ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
378. ஸ்ரீ வேக3வதே நம:
வேத மொத3லாத ஸதா3க3மோக்த கு3ணப்ரவாஹ
வந்த வேக3வான் நமோ க3ஜரக்ஷக வேக3வந்த
அதிவேக3வுள்ள ஹய வாஜி அர்வ அஶ்வ இந்த2
குது3ரெக3ளிகெ3 வேக3 கொடு3வவ ஹயக்3ரீவ
வேதம் முதலான அனைத்து ஆகமங்களிலும் சொல்லப்பட்டுள்ள
குண ப்ரவாகங்களை கொண்டவனே. வேகவான் உனக்கு என் நமஸ்காரங்கள். வேகமாக வந்து கஜேந்திரனை
காத்தவனே. அதிகமான வேகத்தைக் கொண்ட குதிரைகளுக்கு வேகத்தை கொடுப்பவனே. ஹயக்ரீவனே.
379. ஸ்ரீ அமிதாஶனாய நம:
விஶேஷக்ஞான ப்ராபக ‘அமிதாஶனனே’ நமோ
விஶேஷஞான பி3ம்பா3பரோக்ஷஞான கொடு3வி நீ
விஶேஷ விலக்ஷண ஶ்ரேஷ்ட அதிஶய ஆனந்த3
ஶாஶ்வததி3 அனுப4விஸுவவனு ஸுக2பூர்ண
விஶேஷமான ஞானத்தை கொடுப்பவனே.
அமிதாஶனனே உனக்கு என் நமஸ்காரங்கள். விஶேஷஞானத்தைக் கொடுத்து, பிம்ப அபரோக்ஷ ஞானத்தை நீ கொடுக்கிறாய்.
நீ அனைத்தையும் விட வேறுபட்டவன். ஸர்வோத்தமன். அதிஶய
ஆனந்தத்தை அனுபவிப்பவன். ஸுகபூர்ணன் நீயே.
380. ஸ்ரீ உத்3ப4வக்ஷோப4ணாய நம:
ஜன்மாதி3 க்லேஶ நாஶக ‘உத்3ப4வக்ஷோபண’ நமோ
அனிமித்தப4க்தி ஶ்ரவணாதி3ஜன்ய நிஶ்சித ஸத்
ஞானிகெ3 அபரோக்ஷவித்து ஶைவல ப்ரக்ருதிய
ப3ந்த4 நீகி3ஸி மோக்ஷவீவி க்லேஶ நாஶ ஸுக2தா3
ஜன்ம, மரண ஆகிய துன்பங்களை போக்குபவனே. உத்பக்ஷோபணனே
உனக்கு என் நமஸ்காரங்கள். எதையும் எதிர்பார்க்காமல், பக்தி, ஸ்ரவணாதிகளை செய்யும் ஸத்
ஞானிகளுக்கு அபரோக்ஷத்தை கொடுத்து, ப்ரக்ருதி பந்தனத்தை விலக்கி, மோட்சத்தை கொடுக்கிறாய்.
துன்பங்களை போக்கி, சுகத்தை கொடுப்பவனே.
***
No comments:
Post a Comment