Tuesday, June 26, 2018

12/360 - நல்வழிப்படுத்துவாயாக


ஜ்யேஷ்ட சுத்த த்ரயோதசி
12/360 நல்வழிப்படுத்துவாயாக

ஹரிதாச ஹ்ருதய
கன்னடப் புத்தகம்
ஆசிரியர்: திரு. A.B. ஷ்யாமாச்சார்
தமிழில்: T.V.சத்ய நாராயணன்



நின்ன பாதாரவிந்தத சேவெய மாடி
நின்ன த்யானதலிருவ ஹாகெ மாடு
நின்ன தாசர சங்கதிந்த தூரிடதெனகெ
சன்மார்கதிரிஸோ ஜகதீஷ அகனாஷ || -- ஸ்ரீபுரந்தரதாசர்

வியாஸ-தாஸ மார்க்கத்தில் ஸ்ரீஹரியை நவவித பக்தியில் பூஜித்து அவனை வணங்கவேண்டும் என்று சொல்லியிருப்பதை பார்க்கிறோம். அதற்குப் பலனாக ஸ்ரீஹரியிடம் என்ன கேட்கவேண்டும் என்பதை தாசர் இங்கு பட்டியல் இட்டிருக்கிறார். ‘சதா என்ன ஹ்ருதயதல்லி வாச மாடோ ஸ்ரீஹரி’ என்று கேட்டு, ஸ்ரீஹரியை எப்போதும் வணங்குமாறு, தியானிக்குமாறு செய் என்று வேண்டுகிறார். காரணம், எக்காலத்திற்கும் எதற்கும் அவன் இல்லாமல் நமக்கு வேறு கதி இல்லை. 

நீனே கதி நீனே மதி நீனே ஸ்வாமி |
நீனில்லதன்யத்ர தெய்வகள நானரியேனு || என்கிறார்.

பகவந்தனைப் பற்றி நமக்கு கற்றுக்கொடுப்பவர் குரு, சாது, சஜ்ஜனர்கள். இத்தகையவர்களின் ஆணை, உபதேசங்கள் இல்லாமல் சரியான ஞானம் உண்டாகாது. வாழ்க்கையை பயனாக்கும் விதம் தெரியாது. ஹரிதாசர்களின் வழிகாட்டுதல் வாழ்க்கைக்கு இன்றியமையாதது. அதற்கே ‘தாசர சங்கதிந்த தூரிடதெ எனகே சலஹய்யா’ என்றார். மறுபடி மறுபடி ‘சங்கவாகலி சாது சங்கவாகலி’ என்று கேட்பதற்கும் இதே காரணம். நல்வழிக்குச் செல்வதற்கும் சாது - சஜ்ஜனர்களின் நட்பு / பழக்கம் தேவை. நமக்குத் தேவையானவற்றையே தாசர் சொல்கின்றனர். 

ஈசனல்லி விக்ஞான பகவ
த்தாசரல்லி சத்பக்தி விஷய நி
ராஸெ மித்யாவாதியலி ப்ரத்வேஷ நித்யதலி |
ஈ சமஸ்த ப்ராணிகளொளு ர
மேஷனிஹனெந்தரிது அவரபி
லாஷெகள பூரயிசுவுதே மஹயக்ஞ ஹரிபூஜெ || -- ஸ்ரீஜகன்னாததாசர்

எப்போதும் என்னை நல்வழியில் செலுத்து. என்னிடம் சத்காரியங்களை செய்வித்து, அதை ஏற்றுக்கொள். பக்தர்கள் எப்போதும் ஸ்ரீஹரியின் வேண்டுவது இதையே. 

***


No comments:

Post a Comment