Wednesday, June 20, 2018

6/360 - பார்த்து அறிந்து நட

ஜ்யேஷ்ட சுத்த சப்தமி
6/360 பார்த்து அறிந்து நட

ஹரிதாச ஹ்ருதய
கன்னடப் புத்தகம்
ஆசிரியர்: திரு. A.B. ஷ்யாமாச்சார்
தமிழில்: T.V.சத்ய நாராயணன்


ஜட பதார்த்தங்களிலிருந்தும் நாம் அறியவேண்டியது பல இருக்கின்றன என்று பாகவதம் சொல்கிறது.  அவற்றில் ஒன்று ’தத்வங்கள்’ எனத் தெரிகிறது. இப்படி 24 குருகள் இருக்கின்றனர் என்று ஸ்ரீகிருஷ்ணன் உத்தவருக்கு உபதேசம் செய்கிறான். இதையே விஜயதாசர் - ’ப்ருதிவ்யாதி தத்வங்களிந்த கலியுவுதிதே’ - என்றார். 

தரணியந்தே தாளோ மருதனந்தே சம்
சரிஸு பாவகனந்தே ஹொரகெ தோரதிரலி
மரளி உதகதந்தெ ஹரிது போகுதலிரு
இரு ஆகாஷதந்தே சன்சதலி தூர
பரரபேக்‌ஷய பிடு பரலோகவ பேடு || -- ஸ்ரீவிஜயதாசர்

தாசர் விளக்கியிருக்கும் இந்த பஞ்சபூதங்களின் குணங்களை நாம் வாழ்க்கையில் பின்பற்றினால் எதையும் சாதிக்கலாம் என்பர். இதன்படி ஒரு அர்த்தத்தில் இவை நமக்கு குரு என்றே சொல்லலாம். 

பூமிக்கு இருக்கும் பெரிய குணம் என்னவென்றால் மன்னித்தல். பூமியில் எத்தனை அழுக்குகள் சேர்ந்தாலும் பொறுத்துக்கொண்டு, அனைவரையும் மன்னித்து, ஆதரவு அளிக்கிறது. காற்று எதற்கும் அஞ்சாமல் எப்போதும் சுற்றிக் கொண்டிருக்கிறது. நறுமணம், துர்மணம் என்று பார்க்காமல் அதை பரப்பும் வேலை மட்டும் செய்கிறது. ஜீவரும் சுக, துக்கங்களில் மூழ்கிவிடாமல், இரண்டையும் ஒன்றாகவே கருதவேண்டும். நீர் தானே சுத்தமாகி, வழியில் பார்க்கும் அழுக்குகள் அனைத்தையும் சுத்தமாக்குகிறது. இது போல ஜீவரும் சுத்தமான மனம் உள்ளவராக வேண்டும். தேஜஸ் என்றால் அது நெருப்பு. எப்போதும் சுத்தமாக இருக்கிறது. தான் சேரும் அனைத்தையும் சுத்தமாக்கும் பொருள். தன் பவித்ரத்தை இழக்காமல், பிற பொருட்களை சுத்தமாக்கும் குணம் கொண்டது. மனிதன் தானும் சுத்தமாக இருந்து, சம்பந்தப்பட்ட பிறரையும் சுத்தமாக்க வேண்டும். ஆகாயம் அனைத்து இடங்களிலும் வியாபித்திருக்கிறது. அனைத்து பொருட்களுக்கும் இடம் அளித்திருக்கிறது. எப்போதும் தூய்மையாக இருக்கிறது. இந்த குணம் மனிதனுக்கு மிகவும் அவசியம். இந்த குணத்தால் அனைத்தையும் சாதிக்கலாம். 

இப்படி பஞ்சபூத குணங்களை அறிந்து, அவற்றை வாழ்க்கையில் பயன்படுத்தினால், கண்டிப்பாக நலம் உண்டாகும். இந்த பூதாபிமானிகளின் அருளும் மற்றும் இவற்றை கட்டுப்படுத்தும் ஸ்ரீஹரியின் ரூபங்களின் அருளும் முக்கியமானதாகும். 

ஸ்ரீவிஜயதாசர், ஜடப் பொருட்களிலிருந்தும் பாடம் கற்று முன்னேறி, பிறருக்கும் சொல்லிய விதத்தை அறிந்து, நாமும் அப்படியே ஆகவேண்டும். 

***

No comments:

Post a Comment