Tuesday, August 9, 2022

[பத்யம் #88] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

[பத்யம் #88] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)

தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

[பத்யம் #88]

அன்ய வஸ்துவ மனதி3 ஸ்மரிஸதெ3

ஜன்ய ஸுக2 து3க்க23 ஸமனிஸி

ஸன்னுத ஸ்ரீஹரிய கு3 கர்மக3 கொண்டா3டி3 |

3ண்யவித3ல்லபார மஹிமன

உன்னதத3 ஸத்ப4க்தி ஞானதி3

தை3ன்யதி3ம் ப்ரார்த்திஸுத நிஶ்சல த்4யானதொ3ளு நிலிஸி ||88 

அன்ய வஸ்துவ மனதி ஸ்மரிஸதெ - வேறு எதைப் பற்றியும் சிந்திக்காமல்; ஜன்ய ஸுக துக்ககள ஸமனிஸி - வருவதான சுக துக்கங்கள் என இந்த இரண்டையும் ஒன்றாகவே (சமமாக) பாவித்து; ஸன்னுத ஸ்ரீஹரிய - தேவதைகள் கொண்டாடுவதான ஸ்ரீஹரியின்; குண கர்மகள - நற்குணங்களை, செயல்களை; கொண்டாடி - போற்றியவாறு; கண்யவிதல்லபார மஹிமன - ஸர்வோத்தமனனான, அபார மஹிமனைக் குறித்தான; உன்னதத ஸத்பக்தி ஞானதிம் - மிகச்சிறந்த ஸத்பக்தி, ஞானத்துடன்; தைன்யதிம் - பக்தியுடன்; ப்ரார்த்திஸுத - வணங்கியவாறு; நிஷ்சல த்யானதொளு - இடைவிடாத தியானத்தில்; நிலிஸி - மனதினை நிறுத்த வேண்டும். 

குழந்தை, பாலகன், வாலிபன், மனிதன் ஆகிய நான்கு நிலைகளைக் கடந்து வரும் ஜீவி, அடுத்த நிலையில் என செய்கிறார் / என்ன செய்ய வேண்டும் என்பதை, அந்த லட்சணங்களை இந்த மற்றும் அடுத்த பத்யத்தில் விளக்குகிறார் ஸ்ரீரமாகாந்த விட்டல தாஸர். 

வேறு எதைப் பற்றியும் சிந்திக்காமல், நமக்கு வருவதான சுக துக்கங்கள் என இந்த இரண்டையும் ஒன்றாகவே / சமமாக பாவித்து; தேவதைகள் கொண்டாடுவதான ஸ்ரீஹரியின் நற்குணங்களை கொண்டாடியவாறு; ஸர்வோத்தமனான அபார மஹிமனைக் குறித்தான மிகச்சிறந்த ஸத்பக்தி, ஞானத்துடன் பக்தியுடன் வணங்கியவாறு, இடைவிடாத தியானத்தில் மனதினை நிறுத்த வேண்டும். 

இதற்கான தொடர்ச்சி அடுத்த பத்யத்தில் வருகிறது.

***


No comments:

Post a Comment