Saturday, April 15, 2023

#138 - 401-402-403 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

 401. ஸ்ரீ ராமாய நம:

அமித 3லரூபனெராமநமோ நமோ எம்பெ3

ரமாதே3வி ஸீதாரமண ஸ்ரீராம 4த்3 பாஹி

அமல பூர்ணானந்த3 லோகரமண ராமசந்த்ர

ரமதீ ரமயதீ ஹனுமதா3தி3 4க்தஸேவ்ய 

எல்லையற்ற பல ரூபத்தைக் கொண்டவனே. ஸ்ரீராமனே. உனக்கு என் நமஸ்காரங்கள். ரமாதேவி, ஸீதாதேவியின் ரமணனே. ஸ்ரீராமபத்ரனே எங்களை அருள்வாயாக. களங்கமற்ற பூர்ணானந்தனே. உலகைக் காப்பவனே. ஸ்ரீராமசந்திரனே. ஸ்ரீலட்சுமிதேவி, பிரம்மன், வாயுதேவர் ஆகிய அனைத்து பக்தர்களாலும் வணங்கப்படுபவனே. 

402. ஸ்ரீ விராமாய நம:

ஶ்ரேஷ்ட அக்3ன்யாதி3 தே3வஸ்வாமியேவிராமநமோ

ஶ்ரேஷ்டதம ஸர்வக்ஞ ஸுக2பூர்ண அனக4 ரமா

ஶ்லிஷ்டனு நீ 3லானந்த3 ஸக்ஞான பூர்ணராம

கட்டிஸி ஸேதுவ யுத்34 மாடி3 ராவணனன்ன கொந்தி3 

மிகச் சிறந்தவனே, ஸர்வோத்தமனே, ஸ்வாமியே. விராமனே உனக்கு என் நமஸ்காரங்கள். ஸர்வக்ஞனே. சுகபூர்ணனே. அழிவில்லாதவனே. ஸ்ரீரமாதேவியுடன் எப்போதும் இருப்பவனே. பல, ஆனந்த, சுக, ஞான பூர்ணனாக இருக்கிறாய். கடலில் ஸேதுவை கட்டி, ராவணனுடன் போர் புரிந்து, அவனை கொன்றாய். 

403. ஸ்ரீ விரஜாய நம:

நிஷ்பாப நிர்தோ3விரஜநமோ நமோ நினகெ3

ப்ராக்ருத கு3ணத்ரயக3ளிந்3 நீனு நிஸ்ப்ருஹனு

ஸுபவித்ர விக்ஞான ஶ்வர்ய உத்தமத்வதி3வி

ஸுபூர்ண 3லானந்த3த்வஅனக4த்வதி3ம் 

பாவங்கள் அற்றவனே. தோஷங்கள் அற்றவனே. விரஜனே. உனக்கு என் நமஸ்காரங்கள். ப்ராக்ருத குணங்களான ஸத்வ, ரஜஸ், தமோ குணங்களுக்கு நீ அப்பாற்பட்டவன். பவித்ரமானவனே. யதார்த்த ஞானம் கொண்டவனே. அபாரமான செல்வங்களை கொண்டவனே ஸர்வோத்தமனே (ஆகையால் வி). பல, ஆனந்த ஆகியவற்றை முழுமையாகக் கொண்டவனே. (ஆகையால் ர). அழிவற்றவனே (ஆகையால் ஜ).

***


No comments:

Post a Comment