Tuesday, April 11, 2023

#134 - 390-391-392 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

 390. ஸ்ரீ வ்யவஸாயாய நம:

புஷ்டப4 மொத3லாத3 லோகபாலரு ஸர்வத3

உபஜீவ்ய விஷயக3 நிஶ்சயாஶ்ரயனாத3

ஸ்ரீவ்யவஸாயநமோ அஸங்தி3த்த3 போஷகனே

காபாடு3 நிஶ்சயாஶ்ரய ஶிம்ஶுமார நமஸ்தே 

பிரம்மன் முதலான அனைத்து தேவர்களுக்கும், எப்போதும் அனைத்து விஷயங்களுக்கும் ஆஸ்ரயன் ஆன ஸ்ரீலட்சுமி தேவியின் தலைவனே. வ்யவஸாயனே உனக்கு என் நமஸ்காரங்கள். அனைவரையும் காப்பவனே. ஶிம்ஶுமாரனே. 

391. ஸ்ரீ வ்யவஸ்தா2னாய நம:

இந்த்3ராதி33ளிகெ3 அவரவர ஸ்தா2னவிஷய

ஒத3கி3ஸி கொடு3வ்யவஸ்தா2நமோ நினகெ3

பூ4ஸ்தி2தர ஜாக்3ரத் ஸ்வப்ன ஸுஷுப்த்யாதி3 அவஸ்தெ23

முத3லீலெயிம் நியமிஸுவி ஏகப3ஹுரூப 

இந்திரன் முதலான அனைவருக்கும் அவரவர்களின் ஸ்தானத்தை, செயல்களை ஏற்பாடு செய்து கொடுப்பவனே. வ்யவஸ்தானனே உனக்கு என் நமஸ்காரங்கள். தூக்கம், விழிப்பு, கனவு நிலைகளை நீ லீலையினால் நியமனம் செய்கிறாய். ஒரு ரூபத்தில் அனேக ரூபங்களைக் கொண்டவனே. 

392. ஸ்ரீ ஸம்ஸ்தா2னாய நம:

இந்தி3ரியாபி4மானி தே3வர்க3ளொளந்தர்க3தனாகி3

இத்3து3 தே3வதெக3 நியமிஸி அவர்க3ளிம்

நியத க்ரியா மாடி3ஸுவஸம்ஸ்தா2னனேநமோ

எந்து3 ப்3ருஹதா3ரண்யகதி3 ஶ்ருதி ப்ரஸித்33  

இந்திரியாபிமானி தேவர்களில் அந்தர்கதனாக இருந்து, அந்தந்த தேவதைகளை நியமனம் செய்து, அவர்கள் மூலமாக நியத செயல்களை செய்து, செய்விக்கும் ஸம்ஸ்தானனே. உனக்கு என் நமஸ்காரங்கள். இவ்வாறு உன்னை ப்ருஹதாரண்யத்தில், மற்றும் ்ருதிகளில் நீ புகழப்பட்டிருக்கிறாய். ஈனே.

***

No comments:

Post a Comment