[பத்யம் #98] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]
இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)
தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
[பத்யம் #98]
எரடு3 மார்க்க3தொ3ளரிது விஹிதவ
எரடு3 மன மாட3த3லெ த்3ருட3த3லி
எரடு3 வித3 ஹரிரூப த4ரெயொளு திளிது3 விஸ்தரதி3 |
எரடு3 ஸ்தா2னதி3 நிருத பூஜிஸி
எரடு3 வித4 கர்மவனு களெவரு
எரட3னெய தெ3ய்வவனு நெனெயதெ3 ஶரணஜன ஸங்க4 ||98
எரடு மார்க்கதொளு - ப்ரவ்ருத்தி / நிவ்ருத்தியான இரு மார்க்கங்களில்; விஹிதவ அரிது - செய்யத்தக்க செயல்களை அறிந்து; எரடு மன மாடதலெ - சஞ்சல மனம் கொள்ளாமல்; த்ருடதலி - திடமான மனதில்; எரடு வித ஹரிரூப - அண்டாண்ட மற்றும் பிண்டாண்டத்தில் இருக்கும் இரு வித ஹரிரூபங்களை; தரெயொளு திளிது - இந்த உலகில் அறிந்து; விஸ்தரதி - மிகவும் விஸ்தாரமாக; எரடு ஸ்தானதி - அக மற்றும் புறத்தில்; நிருத பூஜிஸி - விதிப்படி பூஜை செய்து; எரடு வித கர்மவனு களெவரு - பாப, புண்ய ஆகிய இரு வித கர்மங்களையும் போக்கிக் கொள்வார்கள்; எரடனெய தெய்வவனு நெனெயதெ - ஸர்வோத்தமனான ஹரியை விட்டு வேறு தெய்வங்களை நினைக்காமல்; ஷரணஜன ஸங்க - சஜ்ஜனர்களின் சங்கத்தையே நாடுவார்கள்.
அத்தகைய ஏகாந்த பக்தர்களின் சிறப்புகளை தொடர்ந்து இந்த மற்றும் பின்வரும் பத்யங்களிலும் விளக்குகிறார் ஸ்ரீரமாகாந்த விட்டல தாஸர். இந்த பத்யத்தில் ‘இரண்டு’ என்னும் சிறப்பு எண்ணைப் பற்றி சொல்கிறார்.
ப்ரவ்ருத்தி / நிவ்ருத்தி முதலான இரு மார்க்கங்களில் செய்யத்தக்க செயல்களை அறிந்து, திடமான மனதினால், நமக்குள் மற்றும் வெளியே இருப்பதான இரு வித ஹரிரூபங்களையும் அறிந்து, அவனை விதிப்படி பூஜை செய்து, பாப, புண்ய என்னும் இரு வித கர்மங்களையும் போக்கிக் கொள்வார்கள். ஸர்வோத்தமனான ஸ்ரீஹரியை விட்டு வேறு தெய்வங்களை நினைக்காமல், ஸஜ்ஜனர்களின் சங்கத்தையே அத்தகைய ஏகாந்த பக்தர்கள் நாடுவார்கள்.
ஸ்வோசித1 கர்மக3ளாசரிஸுத ப3லு நீசரல்லிகெ3 போ1கி3 யாசிஸதெ3
கே1சரவாஹ சராசர பந்த4க1 மோசக1னஹுதெந்து3 யோசிஸுதிப்புதே3 |1|
நம் வர்ணாசிரமத்திற்கேற்ப கர்மங்களை செய்தவாறு, ஸ்ரீஹரியைத் தவிர வேறு எந்த பிற தெய்வங்களிடமும் சென்று வேண்டாமல், நம் சம்சார பந்தனத்தை விலக்கத் தக்கவன் அவன் ஒருவனே என்பதை அறிந்து அவனை வணங்குவதே, நம் இந்த வாழ்க்கையின் சிறந்த அர்த்தமாகும் என்கிறார் ஸ்ரீஜகன்னாத தாஸர்.
***
No comments:
Post a Comment