Wednesday, June 27, 2018

13/260 ஸ்ரீஸ்ரீபாதராஜர் ஆராதனை

ஜ்யேஷ்ட சுத்த சதுர்தசி
13/260 ஸ்ரீஸ்ரீபாதராஜர் ஆராதனை

ஹரிதாச ஹ்ருதய
கன்னடப் புத்தகம்
ஆசிரியர்: திரு. A.B. ஷ்யாமாச்சார்
தமிழில்: T.V.சத்ய நாராயணன்



யத்ப்ருந்தாவன சேவயா சுவிமலாம் வித்யாம் பஷூன் சந்ததிம்
த்யானம் ஞானமனல்ப கீர்த்தினிவஹம் ப்ராப்னோதி ஸ்ரீக்ரம் ஜன: |
தம் வந்தே நரசிம்மதீர்த்த நிலயம் ஸ்ரீவியாசராட் பூஜிதம் |
த்யாயந்தம் மனஸா ந்ருசிம்ஹசரணம் ஸ்ரீபாதராஜம் குரும் ||

ஸ்ரீமதாசார்ய மத்வரின் சித்தாந்தம் மற்றும் ஹரிதாச சாகித்ய பரம்பரைக்கு பிதாமகர் நிலையில் இருப்பவர் ஸ்ரீபாதராஜர். இவரது தலைமை மற்றும் வழிகாட்டுதலில் ஹரிதாச சாகித்யம் வளர்ந்து தற்போதைய பிரம்மாண்ட நிலைக்கு வந்துள்ளது. வியாச & தாச சாகித்யங்களில் திறன் பெற்ற ஸ்ரீபாதராஜர், ஸ்ரீவியாசராஜர் போன்ற மகான்களை தயார் செய்தாலும், கூடவே ரங்கவிட்டலா என்னும் அங்கிதத்துடன் ஹரிதாச சாகித்யத்திற்கு சுழி போட்டதைப் போல, பல பாடல்களை இயற்றி இந்த சாகித்யத்தை சிரஞ்சீவியாக்கியிருக்கிறார். இத்தகைய மகானை நினைத்த மாத்திரத்தில் சுவையான உணவும், வணங்கினால் நன்மையும், இஷ்டார்த்தங்களும், பூஜித்தால் சுக்ஞானமும் கிடைக்கும். 

ஸ்ரீமதானந்த தீர்த்தரின் சாட்சாத் சிஷ்யரான பத்பனாப தீர்த்தரின் பரம்பரையில் வந்த எட்டாவது யதிகளான ஸ்ரீசுவர்ணவர்ண தீர்த்தரின் சிஷ்யர் ஸ்ரீலட்சுமிநாராயணமுனிகள். கிபி 1406 பிறந்த இவர் சுமார் 1412ல் ஸ்ரீரங்கத்தில் சன்யாசம் பெற்றார். ஒருமுறை கொப்பர க்‌ஷேத்திரத்தில் சுதா பாடம் படிக்கும் சந்தர்ப்பத்தில் அங்கு வந்த அன்றைய உத்தராதி மடாதீசரான ஸ்ரீரகுனாத தீர்த்தரால் புகழப்பட்டு ஸ்ரீபாதராஜர் என்று பெயர் பெற்றார். முளபாகிலில் வித்யாபீடத்தை நிறுவி சன்யாசிகளுக்கு, பல கிருஹஸ்தர்களுக்கு பாட பிரவசனங்களை நிரந்தரமாக நடத்திய புண்யாத்மர். சம்ஸ்கிருதம் மற்றும் கன்னடம் என இரு மொழிகளிலும் சித்தாந்த பிரசாரம் செய்வதை மிகவும் விரும்பினார். சம்ஸ்கிருதத்தில் வாக்வஜ்ர என்னும் மிகச்சிறந்த கிரந்தத்தை இயற்றினார். கன்னடத்தில் பல கீர்த்தனைகள், உகாபோகங்கள், நரசிம்ம தண்டகம், மத்வ நாமா, பிரமர கீதே, வேணுகீதே ஆகிய கிருதிகளை இயற்றினார். விஜய நகரத்தின் சாளுவ நரசிம்மனிடமிருந்து ரத்னாபிஷேகம், ராஜனுக்கு வந்த பிரம்மஹத்யா தோஷத்தை நிவர்த்தி செய்தல், நரசிம்ம தீர்த்தத்தில் பாகீரதியை தருவித்தது - என பல அற்புதங்களை செய்தார். ஸ்ரீஹயக்ரீவதீர்த்தருக்கு பீடத்தைக் கொடுத்து 1504 ஜ்யேஷ்ட சுத்த சதுர்தசி முளபாகிலில் பிருந்தாவனத்தில் பிரவேசித்தார். அன்றிலிருந்து அவரை நம்பி வந்த பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். 

ஹரிதாச பரம்பரையே ஸ்ரீபாதராயர் மேல் பற்பல கிருதிகளை இயற்றியிருக்கிறது. இவரது வித்யா சிஷ்யரான ஸ்ரீவியாசராஜர்:

மஹிமே சாலதே இஷ்டே மஹிமே சாலதே ||ப||
அஹிஷயனன ஒலுமெயிந்த மஹியொளெம்ம ஸ்ரீபாதராயர ||அப||

முத்தின கவச மேல்துராயி ரத்ன கெத்தித கர்ண குண்டல |
கஸ்தூரி திலக ஸ்ரீகந்த லேபன விஸ்தாரந்திந்த மெரெது பருவ ||1||

விப்ரகெ பிரம்மஹத்ய தோஷ பரலு க்‌ஷிபர சங்கோதகதி களெய |
அப்ரபுத்தரு தூஷிஸே கெரெண்ணெ கப்பு வசன ஹஸன மாடித ||2||

ஹரிகெ சமர்ப்பிஸித நானா பரிய சாகங்களனு புன்ஞிஸே |
நரரு நகலு ஸ்ரீச கிருஷ்ணன கருணதிந்த ஹசெய மாடித ||3||

ஸ்ரீபாதராஜரின் அருள் அனைவருக்கும் கண்டிப்பாகத் தேவை என்கிறார் ஸ்ரீவிஜயதாசர்.

இவர பிரசாதவாதரெ வியாஸமுனிராயா
கவிராய புரந்தரதாசரு மிகிலா
தவர கருணவின்னு ஸித்திசுவுது கேளி
நவபகுதி புட்டுவுது வ்யக்தவாகி
தவகதிந்தலி சரமதேஹவெ பருவுது
திவிஜரு ஒலிது சத்கர்ம மாடிசுவரு
கவினுத நம்ம விஜயவிட்டலரேய
திவாராத்ரிகளலி அவர கூடாடுவே ||

***

No comments:

Post a Comment