Sunday, August 28, 2022

[பத்யம் #101] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

[பத்யம் #101] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)

தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

[பத்யம் #101]

பஞ்ச ரூபன பஞ்ச கோதி3

பஞ்ச ஸிரி ஸஹிதத3லி சிந்திஸி

பஞ்ச பஞ்சேந்த்3ரியத3 தே3ஹதொ3ள் பஞ்ச அக்3னி யொளு |

பஞ்சவித3 மானஸிக யக்3ஞதி3

பஞ்ச ப்ராணாந்தர்க3ர்ப்பிஸி

பஞ்சவித3 முக்தியனு படெ3வரு பஞ்ச ஸாத்விகரு ||101 

பஞ்ச ரூபன - அனிருத்த, பிரத்யும்ன, ஸங்கர்ஷண, வாஸுதேவ, நாராயண என்னும் ஐந்து ரூபங்களைக் கொண்டவனை; பஞ்ச கோஷதி - அன்னமய, பிராணமய, மனோமய, விக்ஞானமய, ஆனந்தமய என்னும் ஐந்து கோஷங்களில்; பஞ்ச ஸிரி ஸஹிததலி - ஷாந்தி, க்ருதி, ஜயா, மாயா, லட்சுமி ஆகிய ஐந்து லட்சுமியின் ரூபங்களுடன்; சிந்திஸி - சிந்தித்து; பஞ்ச பஞ்சேந்த்ரியத - ஐந்து ஞானேந்த்ரியங்கள் + ஐந்து கர்மேந்திரியங்களைக் கொண்ட; தேகதொள் - தேகத்தில்; பஞ்ச அக்னியொளு - ஜனனி, பித, பூமி, வாரித, அம்பர ஆகிய ஐந்து அக்னிகளில்; பஞ்சவித யக்ஞதி - தேவ, பித்ரு, ரிஷி, பூத, அதிதி ஆகிய ஐந்து வித யக்ஞங்களால்; மானஸிக - மனதில் இருக்கக்கூடிய; பஞ்ச ப்ராணாந்தர்கெ - பிராண, அபான, வ்யான, உதான, ஸமான ஆகிய பிராணந்தர்யாமியாக இருப்பவனுக்கு (ஸ்ரீஹரிக்கு); அர்ப்பிஸி - அர்ப்பணம் செய்து; பஞ்ச ஸாத்விகரு - தேவதைகள், ரிஷிகள், பித்ருகள், சக்ரவர்த்திகள், மனுஷ்யோத்தமர்கள் ஆகிய ஐந்து வித ஸாத்விகர்கள்; பஞ்சவித முக்தியனு - ஸாரூப்ய, ஸாலோக்ய, ஸாமீப்ய, ஸாயுஜ்ய, ஸாரிஷ்டி ஆகிய முக்திகளை (தங்களின் யோக்யதைக்கேற்ப); படெவரு - பெறுகிறார்கள்.

பகவந்தனிடம் பக்தர்கள் பக்தி செய்து, அதற்கேற்ப பலனாக பஞ்சவித முக்தியைப் பெறுவதை இந்த பத்யத்தில் விளக்கியிருக்கிறார் ஸ்ரீரமாகாந்த விட்டல தாஸர்.

***

No comments:

Post a Comment