Saturday, December 31, 2022

#70 - 192-193-194 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

192. ஸ்ரீ கோ3விந்தா3 நம:

ஶுபுத்ர மொத3லாத3வர ஸம்ப3ந்த4 மாடி3ஸுவ

ஸ்ரீகோ3விந்தநமோ ஹீங்கார நாம ப்ரதிபாத்3

பூ4ஸுரரிம் அமரரிம் ஸூரிக3ளிம் ஸம்ஸ்துதனு

ஸமஸ்த வேத3வாக்யக3ளிந்த3 கீர்த்தித வேத3வேத்3 

மாடு, வாரிசு ஆகியவற்றை வழங்குபவனான ஸ்ரீனே. ‘கோவிந்தனே உனக்கு என் நமஸ்காரங்கள். ஹீங்கார என்று அழைக்கப்படுபவனே. பூமியில் வாழ்பவர்களால், முக்தர்களால், தேவதைகளால் வணங்கப்படுபவனே. அனைத்து வேத வாக்கியங்களாலும் போற்றப்படுபவனே. வேதவேத்யனே. 

193. ஸ்ரீ கோ3விதா3ம்பதயே நம:

தேஜஸ்விக3 ஸ்வாமிகோ3விதா3ம்பதிநமோ எம்பெ3

ஸஞ்ஞானதேஜஸ்வி அபரோக்ஷி 4க்தருக3ளிகு3

ஸூர்யாதி3க்3ரஹ நக்ஷத்ர 1டித்தாதி3 தே3வர்க்க3ளிகு3

தேஜஸ்வி ஸுர ரிஷியஜகர்கு3 ரக்ஷக ஸ்வாமி 

அறிஞர்களின் ஸ்வாமியே ‘கோவிதாம்பதியே உனக்கு என் நமஸ்காரங்கள். உன் பக்தர்களுக்கு யதார்த்த ஞானத்தையும், அபரோக்‌ஷத்தையும் வழங்குபவனே. சூரியன் முதலான கிரகங்களுக்கும், நட்சத்திர முதலானவர்களுக்கும், தேவர்களுக்கும், ஞானத்தைக் கொண்ட ரிஷிகளுக்கும் கூட நீயே ரக்‌ஷகனாக இருக்கிறாய். ஸ்வாமியே. 

194. ஸ்ரீ மரீசயே நம:

தாமஸ தை3த்யர்க3 மரண ஹொந்தி3ஸுவமரீசி

நமோ எம்பெ3 அக்3ஞான ஸம்ஹர ஸக்ஞானதா3

சாமீகராப4 ப்ரகாஶவான் நிர்மல ஸ்வரூப

அமலகு3 ஜலநிதே4 க்ருபாம் ம்ருத ஸுரிஸோ 

தாமஸ தைத்யர்களுக்கு மரணத்தை கொடுப்பவனே ‘மரீசியே உனக்கு என் நமஸ்காரங்கள். அஞ்ஞானத்தை அழித்து, ஸுக்ஞானத்தை அளிப்பவனே. தங்கமயமாக ஒளிர்பவனே. நிர்மல ஸ்வரூபம் கொண்டவனே. குறைகள் அற்ற குணங்களைக் கொண்டவனே. பாற்கடலில் வசிப்பவனே. உன் கருணை என்னை மழையை பொழிவாயாக.

***


Friday, December 30, 2022

#69 - 189-190-191 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

189. ஸ்ரீ ஸதாம்க3தயே நம:

கு3ணக3 ஶ்ரய நீஸதாம்க3திநமோ நமோ

ஆனந்தா3விர்ப4விஸித3 முக்தரிகு3 கதி நீனு

ஞானப4க்தி வைராக்3யயுக் ஸஜ்ஜனக3ள் 3திப்ரத3

அன்ருதவல்ல ஸத்யம் ஜக3த்தெம்ப3 ஞானதா3 

நற்குணங்களின் கடல் நீயே ‘ஸதாம்கதியே உனக்கு என் நமஸ்காரங்கள். ஆனந்த நிலையில் இருக்கும் முக்தர்களுக்கு நீயே கதி. ஞான, பக்தி, வைராக்கியங்களைக் கொண்ட ஸஜ்ஜனர்களுக்கு கதியை அளிக்கிறாய். ஜகத் என்பது ஸத்யமே. பொய் அல்ல என்னும் ஞானத்தை வழங்குபவனே. 

190. ஸ்ரீ அனிருத்3தா4 நம:

நிரோத4மாள்ப ஜனரு இல்லத3அனிருத்34

ஶரணு நமோ ஸ்வேச்சா ப்ரவ்ருத்தியுள்ளவ ஸ்வதந்த்ர

ஹரிபரான்முக2ராத3 ஶ்ருதி விரோதி4 து3ஷ்டர

ஜரிவ ஶரணரிகெ3 ப்ரியகர அனிருத்34 

எதிர்க்கும் (வெல்லும்) மக்கள் யாரும் இல்லாதவனே ‘அனிருத்தனே உனக்கு என் நமஸ்காரங்கள். தன் இஷ்டப்படியே செயல்களை செய்யும் வழக்கம் கொண்டவனே. ஸ்வதந்த்ரனே. ஸ்ரீஹரிக்கு எதிரான, ஶ்ருதிக்கு எதிரான துஷ்டர்களை அழிப்பவனே. உன்னை சரணடைந்தவர்களுக்கு ப்ரியமானவனே. அனிருத்தனே. 

191. ஸ்ரீ ஸுரானந்தாய நம:

உக்குவ ஸுபூர்ண ஆனந்த3 ப்ரசுரஸுரானந்த3

பா3கி3ஶிர நமோ எம்பெ3 ஆனந்த3 ஒத3கி3ஸுவி

4க்தரிகெ3 ஶோப4னஞான அபரோக் ப்ரதா3

அகளங்க நித்யானந்தானுப4 ஸ்வரூப ஸ்வாமி 

நிரம்பி வழிவதான, பூர்ணமான ஆனந்தத்தைக் கொண்டவனே ‘ஸுரானந்தனே உனக்கு என் தலை வணங்கியதான நமஸ்காரங்கள். மகிழ்ச்சியைக் கொடுப்பாயாக. பக்தர்களுக்கு முக்தி  ஞானத்தை, அபரோக்‌ஷத்தை வழங்குபவனே. களங்கமற்ற நித்யானாந்த அனுபவத்தைக் கொண்ட ஸ்வரூபத்தைக் கொண்டவனே. ஸ்வாமியே.

***


Thursday, December 29, 2022

#68 - 186-187-188 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

186. ஸ்ரீ மஹேஶ்வாஸாய நம:

மஹாஶ்ரேஷ்ட 4னுர்த4மஹேஶ்வரநமோ எம்பெ3

மஹன் நாராயண 4னுஷ்பா4ர்க்க3 ராக4வகி3த்த

மஹேந்த்3 கொட்டித்33 4னுஸ்கொண்டி3 தபோத4னரிந்த3

மஹக்ஞான இச்சாசக்தியிம் ஸர்வதா3 க்ரியாவான் 

மிகச் சிறந்தவனே. தனுர்தரனே. ‘மஹேஶ்வரனே உனக்கு என் நமஸ்காரங்கள். நாராயணனே. தனுஸ் ஏந்திய பார்க்கவனே. ருத்ரதேவர், ஸ்ரீராமனுக்கு கொடுத்த தனுஸ்ஸினை கொண்டவனே. உன்னுடைய இச்சா சக்தியினால், அறிஞர்கள் மூலமாக ஞானத்தை கொடுப்பவனே. 

187. ஸ்ரீ மஹீப4ர்த்ரே நம:

3வாஶ்வாதிக3 ஸ்வாமிமஹீப4ர்த்ராநமோ எம்பெ3

கவாஶ்வாதி33ள் நின்னிந்த3 ஜன்ய ஶ்ரித நியம்ய

தஸ்மாத3ஶ்வா அஜாயந்த ஏகே சோ 4யாத3:’ 3

வோஹ ஜக்ஞிரே தஸ்மாத்எந்து3 ஸ்ருதி ஸ்ருஷ்டாதா4ரக 

பசு, குதிரைகளின் ஸ்வாமியே ‘மஹீபர்த்ரே உனக்கு என் நமஸ்காரங்கள். பசு, குதிரைகள் ஆகியவை உன்னிடமிருந்தே பிறக்கின்றன. அனைத்திற்கும் நீயே கதி. ‘தஸ்மாதஶ்வா...’ என்று ஸ்ருதி சொல்வதைப் போல, ஸ்ருஷ்டி முதலான அனைத்திற்கும் ஆதாரமானவனே. 

188. ஸ்ரீ ஸ்ரீனிவாஸாய நம:

ஸர்வாபீ4ஷ்டாக3ளாஶ்ரயஸ்ரீனிவாஸநமோ எம்பெ3

ஸர்வஸம்பத்கரி ஸ்ரீ வக்ஷோனிவாஸ ஸர்வேஶ்வர

ஸ்ரீ வத்ஸத4ரயெந்து3 ஸுப்ரக்யாதனாகி3ருவி

ஸர்வத்ர ஸ்ரீஸஹ இப்ப வ்யாப்த ஔதா3ர்யஸிந்து3 

அனைத்து அபீஷ்டங்களுக்கும் கதியானவனே. ‘ஸ்ரீனிவாஸனே உனக்கு என் நமஸ்காரங்கள். அனைத்து செல்வங்களையும் கொண்டவளாள ஸ்ரீலட்சுமிதேவி உன் மார்பில் வசிக்கிறாள். ஸர்வேஸ்வரனே. ஸ்ரீவத்ஸன் என்று நீ புகழ் பெற்றிருக்கிறாய். அனைத்து இடங்களிலும், ஸ்ரீலட்சுமிதேவி உடனேயே இருக்கிறாய். கருணைக் கடலே.

**