Saturday, April 22, 2023

#145 - 422-423-424 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

422. ஸ்ரீ வாயுவே நம:

ஜக33ம்ஸ்தி2தனாகி3 ஆனந்த3 ஒத3கி3ஸுவி

ஜக3த்ரக்ஷண மாள்பவாயுநமோ நமோ நினகெ3

அக3ம்ய ஸ்ரேஷ்டப3 ஞானாதி3 கு3 நிதி4யே நீ

ஜக3த்ராண மோக்ஷப்ரத3 பிரப4ஞ்சனாந்தஸ்த2 ஸ்ரீ 

அனைத்து இடங்களிலும் வ்யாபித்து, மகிழ்ச்சியை கொடுக்கிறாய். உலகை காப்பவனே. வாயுவே உனக்கு என் நமஸ்காரங்கள். எல்லையற்ற சிறந்த வலிமைகளை, ஞானாதி குணங்களைக் கொண்டவனே. நீயே மோட்சத்தை அருள்பவன். பிரபஞ்சத்தில் நிறைந்திருப்பவன். லட்சுமிதேவியின் தலைவன். 

423.  ஸ்ரீ அதோ4க்ஷஜாய நம:

4க்ஷனீய ஜக3த்தன்னு அத4:ஸ்தா2பன மாள்பி நீ

அக்ஷரனு அன்னாதி3 ஜயஶீல ஸ்ரீஅதோ4க்ஷஜ

ரக்ஷிஸுதி ஸர்வதா3 நமோ எம்பெ3 க்ருதக்3ஞதெயிம்

அக்ஷய ஸஞ்ஞாத்யகி2 கு3ணநிதி4 அனக4 

பிரளய காலத்தில் உண்ட இந்த உலகினை, நீ மறுபடி அதே இடத்தில் ஸ்தாபனை செய்கிறாய். அக்‌ஷரனே. அன்னாதி அனைத்து செல்வங்களையும் அருள்பவனே. அதோக்‌ஷஜனே. அனைவரையும் நீ காக்கிறாய். உனக்கு என் நன்றியுடன் கூடிய நமஸ்காரங்கள். எல்லையற்ற சுக்ஞானத்தின் குணநிதியே. 

424. ஸ்ரீ ருதவே நம:

அன்ய ப்ரேரக புருஷ யாரு இல்லவு எம்பு3

ஞானக்கெ விஷயவாகு3 நீருதுநமஸ்துப்4யம்

ஞானிக3 மோக் ஸாத4னத்வதி3ம் ருது எம்போ3து3

நீனே ஸ்வதந்த்ர ஸர்வவஶியு ஞானதா3 ஸர்வக்ஞ 

உன்னை ப்ரேரணை செய்பவர்கள் யாரும் இல்லை. இத்தகைய ஞானத்திற்கு நீயே விஷயமாக இருக்கிறாய். ருதுவே உனக்கு என் நமஸ்காரங்கள். ஞானிகளின் மோட்ச சாதனத்திற்கு காரணனே. ஸ்வதந்த்ரனே. ஸர்வ ஞானத்தைக் கொண்டவனே. ஸர்வக்ஞனே. 

***


No comments:

Post a Comment