Saturday, June 23, 2018

9/360 - அனந்தனான ஸ்ரீஹரி

9/360 - அனந்தனான ஸ்ரீஹரி
ஜ்யேஷ்ட சுத்த தசமி


ஹரிதாச ஹ்ருதய
கன்னடப் புத்தகம்
ஆசிரியர்: திரு. A.B. ஷ்யாமாச்சார்
தமிழில்: T.V.சத்ய நாராயணன்





சாஸ்திரங்கள், ஸ்ரீஹரியை ‘சத்யம் ஞானம் அனந்தம் பிரம்ம’ என்று வர்ணிக்கிறது. விஷ்ணுசஹஸ்ர நாமம் மகாவிஷ்ணுவை அனந்தன் என்று அழைக்கிறது. ஆதி அந்தம் இல்லாதவனே அனந்தன். ஸ்ரீஹரி காலத்தால் தேசத்தால் குணத்தால் அனந்தனாக இருக்கிறான். ஸ்ரீஹரியின் அனந்தத்தை லட்சுமி, பிரம்மா என யாராலும் அறியமுடியாது. இதையே ஸ்ரீபாதராஜர்:

அன்னந்த காலதல்லி நின்ன நானரியதெ பவகளல்லி பந்தேனோ
அன்னந்த காலதலி நின்னவனெனிஸிதெ மூருகனாதேனோ || என்றார்.

இத்தகைய அனந்தரூபியை அறிவதின் பலனை ஸ்ரீவியாசராஜர் --

அனந்த ரூபதொளொந்தே ரூபவ
அனந்த நாமதொளெந்தே நாமவ
அனந்த ஜீவரொளகாவனாதரும்
கனசலி நெனெதரெ ருணியாகிப்பனய்யா || -- ஸ்ரீவியாசராஜர்

ஸ்ரீகிருஷ்ணன் அர்ஜுனனுக்கு விஸ்வரூபம் காட்டியபோது தன் அனந்த ரூபத்தைப் பற்றி சொல்கிறான்.

தேஜோமயம் விஷ்வமனந்த மாத்யம் |
யஸ்மின் த்வதன்யேன ந த்ருஷ்ய பூர்வம் ||

ஸ்ரீமதானந்த தீர்த்தர், தமது மங்களாசரணத்தில், அனந்தனை, அனந்தஷக்தன் என்றே வணங்குகிறார்.

அனந்தசக்திம் சர்வக்ஞம் நமஸ்தே புருஷோத்தமம் ||

ஸ்ரீபுரந்தரதாசர் அனந்தரூபியான அனந்தனை அர்ஜுனன் பார்த்த வகையில் விவரிக்கிறார்.

அனந்த முகுட அனந்த ஷிரஸ்ஸு அனந்த நயன
அனந்த நாசிக அனந்த கர்ண அனந்த வதன
அனந்த கம்பு அனந்த கந்தர அனந்த ஸ்ரீதேவி
ஸ்ரீகந்த ஸ்ரீவத்ஸ ஸ்ரீதுளசி வைஜயந்தி
மாலெயந்தொப்பிஹன அனந்த | அனந்த
பாஹு முத்ரே அனந்த ஷங்க அனந்த சக்ர
அனந்த வ்ருக்‌ஷ அனந்த குக்‌ஷி அனந்த நாபி
அனந்த கடியு அனந்த ஊரு அனந்த ஜானு
அனந்த ஜங்க அனந்த சரண அனந்த பெட்யதிந்தொ
ப்புவ ஹொரெ ஒளகிப்பனோ புரன்
தர விட்டலராய நொப்ப அனந்த || -- ஸ்ரீபுரந்தரதாசர்

ஸ்ரீமதாசார்யர் - ‘ஈசமனந்த முபாஸ்ய ஹரிம்’ என்கிறார். பகவந்தனை சாஸ்திரங்கள் அனந்தன் என்று அழைக்கின்றன. அவனோ யாரின் கற்பனைக்கும் எட்டாமல் அனந்தானாக இருக்கிறான். 

ஸ்ரீவிஜயதாசர் ஒரு சுளாதியில்:

ஞானாவந்தா குணானந்தா | த்யானானந்தா தானானந்தா |
மானானந்தா மௌனானந்தா | அனந்தானந்தானந்தா |
அனந்த வர்ண விஜயவிட்டலா அனந்த என்ன ப்ராணானந்தா ||

இதே நடையில் கோபாலதாசர் அனந்தனைப் பற்றி பாடியது.

ஒந்து ரூப நோடெ அனந்தபூர்ணவின்னு
ஒந்து அவயவவெ பரிபூர்ணவய்யா
ஒந்து ரூபதொளகெ அனந்த ரூபகளு
ஒந்து ரூபதிந்த பேதாபேதனாகிப்பா
சுந்தர மூர்த்தி கோபாலவிட்டலா
ஒந்தொந்தனந்த ரூப அனந்த ஒந்தே ரூப || -- ஸ்ரீகோபாலதாசர்

பிரசன்னவெங்கட தாசர் அனந்தனின் ரூபத்தை இவ்வாறு கூறுகிறார்.

அனந்த கர்மானந்த நித்யானந்த பூர்ண அனந்த |
அனந்த நிகமக்கெ நிலுக சதானந்த ப்ரசன்னவேங்கட தூக ||

ஜகன்னாததாசர், தமது ஹரிகதாம்ருதசாரம் மற்றும் பாடல்களில் அனந்தனின் சிறப்பை வர்ணித்திருக்கிறார்.

ஒந்து ரூபதொள் ஒந்து அவயவதொள் ஒந்து தேசதொள் ஒந்து ரோமத
பொந்தி இப்பவ ஜாண்டானந்தானந்த கோடிகளு ||

ரமாதேவியைப் பற்றி சொல்லும்போது -- ‘இந்தனந்தானந்த குணகள ப்ராந்தகாணதே மஹாலகுமி’ என்கிறார். 

லட்சுமிதேவிக்கும் பகவந்தனே தேசகாலாதிகளால் அனந்த்யத்தை அளித்திருந்தாலும், குணங்களால் அவள் அனந்தமாக குறைவானவள்.

தேஷத: காலதோSனந்தா வ்ருத்திஹ்ராஸ விவர்ஜிதா: |
ததைவ குணதோSனந்தா: சர்வே சர்வேஸ்வரேஸ்வரா: ||

ஸ்ரீஹரியின் அனைத்து ரூபங்களும் அனந்தகுணங்களைக் கொண்டிருக்கின்றன. இந்த ரூபங்களுக்கு குறைவு / நாசம் இல்லை. ஸ்ருதி, ஸ்ம்ருதி, புராண, இதிகாசங்களில் அனந்தரூபி பகவந்தனை ஜகதீஸ்வரம் என்று அழைக்கிறார். இத்தகைய அனந்தனுக்கு அனந்தானந்த வணக்கங்கள்.

நமோஸ்து அனந்தாய சஹஸ்ரமூர்த்தயே
சஹஸ்ர பாதாக்‌ஷி ஷிரோரு பாஹவே |
சஹஸ்ர நாம்னே புருஷாய சாஸ்வதே
சஹஸ்ர கோடி யுகதாரிணே நம: || -- மகாபாரதம்

ஸ்ரீமதாசார்யர் அனந்தனைப் பற்றி சொல்லும்போது - ‘சந்ததம் சிந்தயேனந்தம் அந்த்யகாலே விசேஷத:’ என்கிறார்.

***

No comments:

Post a Comment