Thursday, April 6, 2023

#129 - 375-376-377 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

 375. ஸ்ரீ ஸஹாய நம:

யக்ஞ யஜமானன ஶத்ருக3ளவேக3 ஸஹிஸி

ஜயிஸி பாலிபஸஹநமோ நீ ஸஹனஶீல

யக்ஞ பூஜாதி3மாள்பர ஶத்ருக3ளிஷ்டே 3லவ

ப்ரயோகி3ஸித3ரு அதன்ன தடெ33ட்டுவி நீ வீர 

யக்ஞங்களை செய்யும் யஜமானனின் எதிரிகளை வேகமாக அழித்து, யஜமானனை காக்கும் ‘ஸஹனே உனக்கு என் நமஸ்காரங்கள். யக்ஞ, பூஜை ஆகியவற்றை செய்பவர்களின் எதிரிகள் எவ்வளவுதான் வலிமையை பயன்படுத்தினாலும், அதனை நீ தடை செய்கிறாய். வீரனே. 

376. ஸ்ரீ மஹித4ராய நம:

மஹிபூ4மி பூ44ரனுமஹீத4நமோ எம்பெ3

மஹிபி3ரம்மாதி33 தாரகாஶ்ரயாந்தர்க3தனு

மஹிபி3ரம்மாண்டா3தி3 ஸர்வாதா4 மஹாகூர்ம விஷ்ணு

மஹாஞானவனு த்4யானஶீலர்க்கெ3 ஸுக23 ராம 

பூமியை தாங்கியிருப்பவனே. மஹீதரனே உனக்கு என் நமஸ்காரங்கள். லட்சுமி, பிரம்மாதி அனைவரின் அந்தர்கதனே. பிரம்மாண்டத்திற்கு ஸர்வ ஆதாரகன் நீயே. மஹாகூர்மனே. விஷ்ணுவே. தியானம் செய்பவர்களுக்கு மகா ஞானத்தை கொடுப்பவனே. ராமனே. 

377. ஸ்ரீ மஹாபா4கா3 நம:

மாஹாத்ம்ய வர்ணிஸலஶக்ய அதிஶயவாகி3

மஹாபா43நமோ பூர்ண ஷட்கு3ணைஶ்வர்ய 43வான்

மஹாபா43 ஸூர்யனொள் நீ மத்4யவர்த்தி நாராயண

மஹாபா43 ப்3ரம்மாதி3 தேஜஸ்வி அந்தர்க3தனு ஸ்ரீ 

உன்னுடைய மாஹாத்ம்ய ஞானத்தை யாராலும் வர்ணிக்க முடியாது. மஹாபாகனே உனக்கு என் நமஸ்காரங்கள். ஷட்குண ஐஸ்வர்ய பூர்ணனே. பகவானே. சூரியனில் நீ இருக்கிறாய். பிரம்மாதி அனைத்து தேவதைகளிலும் அந்தர்யாமியாக இருப்பவனே. ஸ்ரீலட்சுமிதேவியின் தலைவனே.

***


No comments:

Post a Comment