Wednesday, April 26, 2023

#149 - 434-435-436 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

 434. ஸ்ரீ விஸ்தாராய நம:

விஸ்த்ருதவாகி3ருவ 3ர்ஹிக3ள் யக்ஞத3லி வுள்ள

விஸ்தாரநமோ எம்பெ3 யக்ஞ ஸாத4னஸ்வாமி யக்3

விஸ்த்ருதவாகி3ஹவு நின்னய ஶஸ் லோகத3ல்லி

ஸாது4 4க்தபரிபால தை3த்ய கலிஜன ஹந்தா 

தர்ப்பைகளில், யக்ஞங்களில் அபாரமாக இருப்பவனே. விஸ்தாரனே. உனக்கு என் நமஸ்காரங்கள். யக்ஞத்திற்கான ஸாதனனே. யக்ஞங்கள் சிறப்பாக முடிய, உன்னுடைய புகழ் உலகத்தில் அதிகமாக பரவுகின்றன. ஸாதுக்களை, பக்தர்களை காப்பவனே. தைத்ய ஜனர்களை அழிப்பவனே. 

435. ஸ்ரீ ஸ்தா2வராய நம:

யுத்34 ப்ரஸக்த 4க்தரிகெ3 3லாதி33 ஈவு

த்ராதாஸ்தா2வரநமோ 3 வீர்ய தேஜாதி3பூர்ண

பத்மஜாண்ட3 நிர்மிஸி தத3ந்தஸ்த2 வஸ்துக3

உத்பாதி3ஸி ஆதா4ரனாகி3ருவி ஸத்தாதி3 தா3தா 

தகுதியான பக்தர்களுக்கு தக்க பலன்களை அருள்பவனே. ஸ்தாவரனே. உனக்கு என் நமஸ்காரங்கள். பல, வீர்ய, தேஜஸ் ஆகியவற்றை முழுமையாகக் கொண்டவனே. இந்த பிரம்மாண்டத்தை நிறுவி, அனைத்து வஸ்துக்களையும் படைத்து, அவை அனைத்திற்கும் ஆதாரமாக இருக்கிறாய். அவை அனைத்திற்கும் சக்தியை கொடுப்பவனே. 

436. ஸ்ரீ ஸ்தா2ணவே நம:

4க்தரிகெ3 3லாதி33ளன்ன கொட்டு 4க்தர்க3

3தியல்லி இருவி நீஸ்தா2ணுநமோ நமோ எம்பெ3

4க்தவர ருத்3ராந்தர்யாமித்வதி3 ஸஹ நீ ஸ்தா2ணு

எந்து3 ஹேளுவரு ஸ்தா2ணு முக்2யவாச்ய நீனே 

பக்தர்களுக்கு பலன்களைக் கொடுத்து, அவர்களின் அருகிலேயே இருக்கிறாய். ஸ்தாணுவே உனக்கு என் நமஸ்காரங்கள். பக்தர்களில் சிறந்தவரான ருத்ரனில் நீ அந்தர்யாமியாக இருப்பதாலும், ஸ்தாணு என்று அழைக்கப்படுகிறாய். ஸ்தாணு என்றால் உண்மையான / முதன்மையான அர்த்தம் நீயே.

***


No comments:

Post a Comment