Thursday, April 13, 2023

#136 - 396-397-398 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

 396. ஸ்ரீ பரமாய நம:

ஜராதி3ரஹிதராகி3 நின்ன ஸ்வரூப ஞான

இருவ நீபரமநமோ எம்பெ3 ஸதா3 தோ3ஷரஹித

4ரணீதே3வி ஸம்பா4ஷிஸித கொரவஞ்சிரூப

ஜராயுத1வல்ல லோகவிட3ம்ப3 சின்மாத்ரவு 

பிறப்பு, இறப்பு, முதுமை ஆகிய எதுவும் அற்றவனே. உன்னுடைய ஸ்வரூப ஞானத்தை கொண்டவனே. பரமனே. உனக்கு என் நமஸ்காரங்கள். எப்போதும் நீ தோஷ ரஹிதன். உன் திருமணத்திற்காக கொரவஞ்சி ரூபம் அணிந்து தரணிதேவியிடம் பேசியவனே. 

397. ஸ்ரீ ஸ்பஷ்டாய நம:

யக்3ஞதி3 அபி4வ்யக்தனாகு3ஸ்பஷ்டநமோ எம்பெ3

யக்ஞபூஜா ஸ்தோத்ர ஸவைராக்3 ஞானயுக் 4க்தி

சர்யக்கெ மெச்சி ஸ்வேச்செயலி வ்யக்தவாகு3வி மனு

யக்ஞ  நாம ஶன்ன ஸ்துஸிஸெ 3ந்து3 ரக்ஷிஸித3 

யக்ஞத்தினால் (நித்ய கர்மானுஷ்டங்களால்) மகிழ்ந்து அருள்பவனே. ஸ்பஷ்டனே உனக்கு என் நமஸ்காரங்கள். யக்ஞ, பூஜை, ஸ்தோத்திரம், சிறந்த வைராக்கியம், ஞானத்துடன் கூடிய பக்தி, ஆகிய இவற்றிற்கு  மெச்சி, உன் இஷ்டப்படியே நீ பக்தனுக்கு தரிசனம் அளிப்பாய். ஸ்வாயம்புவ மனு, யக்ஞ நாமகனான உன்னை வணங்கியதால் நீ வந்து அவனை காத்தாய். 

398. ஸ்ரீ துஷ்டாய நம:

ஸர்வதா3 ஆனந்த3 அனுப4ஶாலிதுஷ்டநமோ

நிர்வ்யாஜ 4க்தியலி ஸ்துதிஸி பூஜிதரல்லி

தே3 நீ ஸந்தோஷனாகி3 அனுக்3ரஹ ஒத3கு3வி

ஸேவெ 4க்திய மெச்சி ஹனுமகா3லிங்க3 இத்தி 

எப்போதும் ஆனந்தத்தையே அனுபவிப்பவனே. துஷ்டனே உனக்கு என் நமஸ்காரங்கள். எந்த வித பலன்களையும் எதிர்பார்க்காமல் பக்தியுடன் உன்னை வணங்குபவர்களில் ஸ்வாமியே நீ மகிழ்ந்து அருள்கிறாய். ஹனுமந்தனுக்கு அவரின் இப்படிப்பட்ட பக்தியை மெச்சி, ஆலிங்கனத்தை (ஸஹபோகத்தை) அளித்தவனே.

***


No comments:

Post a Comment