Monday, April 17, 2023

#140 - 407-408-409 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

 407. ஸ்ரீ அனயாய நம:

அனயனெந்தெ3னிஸுவிநீ சேஷ்டாப்ராபக நமோ

அன்யராரிந்த3லு சேஷ்டிதனல்ல நீனே ஸ்வதந்த்ரனு

அன எந்தெ3னிஸுவ வாயு நியம்யனு நின்னிந்த3

ஆனந்தோ3த்3ரேகதி3 மாடி3ஸுவி ஸர்வஜகச்சேஷ்டா 

அனைத்து செயல்களையும் செய்யத் தூண்டுபவனே. அனயனே. உனக்கு என் நமஸ்காரங்கள். வேறு யாராலும் நீ செலுத்தப்படுபவன் இல்லை. நீ ஸ்வ்தந்த்ரன். அன எனப்படும் வாயுவை நீ நியந்த்ரணம் செய்கிறாய். அனைவருக்கும் மகிழ்ச்சியை கொடுக்கிறாய். அனைத்து உலகத்தையும் நீயே நியமனம் செய்கிறாய். 

408. ஸ்ரீ வீராய நம:

ஜக3த்ஸர்வவ காபாடு3வுத3ரல்லி ஸமரஹித

ஏகோத்தம நீவீரஸ்ரீபதியே நமோ நினகெ3

ரக்கஸ பன்னக3 3ருட3 தை3த்யவாரண ஸிம்ஹ

உக்3ரப3 வீரராக4 நாரஸிம்ஹ மாம் பாஹி 

உலகம் முழுவதையும் காப்பாற்றுவதில் உனக்கு சமம் என்று யாருமே இல்லை. வீரனே. ஸ்ரீபதியே. உனக்கு என் நமஸ்காரங்கள். அசுரர்களை அழிப்பவனே. ஶேஶ சயனனே. கருட வாகனனே. சிம்மத்தைப் போன்ற உக்ர பலத்தை கொண்டவனே. வீரராகவனே. நாரசிம்மனே. என்னை அருள்வாயாக. 

409. ஸ்ரீ ஶக்திமதாம் ஶ்ரேஷ்டாய நம:

ஸ்த2வனாதி3 ஶக்திமந்தரலி ஶ்ரேஷ்டதம நீனு

ஸர்வேஶக்திமதாம் ஶ்ரேஷ்டனேநமோ நமஸ்துப்4யம்

ஸர்வஸச்சக்தி பூர்ண நீதத்ர தத்ர ஸ்தி2தோ விஷ்ணு:

ஶத்தச்சக்தி ப்ரபோ44யன்எந்து3 நிர்ணய இஹுது3 

ஸ்தோத்திரங்களில், மந்திரங்களில் போற்றப்படும் உத்தமன் நீயே. ஸர்வேனே. ஶக்திமதாம் ஶ்ரேஷ்டனே. உனக்கு என் நமஸ்காரங்கள். அனைத்து நற்சக்திகளையும் கொண்டவன் நீயே. நிர்ணயத்தில் உன்னைப் பற்றி இவ்வாறு புகழப்பட்டுள்ளது.

***


No comments:

Post a Comment