ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
413. ஸ்ரீ வைகுண்டா2ய நம:
யாவ ப்ரகாரத3லு விக்4னப்ரதிப3ந்த4கக3ளு
யாவாக3லு எல்லு இல்லத3 க3தி உள்ளவ நீனு
ஸ்ரீவரனே ‘வைகுண்ட2னே’ நமோ நினகெ3 விகுண்ட2
தே3விஸுத நிர்தோ3ஷ நித்ய ஆனந்த3 நிலயனு
எந்த வழியிலும், எவ்விதமான தடைகளும், பிரச்னைகளும்
எப்போதும் வராதவன் நீ. ஸ்ரீவரனே. வைகுண்டனே. உனக்கு என் நமஸ்காரங்கள். விகுண்ட என்னும்
தேவியின் மகனே. நிர்தோஷனே. நித்யானந்த நிலயனே.
414. ஸ்ரீ புருஷாய நம:
ஸோமரஸ ப3ஹுவாகி3 அர்ப்பிதவ ஹொந்து3வவ
ஸ்ரீ மனோஹர ‘புருஷ’ நமோ ஸம்பூர்ண ஐஶ்வர்ய
க்ஷேமபாத்ருத்வதி3 ‘பு’ ஆனந்த பூர்ணவத்வதி3 ‘ரு’
ஷட்3மஹா ஐஶ்வர்யத்வதி3 ‘ஷ’ எந்து3 நீ பிரஸித்3த4
ஸோமரஸங்களை அதிகமாக சமர்ப்பிப்பவனால் நீ அடையப்படுகிறாய்.
ஸ்ரீமனோகரனே. புருஷனே. உனக்கு என் நமஸ்காரங்கள். முழுமையான செல்வங்களை கொண்டவன் ஆகையால்
‘பு’. ஆனந்த பூர்ணமாக இருப்பதால்
‘ரு’. ஆறு வகையாக செல்வங்களை
கொண்டவன் ஆகையால் ‘ஷ’
ஆகவே புருஷ என்று பெயர் பெற்றாய்.
415. ஸ்ரீ ப்ராணாய நம:
ஶத்ருப்ராண அபஹர மாடு3வியோ ‘ப்ராண’ நமோ
ஸுத்ராத நீனெந்து3 ருத்3ராதி3 தே3வர்க3ளு பே3ட3லு
க்ஷிப்ரத3லேவெ ஶத்ருப்ராணக3ளன்ன கொள்ளுவி நீ
முக்தாமுக்தர ப்ரக்ருஷ்ட சேஷ்டகனு ப்ராண நாம
எதிரிகளின் பிராணனை நீ அழிக்கிறாய். ப்ராணனே உனக்கு
என் நமஸ்காரங்கள். எதிரிகளை அழிக்க முடியாத ருத்ர முதலான தேவர்கள், உன்னை வேண்டிக்
கொள்ள, நொடிப் பொழுதிலேயே, எதிரிகளின் பிராணங்களை நீ அழிக்கிறாய். முக்தாமுக்தர்களின்
செயல்களை நீயே உள்ளிருந்து செய்விக்கிறாய். ப்ராண நாமகனே.
***
No comments:
Post a Comment