ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
437. ஸ்ரீ ப்ரமாணாய நம:
ஶத்ருக3ளிகெ3 ப3ஹு ஹெச்சு து3க்க2ப்ரத3 ‘ப்ரமாணம்’
ஶிர பா3கி3 நமோ எம்பெ3 முர நரகாதி3 ஹந்தா
க்ரூர ஆதி3 ஹிரண்யாக்ஷ மது4 கைடபாதி3க3ள
தரிதி3 பூ4த4ர ஹயாஸ்யாதி3ரூப ப4க்தபால
எதிரிகளுக்கு அதிகமான துக்கத்தை கொடுப்பவனே. ப்ரமாணனே.
உனக்கு தலை வணங்கி நமஸ்காரம் செய்கிறேன். முர, நர ஆகிய தைத்யர்களை கொன்றவனே. ஆதி ஹிரண்யாக்ஷ,
மது கைடப ஆகிய தைத்யர்களை கொன்றாய். ஹயவதனனே. பக்தர்களை அருள்பவனே.
438. ஸ்ரீ பீ3ஜாய நம:
விஶேஷதி3 ப4க்தரிகெ3 ஸுக2வீவி ‘பீ4ஜம்’ நமோ
மத்ஸ்யாதி3 ரூபதி3ம் ஸத்யவ்ரத ஸுரவ்ருந்த3மனு
கிஶோர கஷ்யப ஜாயா பி3ராம்ஹணரு விபீ4ஷண
யஶோத3 பாண்ட3வ ஸத்3ப4க்த த4ர்ம ஸுக2காரண
உன் பக்தர்களுக்கு விசேஷமான சுகத்தை (முக்தியை) கொடுப்பவனே.
பீஜனே. உனக்கு என் நமஸ்காரங்கள். ஸத்ய வ்ரத ராஜனுக்கு மத்ஸ்ய ரூபத்தினால் அருளியவனே.
மனுவிற்கு, கஷ்யப ரிஷிகளுக்கு, விபீஷணனுக்கு, யசோதைக்கு, பாண்டவர்களுக்கு என உன் சத்
பக்தர்களின் சுகத்திற்கு காரணம் ஆனவனே.
439. ஸ்ரீ அவ்யயாய நம:
நம்ம ரத2க3ளன்ன கஷ்டவில்லதெ3 ஶத்ருக3ள
ஸமூஹ முந்தெ3 நடெ3ஸுவ ‘அவ்யயம்’ நமோ எம்பெ3
நம்ம தே3ஹரதா2ந்தஸ்த2னு விஷய ரூப ஶத்ரு
நம்மன்ன பா3தி4ஸதெ3 காய்வ பார்த்த2ஸாரதி2 கிருஷ்ண
நம் தேகம் என்னும் ரதத்தினை எதிரிகளின் முன்னே எவ்வித
கஷ்டமும் இல்லாமல் நடத்துபவனே. அவ்யயனே. உனக்கு என் நமஸ்காரங்கள். நம் தேகம் என்னும்
ரதத்தில் இருப்பவனே. விஷய ரூபனே. எதிரிகள் நம்மை தாக்காமல், காப்பவனே. ஸ்ரீபார்த்தசாரதியே
ஸ்ரீகிருஷ்ணனே.
***
No comments:
Post a Comment