[பத்யம் #94] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]
இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)
தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
[பத்யம் #94]
கா3ளிகொ3ட்3ட3தெ3 பூ3தி3 முச்சித3
மூலெயலி ப்ரஜ்வலிப கெண்ட3வ
போலுவரு ஸாது4க3ளு மஹிமெய தோரத3லெ ஜக3கெ |
பா3லரந்தாடு3வரு ஆளுவரு
வேளெ வேளெகெ3 நகு3த நமிபரு
காலகாலகெ ஹரிய ரூபவ நோடி3 ஸர்வத்ர ||94
காளிகொட்டதெ - காற்றுகூட இருக்காத; மூலெயலி - ஒரு மூலையில்; ப்ரஜ்வலிப - ஒளிர்வதான; பூதி முச்சித - சாம்பல் மூடிய; கெண்டவ போலுவரு - கங்கினைப் போன்றவர்கள்; ஸாதுகளு - இவர்கள் அறிஞர்கள்; ஜககெ - இவர்கள், உலகிற்கு; மஹிமெய தோரதலெ - தங்களின் மகிமையைக் காட்டாமல்; பாலரந்தாடுவரு - குழந்தைகளைப் போல திரிவார்கள்; வேளெ வேளெகெ நகுத - அவ்வப்போது சிரித்தவாறு; காலகாலகெ - எல்லா சமயங்களிலும்; ஸர்வத்ர - எல்லா இடங்களிலும்; ஹரிய ரூபவ நோடி - ஸ்ரீஹரியின் ரூபத்தினை பார்த்து; நமிபரு - வணங்குவார்கள்; ஆளுவரு - சஞ்சரிப்பார்கள்.
காற்றுகூட புகாத ஒரு மூலையில் ஒளிர்வதான, சாம்பல் முடிய கங்கினைப் போன்றவர்கள் இவர்கள். அறிஞர்கள் எனப்படுகின்றனர். உலகிறகு தங்களின் மகிமைகளை காட்டாமல், குழந்தைகளைப் போல திரிவார்கள். அவ்வப்போது சிரித்தவாறு, எல்லா சமயங்களிலும், எல்லா இடங்களிலும், ஸ்ரீஹரியின் ரூபத்தினை பார்த்து வணங்குவார்கள். இப்படியே எப்போதும் சஞ்சரிப்பார்கள்.
இத்தகைய லட்சணங்களைக் கொண்டவர்கள், ஞானி என்று அழைக்கப்படுகின்றனர் என்று ஹரிகதாம்ருதஸாரத்தில் ஸ்ரீஜகன்னாத தாஸர் கூறுகிறார்.
மேதி3னிய மேலுள்ள கோ3ஷ்பா
தோ3த3கக3ளெல்ல மலதீர்த்த2வு
பாத3பாத்3ரி த4ராதளவெ ஸுக்ஷேத்ர ஜீவக3ண
ஸ்ரீத3ன ப்ரதிமெக3ளு அவரு
ம்போ3த3னவெ நைவேத்3ய நித்யதி3
ஹாதி3னடெ3வுதெ3 நர்தன க3ளெந்த3ரிதவனெ யோகி3 ||(10-3)
சாதாரணமான மாட்டுக் குளம்பில் தேங்கும் நீர் மிகவும் குறைவாகவே இருக்குமல்லவா? அவ்வளவு சிறிய நீரிலிருந்து, குளம் குட்டை ஏரி வரையிலான நீர்நிலைகள் அனைத்தும் தீர்த்தங்கள் என்றும், மரங்கள், மலைகள், பூமி முதலான அனைத்தும் உத்தம க்ஷேத்திரங்கள் என்றும், ஜீவகணங்கள் அனைத்தும் பரமாத்மனின் பிரதிமைகள் என்றும், அவர்கள் உண்ணும் அன்னாதிகளே நைவேத்தியம் என்றும், தினமும் வழியில் நடப்பதே நடனம் என்றும் யார் அறிகிறாரோ, அவர் சாமான்யமானவர் அல்ல. அவரையே மஹா ஞானிகள் என்று சொல்ல வேண்டும்.
****
No comments:
Post a Comment