Thursday, April 20, 2023

#143 - 416-417-418 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

416. ஸ்ரீப்ராணதா3 நம:

விவித3வாகி3 ஜன்ம நிவாரகப்ராணத3னே

ஸர்வதா3 நமோ நினகெ3 ஶோகாதி3 கஷ்டனாஶகனே

ஸர்வதா3 ஸம்பூர்ண ஞான ஆனந்தா3தி3 ப்ரக்ருஷ்ட நீ

ஸர்வப4க்தருக3ளிகெ3 ப்ராணகொட்டு ஸந்தெயிஸுவி

பற்பல வகையிலான பிராணங்களை நிவாரணம் செய்பவனான ப்ராணதனே. உனக்கு எப்போதும் என் நமஸ்காரங்கள். அனைத்து வித கஷ்டங்களையும் பரிகரிப்பவனே. எப்போதும் முழுமையான ஞான, ஆனந்தாதி செல்வங்களைக் கொண்டவனே. அனைத்து பக்தர்களுக்கும் ப்ராணனைக் கொடுத்து நீயே அருள்கிறாய்.

417. ஸ்ரீ ப்ரணவாய நம:

ப்ரக்ருஷ்ட 3லானந்தோ3த்பாத3கனேப்ரணவநமோ

ப்ரக்ருஷ்டத்வதி3ம்ப்ரஸுக23லசேஷ்டகத்வதி3ம்

உத்க்ருஷ்ட நிர்தோ3 ஞானபூர்ணத்வதி3ந்த3லி

ரீதி ஶேஷ கு3ணதா4 ப்ரணவனு ஸ்ரீ 

மிகச் சிறந்த வலிமை, ஆனந்தம் ஆகியவற்றை உருவாக்குபவனே. ப்ரணவனே உனக்கு என் நமஸ்காரங்கள். மிகச் சிறந்தவன் ஆகவே ‘ப்ர. சுக, வலிமை ஆகியவற்றை கொண்டிருப்பவன் ஆகவே ‘ண. மிகச்சிறந்த, தோஷங்கள் அற்ற, ஞானத்தை முழுமையாக கொண்டிருப்பதால் ‘வ - இவ்வாறாக அனேக குணங்களைக் கொண்டிருப்பவனே. லட்சுமிதேவியின் தலைவனே.

 418. ஸ்ரீ ப்ருத2வே நம:

4க்த அர்பித ஹவிஸ்ஸலி ப்ரஸன்ன மன

ஸந்த்ருப்தப்ருதுநமோ ஸ்தோத்ர ஸ்வீகரிஸோ நீனு

4க்தக்ருத த்வத்ப்ரிய ஸ்துதி பூஜா யக்ஞ ஹவிஸ்

ஹிததி3 நீ கொண்டொ3லிவி ப்ரக்2யாத கருணாம்பு3தே4

 பக்தர்களின் சமர்ப்பிக்கும் ஹவிஸ்ஸினை மிகவும் மகிழ்ந்து ஏற்றுக் கொள்பவனே. ப்ருதுவே உனக்கு என் நமஸ்காரங்கள். இந்த ஸ்தோத்திரத்தினையும் ஏற்றுக் கொள்வாயாக. பக்தர்களால் செய்யப்படும் ஸ்துதி, பூஜை, யக்ஞ, ஹவிஸ் ஆகியவற்றை மிகவும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறாய். புகழ் பெற்றவனே. கருணைக்கடலே.

***


No comments:

Post a Comment