தையும் அறிந்தவனான பிரம்மனின் அந்தர்யாமியாக இருப்பவனே. தாமோதரனே. உனக்கு என் நமஸ்காரங்கள். பிரளய காலத்தில் இருப்பவனே. தான ஷீலர்களுக்கு ஆனந்தத்தைக் கொடுப்பவனே. இந்திரியங்களை அடக்கியவனே. முனிவர்களால், பக்தர்களால் வணங்கப்படுபவனே.

***

No comments:

Post a Comment