ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
186. ஸ்ரீ மஹேஶ்வாஸாய நம:
மஹாஶ்ரேஷ்ட த4னுர்த4ர ‘மஹேஶ்வர’ நமோ எம்பெ3
மஹன் நாராயண த4னுஷ்பா4ர்க்க3வ ராக4வகி3த்த
மஹேந்த்3ர கொட்டித்3த3 த4னுஸ்கொண்டி3 தபோத4னரிந்த3
மஹக்ஞான இச்சாசக்தியிம் ஸர்வதா3 க்ரியாவான்
மிகச் சிறந்தவனே. தனுர்தரனே. ‘மஹேஶ்வரனே’ உனக்கு என் நமஸ்காரங்கள். நாராயணனே.
தனுஸ் ஏந்திய பார்க்கவனே. ருத்ரதேவர், ஸ்ரீராமனுக்கு கொடுத்த தனுஸ்ஸினை கொண்டவனே. உன்னுடைய
இச்சா சக்தியினால், அறிஞர்கள் மூலமாக ஞானத்தை கொடுப்பவனே.
187. ஸ்ரீ மஹீப4ர்த்ரே நம:
க3வாஶ்வாதிக3ள ஸ்வாமி ‘மஹீப4ர்த்ரா’ நமோ எம்பெ3
கவாஶ்வாதி3க3ள் நின்னிந்த3 ஜன்ய ஆஶ்ரித நியம்ய
‘தஸ்மாத3ஶ்வா அஜாயந்த ஏகே சோ ப4யாத3த:’ க3
வோஹ ஜக்ஞிரே தஸ்மாத்’ எந்து3 ஸ்ருதி ஸ்ருஷ்டாதா4ரக
பசு, குதிரைகளின் ஸ்வாமியே ‘மஹீபர்த்ரே’ உனக்கு என்
நமஸ்காரங்கள். பசு, குதிரைகள் ஆகியவை உன்னிடமிருந்தே பிறக்கின்றன. அனைத்திற்கும் நீயே
கதி. ‘தஸ்மாதஶ்வா...’ என்று ஸ்ருதி சொல்வதைப்
போல, ஸ்ருஷ்டி முதலான அனைத்திற்கும் ஆதாரமானவனே.
188. ஸ்ரீ ஸ்ரீனிவாஸாய நம:
ஸர்வாபீ4ஷ்டாக3ளாஶ்ரய ‘ஸ்ரீனிவாஸ’ நமோ எம்பெ3
ஸர்வஸம்பத்கரி ஸ்ரீ வக்ஷோனிவாஸ ஸர்வேஶ்வர
ஸ்ரீ வத்ஸத4ரயெந்து3 ஸுப்ரக்யாதனாகி3ருவி
ஸர்வத்ர ஸ்ரீஸஹ இப்ப வ்யாப்த ஔதா3ர்யஸிந்து3
அனைத்து அபீஷ்டங்களுக்கும் கதியானவனே. ‘ஸ்ரீனிவாஸனே’ உனக்கு என்
நமஸ்காரங்கள். அனைத்து செல்வங்களையும் கொண்டவளாள ஸ்ரீலட்சுமிதேவி உன் மார்பில் வசிக்கிறாள்.
ஸர்வேஸ்வரனே. ஸ்ரீவத்ஸன் என்று நீ புகழ் பெற்றிருக்கிறாய். அனைத்து இடங்களிலும், ஸ்ரீலட்சுமிதேவி
உடனேயே இருக்கிறாய். கருணைக் கடலே.
**
ஸ்ரீகுருப்யோ நமஹா..!!🙏
ReplyDeleteஹரே ஸ்ரீநிவாசா..!!🙏
ReplyDelete