Monday, June 18, 2018

4/360 - நீயே எனக்கு கதி

4/360 நீயே எனக்கு கதி

ஹரிதாச ஹ்ருதய
கன்னடப் புத்தகம்
ஆசிரியர்: திரு. A.B. ஷ்யாமாச்சார்
தமிழில்: T.V.சத்ய நாராயணன்






சதத சன்மார்கத பதவனு தோரிஸி
கதியாரு தஷப்ரமதி முனிராயா -- ஸ்ரீ கோபாலதாசர்

குழப்பமயமான வாழ்க்கை. யார் சரி யார் தப்பு என்று தெரியவில்லை. எதை செய்வது எதை விடுப்பது என்று புரியவில்லை. யோசித்து சிலவற்றை செய்தாலும், அது தவறாக முடிகிறது. எதிலெடுத்தாலும் சந்தேகம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நான் என்ன செய்வது? இதற்கான பதில் என்ன? நம்மிடம் இருக்கும் குறைவான ஞானம். சரியான வழிகாட்டி இல்லாதது. 

நம்மிடம் இல்லாததை, அதாவது ஞானத்தை, சரியானவர்களிடமிருந்து பெற்றால் மட்டுமே மேற்கண்ட கேள்விகளுக்கு தீர்வு கிடைக்கும். சரியான வழிகாட்டியை கண்டுபிடிப்பது சிரமமான விஷயமே. ஆனால் இந்த விஷயத்தை ஹரிதாசர்கள் செய்து காட்டியிருக்கிறார்கள். அவரே, ஜீவோத்தமரான வாயுதேவர். இவரே கலியுகத்தில் ஸ்ரீமதானந்த தீர்த்தர் என்று அவதரித்து, தத்வவாதத்தை நிறுவினார். அதற்காகவே தாசர் ‘சன்மார்க்கத பதவ தோரிஸி’ என்று கூறினர். ஏனெனில் இவர் பூர்ணப்ரக்ஞர். அனைத்தையும் தெளிவாக அறிந்தவர் மற்றும் சஜ்ஜனர்களுக்கு அதை அப்படியே சொல்ல வல்லர். 

இவரே இன்னொரு பாடலில் - ‘சதத ஷ்ரவண ஹரிகதாயல்லிரிஸி பதவல்லிடிசய்ய’ என்று கேட்கிறார். ‘சர்வரிகெல்ல ப்ரிய மார்கவ தோரி மெரெவ மாதரிஸ்வ’ என்று இவரே நமது வழிகாட்டி என்று சொல்கிறார். தசப்ரமதி, பூர்ணப்ரக்ஞர் என்று அறியப்படும் ஸ்ரீமத்வரின் பாதங்களில் நாம் சரணாகதி அடைந்தால், நம் வாழ்க்கை சரியாகும். அதற்காகவே தாசர் ‘மாருதிய நம்பிரோ ! மாருதி மார்கயேருவ சுஜனரெல்ல |’ என்றார். தேவையான ஞானம், ஆனந்தத்தை கொடுக்கும் மத்வரை - நீரே கதி என்றனர் தாசர்கள். ‘யதியே எனகே நீனே கதியே அல்லாதன்னே அப்ரதியெ நா காணெ யென்னேக் ‌ஷிதியொளிரிஸி நோடு |’ நீங்களே என் கதி என்று வேண்டினர். இந்த சித்தாந்தத்தை பின்பற்றி சத்கதியை அடையுங்கள் என்று வழிகாட்டியானார் மத்வர். 

ஸ்ரீகோபாலதாசர் பின்பற்றிய வழியே அனைவருக்கான வழி என்றானது. உபநிஷத்தின் உபதேசமும் இதுவே. காரணம் வாயுதேவர் எப்போதும் ஸ்ரீஹரியுடனே இருந்து அனைத்தையும் நடத்துகிறார். இறுதியில் ஸ்ரீஹரியிடம் நம்மை அழைத்துப் போவதும் அவரே. வாயுதேவரே மத்வராகி வந்து நமக்கெல்லாம் சிறந்த வழிகாட்டியாக இருக்கிறார். 

***

No comments:

Post a Comment