ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
393. ஸ்ரீ ஸ்தா2னதா3ய நம:
வாகா3தி3 இந்தி3ரியாபி4மானி தே3வதெக3ள்கெ3 நின்ன
வக்த்ராதி3ஸ்தா2னக3ள கொட்டிருவி நீ ‘ஸ்தா2னத3’
பா3கி3 ஶிர நமோ எம்பெ3 நின்னிந்த்3ரியாது3த்பன்ன
ராகி3 ஆ ஆ நின்னிந்த்3ரிய ஆஶ்ரய ஹொந்து3திஹரு
வாக் முதலான இந்திரியாபிமானி தேவதைகளுக்கு உன் தொண்டை (தாடை) முதலான இடங்களை கொடுத்திருக்கிறாய். நீயே ஸ்தானத. உன்னை நான் வணங்குகிறேன். உன் இந்திரியங்களிலிருந்து அவரவர்கள் உற்பத்தி அடைந்து, கடைசியில் அந்த இந்திரியங்களிலேயே அவர்கள் லயம் அடைகின்றனர்.
394. ஸ்ரீ த்4ருவாய நம:
நிஶ்சலனாத3வ நீனு ‘த்4ருவனெந்தெ3னிபி’ நமோ
நீ சலிஸதெ3 ஸர்வதே3ஶகாலதி3 வ்யாபிஸிஹி
குஜல தேஜவாயு க2ம் மன அஹம் மஹதா3தி3
அசர அசரத3லி ஸ்தி2ரஸ்தா2யி ஸத்தாதி3தா3த
சஞ்சலம் அற்றவன் நீ. த்ருவனே. நீ அனைத்து காலங்களிலும், வ்யாபித்திருக்கிறாய். தண்ணீர், நெருப்பு, வாயு, மஹதாதி அனைத்து இடங்களிலும் நீ வ்யாபித்திருக்கிறாய். அனைவருக்கும் ஸத் ஆகிய அனைத்தையும் அருள்கிறாய்.
395. ஸ்ரீ பரர்த்3த4யே நம:
கோ3குது3ரெ மொத3லாது3வுக3ள ஸம்ருத்3தி4 ஈவி
ஸ்ரீகர ‘பரர்த்3தி4’ நமோ நமோ எம்பெ3 ஸதா3பூர்ண
பே3கா3த்3த3வக3ளனு கொட்டு வ்ருத்3தி4மாடி3ஸுவி நீ
அகி2ளேஷ மஹேஶ்வர்ய பூர்ண நீ ஸௌபா4க்3யதா3த
பசு, குதிரை முதலானவற்றை உற்பத்தி செய்கிறாய். ஸ்ரீகரனே. பரர்த்திதனே உனக்கு என் நமஸ்காரங்கள். எப்போதும் பூர்ணமானவனே. அனைவருக்கும் தேவையானவற்றைக் கொடுத்து, அனைத்தையும் / அனைவரையும் நீ வளர்க்கிறாய். மஹைஶ்வர்ய பூர்ணனே. நீ அனைவருக்கும் நலன்களையே கொடுக்கிறாய்.
No comments:
Post a Comment