Sunday, April 9, 2023

#132 - 384-385-386 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

 ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

384. ஸ்ரீ கரணாய நம:

ஸூர்யாக்3னி தத்வே மொத3லாத3 தே3வதெக3ளிகெ3

ஸக்ஞான கொடு3வந்தகரணம்நமோ நமஸ்துப்4யம்

ஸ்ரீவ்யாஸ ஹம்ஸாதி3ரூப ஞானஸுக2 ப்ரகாஶவான்

தோயஜாஸனாதி33ளிகெ3 ஞானோபதே3ஶகனு 

சூரியன், அக்னி முதலான தத்வாபிமானி தேவதைகளுக்கு யதார்த்த ஞானத்தினை கொடுப்பவனான ‘கரணம் உனக்கு என் நமஸ்காரங்கள். ஸ்ரீவ்யாஸனே. ஹம்ஸாதி ரூபனே. ஞானஸுகங்களை பரிபூர்ணமாகக் கொண்டு ஒளிர்பவனே. பிரம்மன் முதலான அனைவருக்கும் ஞானத்தை உபதேசம் செய்பவனே. 

385. ஸ்ரீ காரணாய நம:

ஸவனத்ரய மந்த்ர ஶப்333ளிகெ3 ஶ்ரயனு

ஸ்ரீவரனெகாரணம்நமோ நமோ நமஸ்துப்4யம்

காவகருணியெ ஶதோத்தர ஷோட3 வருஷ

ஸவனத்ரய ஜக3தா3தி3 ஸர்வகாரண நீனே 

மூன்று வேளைகளிலும் சொல்லக்கூடிய மந்திரங்களுக்கு, அவற்றின் சப்தங்களால் வாச்யனே. ஸ்ரீவரனே. காரணனே உனக்கு என் நமஸ்காரங்கள். அனைவரையும் காக்கும் கருணியே. ஸ்தோத்திர ரூபனே. எப்போதும் இளமையுடன் கூடியவனே (பிறப்பு, இறப்பு, முதுமை ஆகியவை இல்லாதவனே). ஜகதாதி அனைத்திற்கும் நீயே காரணனாக இருக்கிறாய். 

386. ஸ்ரீ கர்த்ரே நம:

ஸ்வதந்த்ர கர்த்ருத்வயத்தனாகி3ருவிகர்தாநமோ

மோத3சின்மய நீனு ஆனந்தோ3த்3ரேக்த லீலெயிந்த3

கர்த்ரு நீ அபி4மான ப்ரயோஜன காமரஹித

ப்4ரமகாம அபி4மானியுக் ஜீவனகர்த நீனு 

ஸ்வதந்த்ர கர்த்ருத்வத்தை கொண்டிருக்கிறாய். கர்தனே உனக்கு என்  நமஸ்காரங்கள். ஆனந்த ஸ்வரூபி நீ. மிகுந்த ஆனந்தமயனாகி, லீலையினாலேயே அனைத்தையும் நீ செய்கிறாய். வணங்குவதற்கு தக்கவனாக நீ இருக்கிறாய். எந்த செயல்களின் மேலும் எவ்வித ஆசையும் அற்றவன். ஜீவர்களுக்கு நீயே கர்தனாக இருக்கிறாய்.

***



No comments:

Post a Comment