Thursday, August 18, 2022

[பத்யம் #93] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

[பத்யம் #93] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)

தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

[பத்யம் #93]

வேத3ஶாஸ்த்ர புராண விதி4கெ3 வி

ரோத4 பாரத3 ரீதி தத்வவ

போ3தி4பரு கு3ரு மத்4வராயர ஸேவெ ஸல்லிஸுத |

ஸ்ரீத3னொலிமெலி விதி4 நிஷேத43

பா3தெ43ளுக1தெ3 சர்ய தோர்பரு

மேத3னியொளச்சரியெ காம்ப3ரு மந்த3 ஜனததிகெ3 ||93 

வேதஷாஸ்த்ர புராண விதிகெ - வேத சாஸ்திரங்கள், புராணங்களில் சொல்லப்பட்டுள்ள விதிகளுக்கு; விரொத பாரத ரீதி - எவ்வித விரோதமும் வராதவாறு; தத்வவ போதிபரு - தத்வங்களை போதிப்பார்கள்; குரு மத்வராயர - ஜகத்குரு ஸ்ரீமதாசார்யரின்; ஸேவெ ஸல்லிஸுத - சேவையை செய்தவாறு; ஸ்ரீதனொலிமெலி - ஸ்ரீஹரியின் அருளால்; விதி நிஷேதத பாதெ - விதி விதிவிலக்குகளின் பிரச்னைகளைப் பற்றி; அளுகதெ - பயப்படாமல்; சர்ய தோர்பரு - தங்கள் செயல்களை நடத்துவார்கள்; மேதினியொளு - பூமியில் உள்ள; மந்த ஜனததிகெ - மற்ற பாமர மக்களுக்கு; ஆச்சரியெ காம்பரு - வியப்பினை காட்டுவார்கள். 

அதே ஏகாந்த் பக்தர்களின் லட்சணங்களை இந்த பத்யத்திலும் தொடர்ந்து விளக்குகிறார் ஸ்ரீதாஸர். 

வேத சாஸ்திரங்கள், புராணங்களில் சொல்லப்பட்டுள்ள விதிகளுக்கு எவ்வித விரோதங்களும் வராதவாறு, தத்வங்களை போதிப்பார்கள். ஜகத்குரு ஸ்ரீமதாசார்யரின் சேவையை செய்தவாறு, ஸ்ரீஹரியின் அருளால், விதி விதிவிலக்குகளின் பிரச்னைகளைப் பற்றி பயப்படாமல் தங்கள் செயல்களை செய்வார்கள். பூமியில் உள்ள மற்ற பாமர மக்களுக்கு வியப்பினை காட்டுவார்கள். 

மாணவக தத்ப2லக3ளனுஸ

ந்தா3னவில்லதெ3 கர்மக3 ஸ்வே

ச்சானுஸாரதி3 மாடி3 மோதி3ஸுவந்தெ ப்ரதிதி3னதி3 |

ஞானபூர்வக விதி4 நிஷேத43

ளேனு நோட3தெ3 மாடு3 கர்ம ப்ர

தா4 புருஷேஷனலி 4கு3தி1 பே3டு3 கொண்டா3டு3 ||(11-15) 

சிறுவர்கள் தான் செய்யும் செயல்களின் பலன்களை பெறவேண்டும் என்னும் விருப்பம் இல்லாமல் அந்த செயல்களை தன் இஷ்டத்திற்கு செய்து மகிழ்ச்சியடைவதைப் போல தினந்தோறும் தெளிவான ஞானத்துடன் இது செய்யலாம், இது செய்யக்கூடாது என்றெல்லாம் பார்க்காமல் அனைத்தையும் செய்விப்பனான புருஷோத்தமனே பிரதான கர்த்தன் என்று அறிந்து பக்தி செய்து, ஸ்தோத்திரம் செய்.

***


No comments:

Post a Comment