Saturday, April 8, 2023

#131 - 381-382-383 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

381. ஸ்ரீ தே3வாய நம:

கொடு3வி அபீ4ஷ்டக3தே3நமோ நமோ எம்பெ3

கொடு3 முக்2 கர்த்ருத்வதி3ம் தே3 தா3த்ருத்வ லக்ஷண

ஶ்ரேஷ்டவரணீய அம்ருதத்வ தா3த்ருத்வ ஸ்வாமித்வ

இஷ்டத3க்ஞானஸுக2 க்ரீடா3வான் தே3 ஸ்ரீபதியே

அபீஷ்டங்களை நிறைவேற்றும் தேவனே. உனக்கு என் நமஸ்காரங்கள். உன்னுடைய முக்கிய கர்த்ருத்வத்தினாலேயே, அனைவருக்கும் நீ செய்ய வேண்டிய செயல்களை கொடுக்கிறாய். ஸர்வோத்தமனே. ஞானமய, சுகமயமானவனே. இவை அனைத்தையும் விளையாட்டினை போல செய்பவனே. தேவனே. ஸ்ரீபதியே. 

382. ஸ்ரீ 3ர்ப்பா4 நம:

ஜக3ஸ்ருஷ்ட்யாதி3 நிர்வாண ப்ரேரண இந்தா2 ஞானத3

த்வத்33ர்ப்பா4தி3ட்டுகொண்டி3ஸ்ரீக3ர்ப்ப4நமோ நினகெ3

பா43வதஸது3த்34வஸ்தா2 நிரோத4 லீலயா

க்3ருஹீத ஶக்தித்ருதியாயஎந்தி3ஹுது3 ஸ்ரீக3ர்ப்ப4 

ஜகத் ஸ்ருஷ்ட்யாதி அனைத்து செயல்களையும் செய்பவனே. இத்தகைய ஞானத்தினை உன்னுடைய கர்ப்பத்த்தில் வைத்துக் கொண்டிருப்பவனே. ஸ்ரீகர்ப்பனே உனக்கு என் நமஸ்காரங்கள். பாகவதத்தினால் புகழப்படுபவனே. உன்னுடைய விளையாட்டினால் அனைத்தையும் செய்பவனே. இத்தகைய சக்தியினை கொண்டிருப்பவனே. 

383. ஸ்ரீ பரமேஶ்வராய நம:

பாரமார்த்தி2 ஜக3ஜ்ஜன்மாதி3 கர்தனாத3

பரமேஶ்வரனேநமோ ஸர்வேஶ்வர ஸர்வஸ்வாமி

ஸுரக்ஷிப ஸ்வதந்த்ர ஸ்வாமிமத்துரமேஶ்வர

பரமேஶ்வர பரம எந்த3ரெ ஸர்வோத்தமனு ஶ்வரனு 

பாரமார்த்திக ஜகத்தினை ஜன்மாதி அனைத்து செயல்களை செய்பவனே. பரமேஶ்வரனே. ஸர்வேஶ்வரனே. ஸர்வ ஸ்வாமியே. அனைவரையும் காக்கும் ஸ்வதந்த்ரனே. ஸ்வாமியே. பரம என்றால் ஸர்வோத்தமன் என்று அர்த்தம். ஈ்வரனே.

***

No comments:

Post a Comment