Saturday, August 27, 2022

[பத்யம் #100] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

[பத்யம் #100] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)

தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

[பத்யம் #100]

நால்கு தே3ஹதொ3ளிருவ தே3வன

நால்கு ரூபவ திளிது3 பு34ரிம்

நால்கு புரவார்த்த23 3யஸதெ3 நால்குமொக3 பிதன

நால்கு வேத33ளரியவென்னுத

நால்கு காலதி3 4க்தி மாத்ரவ

நால்கு கு3 தொ3ளுபாஸ்ய தே3வன 3யஸி பே3டு3வரு ||100 

நால்கு தேஹதொளிருவ -ஸ்தூல, அனிருத்த, ஸூக்ஷ்ம, லிங்க; தேவன - தேவனின்; நால்கு ரூபவ - அனிருத்த, பிரத்யும்ன, சங்கர்ஷண, வாஸுதேவ; புதரிம் திளிது - அறிஞர்களிடமிருந்து அறிந்து; நால்கு புரவார்த்தகள் - தர்ம, அர்த்த, காம, மோக் ஆகியவற்றை; பயஸதெ - விரும்பாமல்; நால்குமொக பிதன - பிரம்மனின் தந்தையான ஸ்ரீஹரியை; நால்கு வேதகளு - ரிக், யஜுர், ஸாம, அதர்வ; அரிய வென்னுத - முழுமையாக அறியாது என்றவாறு; நால்கு காலதி - ஜீவனின் நான்கு காலங்களான பால்ய, யௌவன, கௌமார, வ்ருத்தாப்ய காலங்களில்; பக்தி மாத்ரவ - பக்தியை மட்டும் செலுத்தி; நால்கு குணதொளு - படுத்திருக்கும்போதும், அமர்ந்திருக்கும்போதும், நின்றிருக்கும்போதும், ஓடியாடும்போதும் என நான்கு குணங்களிலும் (நிலையிலும்); உபாஸ்ய தேவன - தங்களின் ஸ்ரீஹரியை; பயஸி பேடுவரு - வணங்கி வேண்டிக் கொள்கிறார்கள். 

பகவந்தனை பக்தர்கள் வணங்கும் விதத்தினை இந்த பத்யத்தில் நான்கு என்னும் எண்ணினைக் கொண்டு விளக்கியிருக்கிறார் ஸ்ரீதாஸர்

***

No comments:

Post a Comment